• சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி
  • பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம்
  • இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி
  • கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல்
  • வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை
  • ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல்
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
26 May, 2013
திகில் கொலைகள்... சிக்கிய 'ஸ்டீல்' ரவி
திகில் கொலைகள்... சிக்கிய 'ஸ்டீல்' ரவி தமிழ்நாடு முழுவதும் கொள்ளையும் வழிப்பறியும் அதிகரித்துவரும் நிலையில், அந்த அவப்பெயரை நீக்குவதற்காக அதிரடி நடவடிக்கையில் இறங்கி யுள்ளது காவல்துறை. இதில் ஒரு கட்டமாக ஈரோ ட்டைச் சேர்ந்த ரவுடி 'ஸ்டீல்’ ரவியும் அவருடைய கூட்டாளிகள் சிலரும் கைது செய்யப்பட்டு உள் ளனர். யார் இந்த 'ஸ்டீல்’ ரவி? எதற்காக இப்போது கைது செய்யப்பட்டார்?  போலீஸ் வட்டாரத்தில் பேசினோம். ''90-களில் ஈரோட்டில் சில குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவி, தன் தந்தை நடத்தி வந்த இரும்புக் கடையைக் கவனித்து வந்ததால், 'ஸ்டீல்’ ரவி என்று அழைக்கப்பட்டான். ஈரோட்டைச் சேர்ந்த பிரபலதாதா தம்பா, (இயக்குநர் ஷங்கர் இவருக்குத்தான் தன் முதல் படத்தை இயக்குவதாக இருந்தது) 91-ம் ஆண்டு சினிமா எடுக்கச் சென்னை வந்தபோது, தொழில் போட்டியின் காரணமாக அவரைக் கொடூரமாகக் கொலை செய்தார் ரவி. அப்போது, ரவிக்கு ஆதரவாக இருந்தவர், அ.தி.மு.க-வின் மாஜி ஒருவர். அந்தக் கொலை. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 22

பார்த்திபன் கொலைமுயற்சி வழக்கு, ஒரு வழிப்பறி வழக்கு, ராஜவேலைக் கொன்ற வழக்கு, போலீஸாரை வெட்டிய வழக்கு போன்றவற்றில் ரவிக்கு 37 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது.
இதேநேரம் உயர் நீதி மன்றத்தில் தன்னுடைய தண்டனையை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில், 11 ஆண்டுகளாகத் தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
- இவரை விடுதலை செய்த நீதிபதியின் வீட்டில் இவரை வேலைக்கு வைத்திருக்க வேண்டும். எதற்காக திரும்பவும் வெளியில் நடமாட விடவேண்டும்.

மனித உரிமை மாமேதைகளே, ஸ்டீல் ரவி உங்களை தான் நம்பியிருக்கிறார்.. வேகமாக வாருங்கள்,தியாகி ஸ்டீல் ரவியை காப்பாற்றுங்கள்...

திருந்தி வாழ நினைப்பதாகத்தானே சொல்கிறார். அதுக்கென்ன ஒரு 99 வருஷத்துக்கு தண்டனை கொடுத்து சிறையிலேயே வச்சிருங்க. இவரும் திருந்தி, அங்க இவர மாதிரியே இருக்கும் மற்றவர்களுக்கும் (திருந்துவது எப்படி என்று) பாடம் எடுத்து காலத்தைக் கழிக்கலாம்.

1991-ல் பிரபல ரௌடி தம்பா இயக்குநர் சங்கரை வைத்து படம் எடுக்க சென்னை வந்தபோது அ.தி.மு.க.மாஜி உதவியுடன் அவரை ரவி கொலை செய்தான்...... திருட்டு, சினிமா, அரசியல், ஆட்சி எல்லாம் எப்படி பின்னிப்பிணைந்து கிடக்கின்றன தமிழ்நாட்டில் !!!!

ஒரு என்கௌன்டெர் உடனே தேவை

இவனை எதற்காக காலில் சுட்டுப் பிடிக்க வேண்டும்? வெட்டவந்தவனை சுட்டுத்தள்ளி இருந்தால் சிறமமில்லாமல் போயிருக்குமே!!!

என்னைய்யா இது, புரியலயே? திரும்பி திரும்பி வந்து கொலை செய்யரான் இந்த ரவி அவனுக்கு மரணதண்டனை கிடையாதா?

ச்சுட்டேபுடுவேன்.....

