• பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவி: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு
  • வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு
  • லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம்
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார்
  • காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி
  • புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
  • சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ.
20 June, 2013
எங்கே தியாகு?
எங்கே தியாகு? தமிழ்நாட்டில் தீவிர அரசியல் பேசும் இளைஞர்களின் ஆதர்ஷம்... தோழர் தியாகு. தமிழ்த் தேசிய அரசியலை சித்தாந்தம் அறிந்துப் பேசும் தலைவர்களில் முக்கியமானவர். ஈழப் பிரச்னையில் அவர் காட்டிய தீவிரமும் அக்கறையும் குறிப்பிடத் தகுந்தது. ஆனால், கடந்த 13-ம் தேதியில் இருந்து தோழர் தியாகு எங்கே இருக்கிறார் என யாருக்கும் தெரியவில்லை.  நாகப்பட்டினம் மாவட்டத்தின் சிறிய கிராமத்தில் இருந்து வர்க்கப் போராளியாக எழுந்து வந்தவர் தியாகு. ஓர் அழித்தொழிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனைக் கைதியானார். தன்னுடன் சிறையில் இருந்த லெனின் என்ற தோழரின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டார். விடுதலையாகி வெளியில் வந்து இருவரும் இணைந்து வாழ்ந்தபோதிலும், அவர்களுக்கு இடையிலான மனக் கசப்பால் பிரிந்தனர். அதன் பிறகுதான், திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் தாமரையும் தியாகுவும் இணைந்து வாழ்ந்தனர். (தாமரைக்கும் அது இரண்டாவது திருமணம்). இப்படிப்பட்ட நிலையில்​தான்,  தியாகு யாரிடமும் சொல்லாமல் எங்கோ சென்றுவிட்டார் என் கிறார்கள்.. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 36

தீவிரவாதி என்று சொல்லாமல் அழித்தொழிப்பு செய்தார் என்று சொல்ல "தியாகு" என்ற பெயர் காரணமோ? இதுவே ஒரு அலி, அப்துல்லாஹ் என்ற பெயருடையவராக இருந்திருந்தால்.....இதுதான் விகடன் நடுநிலையா?

வர வர ஜூவி தமிழ் நாட்டு பதிப்பா தமிழ் ஈழ பதிப்பா என்று சந்தேகம் வருகிறது அவ்வளவு ஈழ செய்திகள்

தமிழ்கலாச்சாரத்தை, தமிழ் தேசியத்தைப் பற்றி பேசுபவர்கள் எப்படி கடைபிடிக்கிறார்கள்னு தாமரையைப் பத்தி தெரிந்துகொண்டாலே போதும். அதுவும் ஒரு கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவரை என்னமோ தியாகி மாதிரி விகடன் சித்தரிக்கிறது. வர்க்கப் போராளின்னா கொலை செய்யலாமா?

தியாகு அப்படி என்னப் பெரியதாகச் செய்து இந்தத் தமிழ் சமுதாயம் பயன் படுமாறு கிழித்துவிட்டார் என்று இந்தக் கட்டுரை? தமிழ் தேசிய விடுதலை இயக்கம் என்றால் தமிழ் நாடு இந்தியாவிலிருந்து பிரிந்து ஒரு தனி சுதந்திர நாடாக வேண்டும் ! இது போன்றது தானே ஈழத் தமிழர்களின் அரசியல் நோக்கமும் ! வைகோ, திருமா, நெடுமாறன், தியாகு போன்ற சில்லரை அரசியல் வாதிகளின் ஆசை சுதந்திர ஈழமும், சுதந்திர தமிழ் நாடும் இணைந்து அகண்ட தமிழ் தேசம் உண்டாக வேண்டும் ! இவர்கள் அனைவரும் இந்திய நாட்டின் எதிரிகள் மற்றும் துரோகிகளாகக் கருதி தேசத் துரோக குற்றத்திற்காக மரண தண்டனைக்கு உரியவர்கள் ! இந்தத் துரோகிகளைப் பற்றி ஆதரவாக இனி எழுத வேண்டாம் என்று தேசாபிமானிகள் அனைவரின் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன் !

ஓர் அழித்தொழிப்பு வழக்கில் >>>

என்ன சார் உங்க நடு நிலைமை!

மதன் மேட்டர்ல மட்டும் ஓவர் நைட்டுல ஃபயரிங் ஆர்டர் கொடுக்குறீங்க,


அழித்தொழிப்பு என்றால் இன்று விகடன் படிக்கும் எத்தனை பேருக்குப் புரியும். தன் மனதிற்கு ஏற்ற நீதிக்காக பல கொலைகளை,கொள்ளைகளைச் செய்த தீவிரவாதி என்பது தான் இவரது பேக்கிரவுண்டு.

