உங்கள் கண்ணுக்கு எதிரே விபத்து நடந்தால்... நெடுஞ்சாலைகளில் பயணிக்க நேரும்போது பலரும் பலவிதமான சாலை விபத்துகளைப் பார்த்து மனம் பதறி இருப்போம். ஓடிச் சென்று உதவ வேண்டும் என்று பலருக்கும் தோன்றும். ஆனால், 'எப்படி உதவி செய்வது?’ என்பதுதான் முதல் தடையாக வந்து நிற்கும். விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு எப்படி உதவுவது? தமிழ்நாடு தீ மற்றும் மீட்புத் துறையின் சென்னை வட மண்டலத் துணை இயக்குநர் எஸ்.விஜயசேகரிடம் பேசினோம். ''ஒரு விபத்தை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், பதற்றப்படாமல் நிதானமாகச் செயல்பட வேண்டும். முதலில், காவல், மருத்துவம், தீயணைப்புத் துறைகளுக்குத் தகவல் சொல்லுங்கள். 108 எண், ஆம்புலன்ஸ் சேவைக்கானது. 100, காவல் துறைக்கான எண். 101, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கானது. அடுத்து முதல் உதவி. விபத்துக்கு உள்ளான வாகனத்தின் என்ஜின் இயங்கிக்கொண்டு இருந்தால், அதை முதலில் நிறுத்த வேண்டும். விபத்தின் காரணமாகச் சாலையில் பெட்ரோல் அல்லது டீசல் ஓடிக்கொண்டு இருந்தால், மிகுந்த எச்சரிக்கை தேவை.. . .
வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.
இந்தத் தவறைச் செய்பவர்களை தினமும் ஆயிரக் கணக்கில் பிடித்து தண்டிப்பதுடன் அது பற்றிய செய்திகளையும் வெளியிட்டு பயமுறுத்தினால் தவிர இந்தத் தவறைத் தடுக்க முடியாது என்றே தோன்றுகிறது.
நம் நாட்டு மக்கள் தனக்குத்தானே அறியாமை( காவல் நிலையம், நீதி மன்றம் செல்லவேண்டும் ) என்ற வட்டத்தைப்போட்டுக்கொண்டு சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சுற்றி நின்று வேடிக்கைதான் பார்க்கிறோமே தவிர முதல் உதவி செய்ய முன்வருவதில்லை, இந்த தவறான போக்கு மாறவேண்டும். விழிப்புணர்வு கட்டுரைக்கு நன்றி
COMMENT(S): 6
'முதல் உதவி' என்ற விஷயத்தில் நாம் பயணிக்க வேண்டிய தூரம் மிக மிக அதிகம்.ஆனால் அதற்கு அச்சாரமாய் அமைந்துள்ளது இந்த்க் கட்டுரை. டா.வி க்கு நன்றிகள்..!!
வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.
இந்தத் தவறைச் செய்பவர்களை தினமும் ஆயிரக் கணக்கில் பிடித்து தண்டிப்பதுடன் அது பற்றிய செய்திகளையும் வெளியிட்டு பயமுறுத்தினால் தவிர இந்தத் தவறைத் தடுக்க முடியாது என்றே தோன்றுகிறது.
பன்னிரு பாதைகளும் இலக்கை நகர்த்தும் வெளிச்சக் கீற்றுகள்...
இரவில் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்கின் ஒளியின் அளவைக்குறைப்பதை நூறில் ஒருத்தர் தான் கவனத்தில் வைக்கின்றனர்.