• பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்
  • புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி
  • பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை
  • செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம்
19 June, 2013
''இணையத் தளங்களுக்கு இது சோதனைக் காலமா?''
''இணையத் தளங்களுக்கு இது சோதனைக் காலமா?'' 'ஜெயலலிதா ஆட்சியில் கருத்துரிமைக்கு இடம் இல்லையா?’ என்று கொதிக்கிறார்கள், சட்ட உரிமை ஆர்வலர்கள். 'கீற்று’ இணையதள ஆசிரியரிடம் நடத்தப்பட்ட விசாரணைதான் இந்தக் கொதிப்புக்குக் காரணம்.  சிறு வட்டாரத்தில் மட்டுமே அறியப்பட்ட சமூக அக்கறையுள்ள சிறு பத்திரிகைகளை, தனது இணையதளத்தில் வெளியிட்டதன் மூலம், உலக அளவிலான கவனத்தைப் பெற்றது 'கீற்று’. இட ஒதுக்கீடு, தலித்மக்கள் மீதான வன்கொடுமைகள், கல்வி, சுற்றுச்சூழல் பிரச்னைகள் தொடர்பான கட்டுரைகள் இதில்அதிகம் வெளியிடப்பட்டன. சூடு கிளப்பும் சர்ச்சையான விவாதங்களும் அவ்வப்போது  இதில் இடம்பெறும். அண்மையில், 'அணுஉலைப் பிரச்னை’ தொடர்பாக விஞ்ஞானி​கள், சூழலியலாளர்கள், படைப்பாளிகள் என பல தரப்பினரும் எழுதிய 200 கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில்தான், கடந்த 8-ம் தேதியன்று, 'கீற்று’ இணைய​தளத்தின் ஆசிரியரும் உரிமையாளருமான ரமேஷிடம், க்யூ பிராஞ்ச் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கு, சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் சட்ட உரிமை ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கீற்று நந்தன் என்ற. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 11

FROM ARAB SPRING TO WALL STREET GLOBALLY THERE IS A STRICT CONTROL OVER BLOGGERS. CYBER CRIME POLICE IS VIGIL NOWADAYS TO WATCH BLOGGERS ALL OVER THE WORLD.

IT STARTED IN TAMIL NADU SADLY!

பத்திரிக்கையாளர்கள் தாக்கப் படுவது எல்லா அரசிலும் நடப்பது தான். திமுக அரசு செய்யவில்லையா? நக்கீரன் மீது தாக்குதல் நடந்தால் மட்டும் அது அராஜகம், தினகரன் மீது தாக்குதல் நடவடிக்கை என்றால் காவல் வேடிக்கை பாக்கும். மற்ற பத்திரிக்கைகளும் இதில் விதிவிலக்கல்ல (விகடன் உட்பட).

இவ்வளவு ஏன், ஈழத் தமிழர்கள் பட்ட கொடுமைகளை சிடி யாக தாயாரித்து வெளியிட முற்பட்டால் அதற்க்கு அரசு தடை (இது தான் இன உணர்வு). சட்டத்தை நாடி உயர்நீதிமன்றமும் தடை போடா மறுத்து விட்டாலும் மக்கள் டிவி க்கு காவல் துறையை விட்டு மிரட்டல் விட்டதை மக்கள் தொலைக்காட்சியே செய்தியாக வெளியிட்டது. எதிராக செயல்படுகிறார்கள் வழக்கறிஞர்கள் என்றதும் காவல் துறையை விட்டு நீதிமன்றத்திலேயே அடிக்க விடுவது தான் கருத்து சுதந்திரத்தின் உச்ச கட்டம்!! நீதிமன்றமே இந்த குற்றத்தில் (குற்றம் என்று நீதிமன்றமே சொன்னது) ஈடுபட்டவர்களை துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க சொல்லியும் ஒன்றுமே செய்யாமல் அடுத்த நீதிமன்றத்தை நாடியது மட்டும் மக்கள் நலன்!! அண்மையில் நக்கீரன் அலுவலகம் தாக்கப் பட்டதை கண்டித்த கலைஞர் நீதிமன்றத்தில் நக்கீரன் நிபந்தனை இல்லா மன்னிப்பு கோரியதற்கு (நெற்றிக்கண்ணை திறந்து தான்) கருத்து சொல்லாதது மட்டும் ஏன்?

இன்றைய காலத்தில் மதுவுக்கு அடுத்தபடியாக இளைஞர்கள் மயங்கும் ஆபத்து மதம் மற்றும் ஜாதி. அதனை பயன்படுத்தி பல இணையங்கள் சொந்த லாபம் அடைவது கண்கூடாக திரியும் போது விசாரணை செய்வதே தவறா? இது போன்ற பல இணைய தளங்களில் ஒரு ஜாதியையோ மதத்தையோ திட்டு வேற்று மதத்தவர் பெயரில் முதல் கருத்து பதிவு செய்வதே அந்த இணைய ஆசிரியர் தான். விளைவு பலர் கருத்துப் பகுதியில் சண்டையிட்டுக் கொள்ள இணைய தளத்துக்கோ நல்ல வியாபாரம் தான்.