ஒரு கொலைத்தொழில் புரிந்தவர், தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டவர், திருந்தி வாழ்வதாகச் சொன்னாலும் சமூக வாழ்வில் பெண்கள் விஷயத்தில் கவனமில்லாமல் இருப்பவர், இவருக்கு 'சாமரம்' வீசுவது போல் கட்டுரை எழுதறீங்களே!

பார்க்கலாம், இந்த கருத்து அம்பலத்திற்கு வருகிறதா என்று!

சகோதரி தாமரை ஏற்கனவே தனது ரத்தசொந்தங்களான ஈழத்தமிழர்கள் படும் துயரால் நொந்து போயிருக்கிறார்... இது போதாதென்று அவருடைய சுயவாழ்விலும் சுழற்சி.. பாவம் சகோதரி தாமரை.. விரைவாக எழுந்து வீருநடை போடுவார்.....

ஓர் அழித்தொழிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனைக் கைதியானார். ---> முதலில் இவரை அழித்தொழிங்கப்பா!!

காரணமே இல்லாமல் அப்பாவி மக்களை, குழந்தைகள், பெண்கள் என்றும் பார்க்காமல் மொத்தமாக கொல்வது - தீவீரவாதம்...தனிப்பட்ட பகையால் சம்பந்தப்பட்டவரை மட்டும் கொல்வது - அழித்தொழிப்பு....முந்தையது மதம் சம்பத்தப்பட்டது, பிந்தையது மனம் சம்பத்தப்பட்டது!

தியாகு ஜூ.வி.யில் எழுதிய கட்டுரைத் தொடர் மூலம் மனதைக் கவர்ந்தார்.! தற்போது கேள்விப் படும் இந்த செய்தி வருத்தமளிக்கிறது.!

தாமரையா??!!!!

முஹமது ரஷ்வி கேள்வியின் நியாயம் எல்லா பத்திரிக்கைகளும் உணர வேண்டிய யதார்த்தம்

தாமரைக்குப் பின்னால் இப்படி ஒரு கதையா? இப்பத்தான் தெரியுது கூட்டங்களில் அதிக ஆர்வம் காட்டினார் என்று!

இதெல்லாம் ஒரு நியுசா?

அப்பாடா, தாமரை குறித்து இப்பொழுதாவது எல்லோருக்கும் புரிந்ததே,

எம்மா தாமரை நல்ல தமிழ் பெண்.........இன்னிமே வாய திறந்தே ...........

Nithyananda is quoted as Nithi but the guy who killed many people is quoted as Thoyar Thyagu, a sad state of affair
Vikatan needs to retrospect

தியாகு பெரிய சாதனை எதுவும் செய்துவிட்டதாக தெரியவில்லையே. ஏன் அவரைப்பற்றி ஒரு செய்தி? கவிஞர் தாமரை பற்றி நேரடியாக எழுத ஒன்றுமில்லை என்பதாலா?

தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்கள் என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.

இவர் செய்த ஒரு உருப்படியான காரியத்தை சொல்லமுடியுமா?

தமிழ் மொழி ஆதிக்கத்தை வைத்துக்கொண்டு இவரும், இவர் போல பலரும் மக்களை முட்டாளாக்கி வருவது தான் வேதனை.

ரொம்ப முக்கியம்?

இணைந்து வாழ்நதனர் என்கிறீர்கள் - மணம் செய்துகொண்டனர் என்கிறீர்கள் (இரண்டாவது திருமணம்), எது சரி (லிவிங் டுகெதர் - க்கும், திருமணமானவர்கள் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதே).

தாமரை தமிழர் பண்பாடு அறிந்தவர் அல்லவா அதனால்தான் லிவிங் டுகெதெரை (இணைந்து வாழ்வதை) பின்பற்றினார். இவரை போன்ற போலித்தனமானவர்கள் - ஊருக்கு உபதேசம் ஆசாமிகள், அவர்கள் எக்கெடு கெட்டு போனால் என்ன அதற்கு ஏன் ஒரு செய்தி?

தியாகுவின் வாழ்க்கையில் கண்ணா மூச்சு இன்றும் தொடர்வதுதான் சோகம்!..

இந்த கொசு தொல்லை தான்க முடிலப்பா

Displaying 1 - 23 of 23
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 23 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook