மனதுக்குள் கேட்கும் மாயக்குரல்!'யாரோ ஒரு மனிதன் பேருந்தின் பக்கத்து இருக்கையில் தனக்குத் தானே தனது நியாயங்களைச் சொல்லிக்கொண்டு வருகிறான் அது என்னை மிகவும் அச்சுறுத்துகிறது’ - மனுஷ்யபுத்திரன் நாம் அவர்களை அவ்வப்போது, ஆங்காங்கே பார்த்திருக்கிறோம். பேருந்துக்காகக் காத்திருக்கும் தருணங்களிலோ, தேநீர்க் கடையிலோ, பக்கத்து வீட்டிலோ, நடைபாதையிலோ எதிர்கொண்டிருக்கலாம். 'பாவம்...’ என்று பரிதாபப்பட்டுக்கொண்டோ அல்லது 'பைத்தியம்...’ என்று பரிகசித்துக்கொண்டோ கடந்து போய் இருப்போம். சமயங்களில் மிகத் தீவிரமாகத் தனக்குள் பேசிக்கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்தால் பயமாகவும் இருக்கும். 'ஏன் இப்படிச் சிலர் தனக்குத்தானே பேசிக்கொள்கிறார்கள்? இந்தப் பிரச்னை ஏன் வருகிறது? எல்லோருக்கும் வருமா?’ என்ற கேள்விகள் தோன்றலாம். ''தனக்குத்தானே பேசிக்கொள்வதை 'ஆடிட்டரி ஹாலுசினேஷன்’(Auditory Halucination) என்று சொல்வோம். மனச்சிதைவின் ஓர் அறிகுறி இது. பொதுவாக மனநலப் பிரச்னை மனம் சார்ந்து மட்டுமின்றி, உடலியல் சார்ந்ததாகவும், சமூகக் காரணங்களினாலும்கூட வரும். 'ஹாலுசினேஷன்’ பிரச்னை முழுக்க முழுக்க உடலியல் சார்ந்தது. மூளையில் 'டோபமைன்’ என்கிற நியூரோடிரான்ஸ்மீட்டரின் (Neurotransmitter). . .
COMMENT(S):