சீவலப்ப்பெரி பாண்டி படத்தில் வரும் வசனம் போல நம்ம ஜாதி நல்லா இருக்க அதை செய்யனும் இதை செய்யனும் ன்னு சொல்லி மக்கள் மனதில் விடம் வளர்பவர்களும் தீவிரவாதிகளே. இதில் நன்மை தூண்டி விடுபவர்களுக்கு, சீரழிவது மட்டும் இளைஞர்கள். குடியும் சரி, மதம் மற்றும் ஜாதியும் சரி.

கீற்று பத்திரிக்கை சமூக அக்கறை கொண்ட ஒன்றா? சிரிப்பு தான் வருது. எல்லா செய்திகளும் ஜாதியுடன் திரித்து எழுதுவது தான் சமூக நீதியா? இந்த தளத்துக்கு இதுவரை போனதில்லை, ஜூவி படித்த பின் சென்று முதல் பக்கம் பாத்ததே போதும்!! கூடங்குளம் பிரச்சனைக்கும் ஜாதி தான் காரணமாம், வேளச்சேரி என்கவுண்டர் குற்றப் பரம்பரையை உண்டாக்குமாம், கீதைக்கு எதிரான வழக்கில் இந்தியா கண்டனம் தெருவித்ததும் தவறாம்... இதை எழுதியவர்கள் மாற்று மதத்தினராக இருந்தாலும் அது சமூக அக்கறை கொண்ட ஒன்று தான். கொலை கொள்ளை கூடங்குளம் வரை எல்லாவற்றுக்கும் ஜாதி தான் காரணம்? இவர்கள் ஜாதிகளை களைவதை விட அதன் பெயரில் சொந்த லாபம் காண்பது மட்டும் தெளிவாகிறது. ஈழ விவகாரத்தில் மட்டும் அக்கறை இருக்குன்னு நம்பி படிச்சா அங்கும் மதம். இது தான் சமூகத்துக்கு செய்யும் நன்மையா?

Foolish comment by someone here

கருத்துக்களை கருத்தாக பார்க்காமல் திவிரவாத போர்வை கொண்டு மறைக்க முயற்சித்தால் ஒரு நாள் மக்கள் புரட்சி நடக்கும். வரலாறு புத்ததகங்களை படித்தால் இதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

"இணையத் தளங்களுக்குச் சோதனைக் காலமோ?"--------> ஆமாம், ரவுடிகளுக்கும், கொள்ளையர்களுக்கும், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களுக்கும், போலி மனித உரிமை, கருத்துரிமைக் கும்பலுக்கும் இது சோதனைக் காலம்தான்.

"சமூக அக்கறையுடன் கருத்துகளை வெளியிடுவதைத் தடுப்பது, அடிப்படை சுதந்திரத்தை மறுப்பதாகும்'' என்று அழுத்தமாகச் சொன்னார் ரமேஷ்."------> வன்முறையைத் தூண்டும் கருத்துகள், துரோக சிந்தனைக் கட்டுரைகள், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான செயல்கள், பயங்கவாதிகளின் மீது அக்கறை எல்லாம் அடிப்படைச் சுதந்திரம் என்று சொல்வது அபத்தம்.

இருட்டுல கடற்கரையில் விட்டு விளாசினது மாதிரி இப்போ இது ட்ரெண்ட். வேற ஒன்றும் இல்லை. -- அதே நேரத்தில் இம்மாதிரியான இணைய தளங்கள், வலைத்தளங்கள் விஷமத்தனமான விஷயங்களையோ, கட்டுரைகளையோ வெளியிடாமல் இருப்பதும் நல்லது. -- கிஷோர் அவர்களே, இதையே திமுக அரசு செய்திருந்தாலும் இதே பதிலா?

ஜெவின் மனித நேய முகமூடி விலக ஆரம்பித்துள்ளது. ஒட்டுக்காக சில பல தகிடுதத்தங்கள் செய்து தம்மை மனித நேய மாண்பாளராகக் காட்டிகொண்டார்( ஈழ ஆதரவு, கூடங்குள எதிர்ப்பு என). தன் வழக்கமான குலப்பண்பை இப்போது வெளிப்படக் காண்பிக்கிறார். அவ்வளவு தான்.

சுதந்திரம் என்ற பெயரில் தீவிர வாதங்கள் வைப்பதுதான் இந்த கும்பல்... நடவடிக்கை தப்பில்லை...

பத்திரிக்கையாளர்களுக்கு போன அதிமுக ஆட்சியில் விழுந்ததே "தர்ம அடி".

ஜுவி அதை மறாந்துவிட்டதல்லவா??????????????????

Displaying 1 - 11 of 11
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 04 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook