மிஸ்டர் மியாவ் இயக்குனர் தங்கர்பச்சன் தீர்க்கதரிசிதான். பிரபுதேவாவின் நிஜ வாழ்க்கையில் நடந்த காதல், ரகசியத் திருமணம், குழந்தை இறப்பு, நயன்தாரா காதல், விவாகரத்து, காதல் விலகல் என்று அனைத்து சம்பவங்களையும் அப்படியே அடுக்கி, 'களவாடிய பொழுதுகள்’ படத்தை இயக்கி இருக்கிறார். நயன்தாராவைவிட்டுப் பிரிந்து விடுவார் என்பதை முன்கூட்டியே யூகித்து திரைக்கதை அமைத்ததுதான் அல்டிமேட்! புதிய பட ஒப்பந்தத்தில், 'டி.வி-க்குப் பேட்டி தர மாட்டேன். ஆடியோ விழாவில் கலந்துகொள்ள மாட்டேன்’ என்று நிபந்தனைகளைச் சொல்லி கையெழுத்துப் போடுவதுதான் அஜீத் ஸ்டைல். சமீபத்தில் 'பில்லா-2’ ஆடியோ விழாவில் கலந்துகொள்ளச் சொல்லி ஏகமாய் பிரஷர் கொடுத்தார்கள். ஆனாலும் அஜீத் அசைந்து கொடுக்காததால், பங்ஷன் கேன்சல்! விக்ரம் இந்தியில் நடித்து வரும் 'டேவிட்’ படத்தில், ஜீவா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ஆனால், படத்தில் விக்ரமுடன் சந்திக்கும் காட்சியே கிடையாது. ஜீவாவுக்கு ஒரு பெரிய மனக்குறை இருக்கிறது. ''விதவிதமா டிரெஸ் போட்டுப் பார்க்க நான் எப்பவுமே ஆசைப்படுவேன். ஆனா. . .
சமந்தாவுக்குப் பாவம், நேரம் சரியில்லை. ஷங்கர் படத்துக்கு மொத்தமாக மூன்று மாதங்கள் கால்ஷீட் தருவதற்காக, மணிரத்னத்தின் 'கடல்’ படத்தில் இருந்து விலகினார். இப்போது சமந்தாவை, 'ஐ’ படத்தில் இருந்து நீக்கிவிட்டாராம் ஷங்கர். ---> பொதுவாக, ஷங்கர் படங்களில் நடிக்கும் ஹீரோயின்கள் - ஐஸ் தவிர - அப்புறம் காணாமல் போய்விடுவார்கள்! இதில் சமந்தா நடிக்கும்போதே காணாமல் போய்விட்டாரா? கடவுளே!!!!
COMMENT(S): 11
மூர்த்தி அண்ணே, "தோலை" உரிச்சு இன்னா பண்றது!
ஏம்மா, எப்பவுமே இந்த பக்கத்தை மூட மாட்டிங்களா?
சமந்தாவுக்குப் பாவம், நேரம் சரியில்லை. ஷங்கர் படத்துக்கு மொத்தமாக மூன்று மாதங்கள் கால்ஷீட் தருவதற்காக, மணிரத்னத்தின் 'கடல்’ படத்தில் இருந்து விலகினார். இப்போது சமந்தாவை, 'ஐ’ படத்தில் இருந்து நீக்கிவிட்டாராம் ஷங்கர். ---> பொதுவாக, ஷங்கர் படங்களில் நடிக்கும் ஹீரோயின்கள் - ஐஸ் தவிர - அப்புறம் காணாமல் போய்விடுவார்கள்! இதில் சமந்தா நடிக்கும்போதே காணாமல் போய்விட்டாரா? கடவுளே!!!!
ஸ்ரேயா ஸ்டில் - ஏ க்லாஸ்!
இப்படி சந்திரமுகி பார்வை பார்த்தால் மியாவ் மிரண்டு போய் மோட்டார் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு ஓடத்தானே செய்வார்.
மியாவும் ஒரு ஹெட் லைட் போட்டு போகலாமே!
"சந்த்ரா" தானா? அல்லது ஏதாவது நகை விளம்பரப் படத்தில் இருந்து சுட்டதா?
ஏல்லாம் அவன் செயல்
இந்தியில் சந்த்ரா என்றால் கமலா ஆரஞ்சு. அம்மணி இப்படியே வெளியே போனா தோலை உரிச்சுடுவாங்க....