'விபத்து' பணிமனை! 'பேருந்துகளால் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுவதைக் கேள்விப் பட்டு இருப்பீர்கள். ஆனால், செங்கத்தில் அரசுப் பேருந்துகளுக்கு சாலையில் செல் லும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. அதைத் தடு க்க நடவடிக்கை எடுங்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) பதறி இருந்தார் ஒருவர். செங்கம் பணிமனையில் சில பணியாளர்களிடம் பேசினோம். ''எங்கள் பணிமனை புதுச்சேரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. 1996-ல் இருந்து ஒரு வாடகை வீட்டில்தான் பணிமனைக்கான அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கே பேருந்துகளை நிறுத்த இடம் இல்லாததால், சாலை ஓரத்தில்தான் நிறுத்தி வைக்கிறோம். இது, தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதிவேகத்தில் வரும் வாகனங்கள் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பேருந்துகள் மீது மோதி, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எங்கள் டிப்போ வேலூர் மண்டலத்தில் இருந்து திருவண்ணாமலை மண்டலமாக மாறியதும் ஒன்பது பேருந்துகள் நிறுத்திய இடத்தில் இப்போது 20 பேருந்துகள் நிறுத்த வேண்டி உள்ளது. இரவில் சாலை. . .
COMMENT(S):