''பாலாஜி... பாலாஜி..'' டாக்டர் : ''மருந்தை ஏன் ரோட்டுல தடவுறீங்க?'' நோயாளி : ''நீங்கதானே டாக்டர் சொன்னீங்க... அடிபட்ட இடத்தில் மருந்தைத் தடவணும்னு.'' - இப்படி டாக்டர் ஜோக்ஸ் நிறையவே படித்துச் சிரித்திருப்போம். ஆனால், நிஜமாகவே டாக்டர் - நோயாளிகள் இடையே நடைபெறும் சில உண்மைச் சம்பவங்களில் இதைவிடவும் சுவாரசியமான நகைச்சுவை ததும்பும். ''மறதி நோய் எப்படி எல்லாம் மனுஷனை ஆட்டிப்படைக்குது பாருங்க'' என்று சொல்ல ஆரம்பித்தார் முதியோர் நல மருத்துவரான டாக்டர் வி.எஸ். நடராஜன். ''மறதி நோயால் அவஸ்தைப்படுகிறவர் ராமகிருஷ்ணன். அவருக்கு 70 வயசாகிறது. ஒருநாள் சாயங்காலம் நாலு மணி இருக்கும். என் கிளினிக்குக்குப் பதற்றத்தோடு வந்தார். 'என் மனைவி இங்கே வந்தாளா டாக்டர்? ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் கிளம்பினோம். ஆனா, திடீர்னு காணோம்...’ என்றார். அவரோட மனைவிக்கு வயது 65 வயதுக்கு மேல். அந்த அம்மாவின் செல் நம்பரும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. சொந்தம், பந்தம் என்று ராமகிருஷ்ணன் தந்த. . .
COMMENT(S):