கிடைத்தது விடுதலை... தொடர்கிறது போராட்டம்! 'எங்களை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்று கடந்த 15-ம் தேதி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் படிப்படியாக வலு பெற்று உள்ளது. செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 30 இலங்கைத் தமிழர்களும் மூன்று நைஜீரியக் கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். முகாமில் இருக்கும் இலங்கை அகதிகள், தங்களை விடுவிக்கக்கோரி கடந்த 15-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பது குறித்து கடந்த இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். உண்ணாவிரதம் இருப்பவர்களின் நிலை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே செல்வதால், அவர்களில் பலர் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். வைகோ, தா.பாண்டியன், சீமான், வேல்முருகன் என்று பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் மருத்துவமனைக்குச் சென்று ஈழத்தமிழர்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லி வந்தனர். இந்த நிலையில், செங்கல்பட்டு முகாமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதற்காக மல்லை சத்யா, தியாகு, பேராசிரியர் தீரன் உள்ளிட்டவர்களோடு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர் களும். . .
COMMENT(S): 5
இவர்களை ஏன் திரும்ப இலங்கை விமானத்தில் ஏற்றி அனுப்ப கூடாது.அவிங்க கூட இந்த சீமான்களையும், சுபவீக்களையும் பார்சல் செய்ய வேண்டும்.
சிவா - மிக்க நன்றி.உங்களுக்கு இருக்குற மூளை எல்லாத்துக்கும் இருந்தால் நன்று!
செங்கல்பட்டு தாசில்தார் இளங்கோ, முகாமில் இருக்கும் 30 பேரில் ஏழு பேர் மீது வழக்குகள் இல்லை. அப்புறம் ஏன் சிறையில் வைத்து இருந்தீர்கள்?
அகதி முகாம் என்ற பெயரில் இலஙகை தமிழர்களை சிறை வைத்ததே தவறு!
ஜெயலிதாவுக்கும் கருணாநிதிக்கும் வித்தியாசமில்லை என்பதை தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
தமிகமே தமிழர்களுக்கு எதிராக இருக்கிரது. முதலில் அவர்களை விடுதலை செய்து நம்பிக்கை வாழ்க்கை கொடுக்கட்டும்.