உயர்நீதிமன்றத்தில் இவரது தண்டனை குறைக்கப்பட்டது..... இதனால்தான் சொல்கிறோம், என்கௌண்டர் அவசியம் என்று. அதுசரி, தண்டனை குறைக்க எவ்வளவு செலவு செய்தாராம்? அந்த கேசில் யார் அவரது வக்கீல், நீதிபதி என்ற விபரங்கள் இல்லையே.

''இவை எல்லாமே போலீஸின் பொய் வழக்குகள். திருந்தி வாழவேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் மீது வேண்டும் என்றே பொய் வழக்குகளை பதிவு செய்கின்றனர்'' என்கிறது.
- திருந்தி வாழவேண்டும் என்றால், சிறையில் வாழட்டுமே. யார் வேண்டாம்கிறது.
செஞ்ச கொலைகளுக்கு யார் தண்டனை அனுபவிக்கிற்து.
இப்படியே விட்டா எல்லாரும் கொலை கொள்ளைன்னு நல்லா சம்பாதிச்சிட்டு திருந்தி வாழ போகிறேன்னு சொல்லிட்டு மஜாவா வாழலாம் போலிருக்கு.

ஒரு என்கௌன்டெர் உடன் தேவை.

பீகாரில் இருந்து வந்திருந்தால் இன்னேரம் என்கவுன்டர்

இவனை என்கவுண்டரில் பொட்ட்டுத்தள்ளாமல், பேங்க்க் கொள்ளை செய்த ஐந்து சிறுவர்களை போட்டுத்தளியது, போலீஸும் ஒழுங்கா இல்லை என தெறிகிரது. பொன வாரம் திண்டுக்கல்லில் ஒரு கொலைகாரன் கொல்லப்பட்டான். யாரும் போலீசை திட்டாவிலை.

இது போல் தண்டனை கொடுத்து இதுகளை ஜாமீனில் வெளியே விட்டு மீண்டும் குற்றமிழைக்க செய்வதற்கு பதிலாக என்கவுன்டரில் போடுவது எவ்வளவோ மேல்.

"சிறையில் இருந்த போது ரவிக்கு, தமிழ்நாடு முழுக்க உள்ள தாதாக்களுடன் தொடர்பு ஏற்படவே, தனது சாம்ராஜ்யத்தை விரித்தார்."யப்பா! மனித உரிமை மகான்களே! இப்போ தெரியுதா ஏன் என்கவுன்டரை சப்போர்ட் செய்றோம்னு!

இந்தியன் தாத்தா மாதிரி யாராவது இவனை களை எடுத்தால்...! சமீபத்தில் "இனி ஒரு சுதந்திரம்" என்ற படத்தை பார்த்தேன். 25 வருடங்களுக்கு முன்னால் வெளியான படம். ஆனாலும் அதில் சொல்லப்படும் பிரச்சனைகள் கூடியிருக்கிறதே ஒழிய, ஒன்றுக்கும் ஒரு விடை இன்றும் கிடைத்தபாடில்லை. இந்த மாதிரி மிருகங்களை நியாய வழியில் அடக்குவதற்குள், நாம் போய் சேர்ந்து விடுவோம். போலிசுக்கு மனசாட்சி வந்து ஒரே ஒரு தோட்டாவை செலவழித்தால் எத்தனை நன்மை :)

திருச்சிக்காரரே... இருந்த ஒரே ஒரு புல்லட்டை காலில் சுட்டு செலவழிச்சுட்டாங்கண்ணா....

போலிஸ் மிகவும் வேகமாகத்தான் செயல் படுகிரது, அட போங்கப்பா..

இவனை என்கொளன்டரில் போட்டு தள்ளாமல்...இன்னும் வழக்கு விசாரணை என்று

அட என்னப்பா... கோர்ட், வழக்கு, பாதுகாப்பு, ஜெயில்னு செலவழிச்சு காலம் கடத்துறீங்க... ஒரு புல்லட் போதாதா?

இவ்வளவு ஆதாரமிருந்தும் இன்னமும் கோர்ட்டுக் இழுத்தலைவதைப் பார்த்தால் 'மேலிட' ஆதரவு இருக்கும் போலிருக்கிறதே...

மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், ''இப்போது, ரவி மீது இருக்கும் இரண்டு வழக்குகளும் மிகவும் வலிமையானவை. ....அது எவ்வளவு கிலோ.....
ரொம்ப பேசாதீர்..நாளய மந்திரி அவர்

மனித உரிமைக் கழகங்கள் தலையிட்டு ரவிக்கு விடுதலை வாங்கித் தருவார்கள்.

Displaying 1 - 22 of 22
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 21 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook