வீடு கட்ட அனுமதி மறுக்குறாங்க! ''கொடைக்கானலில் யார் யாரோ வந்து வீடு கட்டு கிறார்கள். ஆனால், மண்ணின் மைந்தர்களான நாங்கள் வீடு கட்ட முயன்றால், சட்டங்களைக் காட்டி சிக்கல் உண்டு பண்ணுகிறார்கள் அரசு அதிகாரிகள்'' என்று கொந்தளிக்கிறார்கள் கொடைக்கானல் பூர்வீகக் குடிமக்கள். கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்குக்குப் பின்பு, மலைகள் பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்தத் துவங்கினார்கள் அதிகாரிகள். நகர எல்லைக்குள் விதிகளுக்குப் புறம்பாகக் கட்டப்பட்ட கட்டடங்களுக்குக் கடிவாளம் போட்டனர். இதனால் நகர்ப் பகுதிகளைவிட்டு, கிராமப்புறங்களுக்கு இடம் பெயர்ந்தனர் பண முதலைகள். அங்கு தோட்ட வீடுகள் என்ற போர்வையில் அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டி விடுதிகளாகப் பயன்படுத்தி வருகிறார்கள். 2010-ம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக இருந்த வள்ளலார், 'கிராமங்களில் வீடு கட்ட உள்ளூர் பஞ்சாயத்து அனுமதியுடன் ஊரக வளர்ச்சித் துறை, வனத் துறை, வருவாய்த் துறை, கனிமவளத் துறை, வேளாண்மைத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகளின் அனுமதி பெற்றால் மட்டுமே. . .
COMMENT(S): 1
அதிகாரக்கூட்டத்தின் ஆட்டம் என்றுதான் அழியுமோ? அரசியல்வாதியை ஊழல் செய்ய வைப்பதே இந்த அதிகார வர்க்கம்தான்.