சென்டிமென்ட்டில் சிக்கியதா எரிவாயு தகன மேடை? ''கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வேலூர் மாநகராட்சியில் கட்டப்பட்ட எரிவாயு தகன மேடை, பணி முடிந்தும் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. தற்போதைய ஆட்சியாளர்களும் தகன மேடையைத் திறக்காமல் காலம் கடத்திக்கொண்டே இருக்கிறார்கள்'' - ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044- 66808002) இப்படி ஒரு பதிவு. கடந்த முறையும் இப்போதும் வேலூர் மாநகராட்சி கவுன்சிலராக இருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சீனிவாச காந்தியிடம் விசாரித்தோம். ''ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே எரிவாயு தகன மேடை அமைக்கத் தீர்மானம் போடப்பட்டது. அதன்படி ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓர் ஆண்டுக்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை தகன மேடை திறக்கப்படவே இல்லை. இதுகுறித்து மாமன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கிறேன். கடந்த கூட்டத் தில் நான் கேள்வி எழுப்பியபோது, 'இன்னும் 10 நாட் களில் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் முதல்வர் திறந்துவைக்க இருக்கிறார்’ என்று. . .
"தகன மேடையைத் திறந்துவைப்பது சென்டிமென்டாக நல்லது இல்லை என்று பலரும் சொல்வதைக் கேட்டு காலம் தாழ்த்துகிறார்களோ என்று தோன்றுகிறது. "---> கவலைப்படும் காங்கிரஸ் கவுன்சிலர் சோனியாவையோ கருணாநிதியையோ வைத்து அதைச் செய்யலாம். பொருத்தமாகவும் இருக்கும்.
COMMENT(S): 3
உயிரோடு இருக்கிறவர்களிடம் தான் அரசியல் செய்கிறார்கள் என்றல், செத்தவர்களிடமும் இந்த பாழாய் போன அரசியலை செய்கிறார்களே...
"தகன மேடையைத் திறந்துவைப்பது சென்டிமென்டாக நல்லது இல்லை என்று பலரும் சொல்வதைக் கேட்டு காலம் தாழ்த்துகிறார்களோ என்று தோன்றுகிறது. "---> கவலைப்படும் காங்கிரஸ் கவுன்சிலர் சோனியாவையோ கருணாநிதியையோ வைத்து அதைச் செய்யலாம். பொருத்தமாகவும் இருக்கும்.
தகன மேடையே தகனத்துக்குள்ளான பரிதாபம்