ஏஞ்சலுக்கு அரளி... விக்னேஷுக்குத் தண்டவாளம்! வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் உள்ள தம்பிக்கொள்ளை கிராமத் தில் வசித்தவர்கள் விக்னேஷ் மற்றும் ஏஞ்சல். விக்னேஷ§க்கு 18 வயது. ஏஞ்சலுக்கு வயது 17. இரண்டும்கெட்டான் வயதில் எல்லோருக்கும் வரும் காதல் இவர்களுக்கும் வர, பெற்றோர் கண்டித்தனர். 'வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வது; இல்லை எனில் ஒன்றாகச் சாவது’ என்று இருவரும் சேர் ந்து முடிவு எடுத்த பிறகு நடந்ததுதான் நெஞ்சை உலுக்கும் சோகம்! தம்பிக்கொள்ளை கிராமத்துக்குச் சென்றோம். ஏஞ்சல் வீட்டில் எதுவும் பேச மறுத்து விட்டனர். மகன் இறந்த துக்கத்தில் இருந்து மீளாமல் அழுது கொண்டே இருந்த விக்னேஷின் அம்மாவான கோவிந்தம்மாள், ''நாங்க கூலித்தொழிலாளிங்க. எங்களுக்கு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. பொண்ணுதான் பெரியவ. லெதர் ஃபேக்டரியில வேலை பார்க்கிறா. கடைசிப் பையன் பக்கத்துல இருக்கிற ஸ்கூல்ல எட்டாம் வகுப்புப் படிக்கிறான். ரெண்டாவதாப் பொறந்தவன்தான் விக்னேஷ். மூணு வருஷமா ஒழுங்காத்தான் வேலைக்குப் போய்கிட்டு இருந்தான். அரசல். . .
அந்தோ பரிதாபம். இது பப்பி லவ் வகையறாவாகவே தெரிகிறது. செத்துப் போகுமளவிற்கு இல்லைன்னு நாமல்லாம் சொல்லிட்டுப் போயிடுவோம். ஆனால், அவர்கள் மனதில் மிகத் தீவிரமான காதல். -- எங்கேப்பா சந்திரா, டாஸ்மாக்கை குறை சொல்ல வரலையா? ஓ, ஒரு வேளை எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லைன்னு சொல்லிட்டதால அமைதியா ஒடிட்டாரா?
இது காதல் இல்லை. ஒரு வகை இனக்கவர்ச்சி. அது சற்று வரம்பு மீறி சென்றிருக்கிறது. இதில் பெற்றவர்களையும் குறை சொல்லமுடியாது. கூலித்தொழிலாளி என்ற போதும் சட்ட வரம்பையும் தாண்டி இரண்டுக்கும் மேல் பெற்றிருப்பதை தவிர. குழந்தைகளுக்கு இருக்கும் குடும்ப நிலைக்கு ஏற்றவாறு ஆசைகளையும், அபிலாஷைகளையும் வளர்த்துக்கொள்ள, கட்டுப்படுத்துக்கொள்ள செய்வதும் பெற்றோர்களின் கடமையாகும்.
பெற்றோரின் மனநிலையில் இருந்து யோசிக்கும் போது மிக மிக வேதணையாக இருக்கிறது... நடைமுறைக்கு பொருந்தாத திரைப்படங்களால் தான் இது போண்ற அவலங்கள் ஏற்படுகிறது... கேட்டால் "காதல் காவியம்" என்பார்கள்...
இது போன்ற தற்கொலைகள் மேலை நாடுகளிலோ அல்லது கீழை நாடுகளிலோ உண்டா என்று அறிந்த்வர்கள், அங்கு வாழ்பவர்கள் கூறுங்களேன். இல்லை என்றே எண்ணுகிறேன்.இருந்தால் கீழே கூறியது யாவும் தவறாகும்.
இதன் முதல் காரணம் நமது கலாச்சார கட்டுப்பாடு, பெற்றோர் தங்கள் குழந்தைகளை நம்பாதது, அவர்களுடன் மனம் விட்டு தோழமையுடன் பழகாதது. ஒரு வேளை இதனை இன்றைய மிடில் க்ளாஸ் - கை மீறியதால், காலத்தின் கட்டாயத்தால் - கடை பிடிக்கலாம். ஆனால் இவர்களை போன்ற ஏழைகள் (அல்லது படிப்பறிவை பெறாதவர்கள்) இன்னமும் அந்த நிலையை எட்டவில்லை. குடும்ப பெருமை, ஊரார் உறவினர்களின் பேச்சு என்று மற்றவர்களுக்காக தங்களை வருத்தி கொள்ளும் இவர்கள்தான் காரணம். இது போன்ற 'கண்றாவி' சீரியல்கள், படங்கள் (இதனை விட மோசமானவை) மற்ற நாடுகளிலும் இல்லாமலா இருக்கிறது? மீடியாக்களின் மீது பாயும் பலர் இதனை ஏன் நினைப்பதில்லை? ஒரு வேளை இவர்களின் பள்ளிகளில், சமூக கூட்டங்களில் கவுன்சிலிங் இருந்தால் - சாதி, பணம், குடும்ப கெளரவம் - என்பது பெரிதாக படாதோ? அத்தகைய வகையில் ஏன் இந்த பெற்றோர்கள் இந்த வயதினர் தங்களை அணுக இயலாத வகையில் ஒரு வேலி போட்டு கொள்கிறார்கள்? பெண் வயதுக்கு வந்ததும் மேடை போட்டு அறிமுகப்படுத்தும் இவர்கள் ஏன் அவளுக்கு அந்த வயதில் வரும் காதலை (அது எந்த வகையாக இருப்பினும்) பற்றி ஆலோசிக்க இடம் தர மறுக்கிறார்கள். அது பெண்ணுக்கே கடினம் எனில் ஆணுக்கு கேட்கவே வேண்டாம். அந்த ஆலோசனை இல்லாமல்தான் இவர்கள் சினிமா, புத்தகங்கள், நண்பர்கள் என்று சென்று தவறான முடிவெடுக்கிறார்கள். இதற்கு மீடியாவோ, சினிமாவோ சின்ன திரையோ காரணமில்லை. சின்ன திரை இல்லை எனில் புத்தகம் - ரோமியோ-ஜூலியட், அம்பிகாபதி-அமரவாதி என்று காவியங்களை குற்றம் சாட்டுவார்கள்.
