1. விகடன் பிரசுரங்களை பெறுவது எப்படி?
பிரசுர புத்தகம் தங்களுக்கு வந்து சேர வேண்டியது உள்நாடா? அல்லது வெளிநாடா என்பதை முதலில் தேர்வு செய்ய வேண்டும்.
தேர்வு செய்தவுடன் வரும் பக்கத்தில் பிரிவுகளின் கீழ் தெரியும் புத்தகங்களை தேர்வு செய்ய Add to Cart-ஐ க்ளிக் செய்யவும். இதேபோல் பிற விகடன் பிரசுரங்களையும் சேமிக்கலாம். நீங்கள் சேமிக்கும் புத்தகம் வலது பக்கம் லிஸ்ட்டில் தெரியும். அதில் அழி உபயோகப்படுத்தி நீக்கலாம்.
புத்தகங்களை தேர்வு செய்தபின் Checkout க்ளிக் செய்யவும். அடுத்து வரும் பக்கத்தில் ஒன்றுக்கு மேல் புத்தகம் தேவை என்றால், Qty உங்களுக்கு தேவையான எண்ணிக்கை இட்டுக்கொள்ளலாம். பின்னர் Proceed to Check out பொத்தானை சொடுக்கவும்.
அடுத்து வரும் பக்கத்தில் Billing Address, Shipping Address-ஐ முழுமையாக பூர்த்தி செய்யவும். அதே பக்கதில் கீழே உள்ள பணம் கட்டும் கேட்வே (payment Gateway)வை தேர்வு செய்து கார்டு விவரங்களை தரவும். பணம் கட்டி முடித்தவுடன், உங்கள் ஆர்டர் எண் தெரியும். இதே விவரம் உங்களுக்கு ஈ&மெயில் மூலமாகவும் தெரிவிக்கப்படும்.
2. எவ்வழியில் பணம் செலுத்துவது..?
பணம் செலுத்துவதற்கு Credit Cards, Debit Cards, NetBanking, Paypal வசதிகள் உள்ளன.
3. எப்போது ஆர்டர் செய்த புத்தகங்கள் கிடைக்கும்?
இந்திய வாசகர்களுக்கு 3 வாரத்திற்குள்ளும், வெளிநாட்டு வாசகர்களுக்கு 4 வாரத்திற்குள்ளும் ஆர்டர் செய்த விகடன் பிரசுர புத்தகங்கள் கிடைக்கும்.
4. விகடன் பிரசுர புத்தகங்களைப் பெற வேறெந்த முறையில் பணம் கட்ட முடியும்?
இந்தியாவுக்குள் புத்தகங்களை பதிவுத் தபால்/கூரியர் மூலம் பெற விரும்புவோர், புத்தகங்களின் விலையுடன்- ஒரு புத்தகம் என்றால் ரூபாய் 20-ம், கூடுதல் புத்தகம் ஒவ்வொன்றுக்கும் கூடுதலாக ரூபாய் 10-ம் சேர்த்து ‘விகடன் மீடியா சர்வீஸஸ்’ என்ற பெயருக்கு Demand Draft/ அல்லது Money order ஆகியவற்றை பின்வரும் முகவரிக்கு அனுப்பலாம்.
VIKATAN MEDIA SERVICES,
757, ANNA SALAI,
CHENNAI - 600 002
TAMILNADU
INDIA
TELEPHONE: 044 - 42634283/ 42634284
வெளிநாடுகளில் இருந்து புத்தகங்களை வாங்க விரும்புவோர் ஆன்லைனில் குறிப்பிட்டுள்ள புத்தகங்களின் விலைக்கு Demand Draft எடுத்து மேலே குறிப்பிட்டுள்ள VIKATAN MEDIA SERVICES முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
* காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. * புத்தகங்களை வி.பி.பி. மூலம் அனுப்ப இயலாது. பதிவுத் தபால்/ கூரியரில் மட்டுமே அனுப்பி வைக்கப்படும்.
5. தொடர்புக்கு:
பேமெண்ட்ஸ் (Payments) தொடர்பான கேள்விகளுக்கு: payments@vikatan.com
விகடன் பிரசுரம் தொடர்பான கேள்விகளுக்கு: pubonline@vikatan.com |