ஒய் திஸ் தலைவலி? உலகின் ஈடு இணையற்ற கவரேஜ் கொண்ட அல்டிமேட் நெட்வொர்க்... மனித மூளை! 6 லட்சம் நரம்புகள், 8 ஆயிரம் கோடி நியூரான்கள் எனப் பிரம்மாண்டமாக இயங்கும் ஒரு தனி உலகம் அது. சராசரியாக 1,500 கிராம் எடைகொண்ட இதில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டாலோ, ஒரு நுண்இழை சிதைந்தாலோ, பாதிப்பு வந்தாலோ... தலைவலிதான். மருத்துவம் வளர்வதற்கு முந்தைய காலக்கட்டத்தில், தலைவலி வந்தால், 'ஏதோ தெய்வக் குத்தம்’ என்றே நினைத்தார்கள். 'தலைக்குள் கடவுள் புகுந்துகொண்டு ஆட்டிப்படைப்பதால்தான் தலைவலி வருகிறது’ என்றே நம்பினார்கள். சுமேரியர்கள்தான் 'கடவுளுக்கு ஆக்கப்பூர்வமான நிறைய வேலைகள் இருக்கின்றன. தலைவலி வருவதற்கான முக்கியக் காரணம் மூளைக்குள் நிகழும் ஆரோக்கியக் குறைபாடுதான்’ என்று கண்டுபிடித்தார்கள். இதில் மகா ஆச்சர்யம் ஒன்று உண்டு. உடலில் எங்கு அடிபட்டாலும் வலியை முந்திக்கொண்டு முதலில் அதை உணரும் மூளைக்கு, தன் வலியை உணரத் தெரியாது. ''மூளைக்கு அடியில் இருக்கும் 'டிரை ஜெமினல் நியூரான்’கள்தான் தலைவலியை. . .
COMMENT(S): 7
தலைவலி குறித்த நல்ல தகவல்.. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம்..
ஒற்றை தலைவலிக்கு மருந்து உண்டாண்னு சொல்லியிருக்கலாம்
விகடன் படிக்கவில்லையென்றால் வரும் தலைவழி எந்த வகையை சார்ந்தது..?
ஒரு நல்ல தகவல் கட்டுரை. வாழ்த்துக்கள் திரு ஞான தேசிகன்.
- அ போ இருங்கோவேள், மருத்துவ சமூகவியலாளர், சங்கர நேத்ராலயா, சென்னை.
அடிக்கடி வரும் விருந்தினர்..அவ்வப்போது வரும் மின்சாரம்...அழகான சொல்லாட்சி!..
முதல்நிலை தலைவலியின் போது,மாத்திரை எடுக்காமல் குணாமாக என்ன செய்யலாம்,அந்த சமயங்களில் மாத்திரை போட்டால்தான் சரியாகிறது....
ஒய் திஸ் தலைவலி?