தேவை - பெற்றோர் அரவணைப்பும் ஆலோசனையும். கூட்டு குடும்பங்கள் அதற்கு வழி வகுத்தன. இன்று அதுவும் இல்லை என்றாகிவிட்டது.
இன்று அழும் இந்த பெண், தன் முடிவினை அதட்டாமல் அன்றே - அல்லது மறுநாளே - சொல்லி இருக்கலாமே. தன் மகனின் குணம் அறியாதவரா அவர் - அதுவும் ஒரு தாய்?
அந்த பெண்ணின் வீட்டில் என்ன சொன்னார்களோ, செய்தார்களோ - இது போன்ற ஒரு முடிவினை எடுக்க! அந்த பெற்றோர்களை முதலில் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்ய வேண்டும். பிறகு இதனை மீடியாக்கள் பிரபலப்படுத்த வேண்டும். அத்துடன் இளம் வயது சிறார்கள் - இப்படிபட்ட நிலைக்கு தள்ளப்பட்டால் - ஆலோசனைக்கு ஹாட் லைன் -கள் அமைக்கப்படலாம்.
இதனை அரசோ, என்,ஜி,ஓ-க்களோ (எத்தனை பணம் வருகிறது வெளிநாட்டில் இருந்து அதில் கொள்ளை அடித்தது போக ஒரு பகுதி இதற்கு செலவு செய்யலாமே) செய்யலாமே?
அதனை, அத்தகைய சேவையை இதே மீடியாக்களின் மூலம் எல்லோருக்கும் அறிவிக்கலாமே?
போய்த் தொலையட்டும். வாழ்க்கையில் (முதலில் அப்படி என்றால் என்ன என்றே இன்னும் இந்த ரெண்டும்கெட்டான்களுக்கு தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை) போராடி சாதிக்க துணிவில்லாத இருவரும் இருந்து என்ன செய்யப்போகிறார்கள். இரு குடும்பத்துக்கும் அதிகமான துன்பத்தைத்தான் தேடித்தந்திருப்பார்களோ என்னமோ.
முதல்ல காதல்னா என்னன்னு சினிமாவோ, டிவியோ, பத்திரிகையோ என்ன சொல்லுதுன்னு பாருங்க... எல்லாமே உடம்பைச் சுற்றியே வருகிறது.... காமம் வேறு.. காதல் வேறுன்னு புரியாத வயசுலேயே இதுகள்ளாம் காதல்னு உயிர விடுறதைப் பார்த்தா, இந்த மீடியாக்களின் மேலும், அவற்றின் பின்னுள்ள வியாபாரிகளின் மீதும் தான் கோபம் கொப்புளிக்கிறது. சமூகப் பிரக்ஞையில்லா சாக்கடையில் உழலும் இவைகள் எல்லாம் எப்படியோ மீடியாவுக்குள் வந்து விடுகின்றன...
COMMENT(S): 19
பையன் ஃபோட்டோ மட்டும் உள்ளது. ஓடிப் போன பொண்ணின் படம் மிஸ்ஸிங். ஏனோ? பாவமன்னிப்பு உண்டா?

மைனா என்ற மாபெரும்(மண்ணாங்கட்டி) திரைபடத்தின் விளைவு
இன்றைய சினிமாக்களை விட வீட்டிலேயே இருக்கும் 24 மணி நேர இடியட் பாக்ஸ் களால் தான் இந்த அவலம்,இதற்கு உடனடியாக ஒரு கடிவாளம் தேவை,
தேவை இல்லாத செய்தி....
அடப்பாவிகளா...
சீனு.
11 12 2011 ஜீனியர் விகடன் இதழில் கொழுப்பைக் கரைக்கும் ஹார்மேன் சிகிச்சை தி.நகரில் உள்ள மருத்துவ மனை முகவரி தேவை தெரிவித்தால் நலம்
அவசரமாக் காதலிச்சாங்க... அவசரமா முடிவைத் தேடிக்கிட்டாங்க...
குழந்தை தொழிலாளி !!!!
என்னத்தச்சொல்ல??
மின் தடை இல்லமல் அவன் ஒருவேளை பிழச்சிருந்தா அநத ப்பொண்ணு வீட்டிலேயே பேசரபேச்சிலேயே அவன் செத்திருப்பான்.
கன்ராவி வாழவேன்டிய வயசுலே இதெல்லாம் ஏன் தான் இப்படி செத்து போவுதுங்கலொ
பாழாப்போன 'மின் தடை'யினால் ஒரு உயிர் அநியாயமாப்போயிடுச்சு பாருங்க... இதுக்கு அரசுதான் பதில்சொல்லவேண்டும்... சரி, இதுவாவது அந்தப்பையனாக எடுத்த முடிவு... நோயாளிகளின் கதியை நினைத்துப்பாருங்கள்...