• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
19 May, 2013
நேர்மைக்குப் பரிசு கட்டாயக் காத்திருப்பு!
நேர்மைக்குப் பரிசு கட்டாயக் காத்திருப்பு! 'சத்துணவுச் சண்டை!’ - இது, கடந்த இதழ் கழுகார் பகுதிக்கு நாம் கொடுத்திருந்த தலைப்பு. சத்துணவு அமைப்பாளர்கள் நியமனத்தில் ஆளும் கட்சிப் புள்ளிகளுக்கும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் பாலாஜிக்கும் ஏற்பட்ட மோதலை கழுகார் விலாவாரியாகச் சொல்லி இருந்தார்.  'யார் எந்தப் பரிந்துரை செய்தாலும் தகுதியின் அடிப் படையில்தான் சத்துணவு அமைப்பாளர் நியமனம் நடக்கும்’ என்று, தான் நினைத்ததை சாதித்தும் விட்டார் கலெக்டர் என்ற கழுகார், 'அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் இப்படி நடக்க ஆரம்பித்தாலே, நாடு சுபிட்சம் அடையும்’ என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார்! நாடு அவ்வளவு சீக்கிரத்தில் திருந்தி விடுமா, திருந்து​வதற்குத்தான் விட்டு விடுவார்களா நம்முடைய அதிகாரிகளும் ஆட்சியாளர்களும். நம்முடைய இதழ் வெளியான கடந்த சனிக்​கிழமை அன்று, 'பாலாஜியின் பத​விக்கு வேட்டுவைக்கப்​பட்டு​விட் டது. அவ​ருக்கு எந்தப் பதவி​யும் ஒதுக்கப்​படாமல் கட்டாயக் காத்திருப்பில் வைக் கப்பட்டு உள்ளார். ஐ.ஏ.எஸ். தேர்​வில் தேர்ச்சி பெற்றதும் பாலாஜி முதன்​முதலில் சேரன்மகாதேவி. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 111

You will become one of The greatest and tallest IAS officer of this country! God may bless you!

Respected Balaji Sir,

You are the role model for the youth. Wish you all the best for your next assignment.

பாலாஜி தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தினார். இதில் அவர் மீது எள்ளளவும் தவறில்லை.

திரு.பாலாஜியின் கட்டாய காத்திருப்புக்கு காரணம் அவர் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டது என்பது இந்த கட்டுரையில் அளிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் வாயிலாக தெரிகிறது.

தவறு செய்தவர்களை தண்டிப்பது ஜனனாயகமல்ல.திருத்துவது ஜனனாயகம்.அடக்கு முறையை கையாண்டதன் விளைவு கட்டாயக் காத்திருப்பு.தனியொருவர் எந்த புணரமைப்பையும் செய்து விட முடியாது.அது தடியால் அடித்து கனிய வைக்கும் அடக்குமுறையில் ஜயமாகாது.அனைவரையும்.ஒப்புதலுக்கு உள்ளாக்கும் உட்படுத்துதலில் ஜயமாக்கும்.

ஆர்வக்கோளாறில் தன் பணியின் அடிப்படை தேவைகளுக்கு அவசியமில்லாத செயல்களை அதிரடியாக செய்திருக்கிறார்.புல்லட் குறியிட்டு சொல்லப்பட்டிருக்கிற தகவல்கள் அனைத்தும் இவரால் சுமூகமான இணக்கம் ஏற்படுத்தி சம்பந்தப்பட்ட ஊழியராலேயே செய்ய வைத்திருக்க முடியும்.அன்னிலையில் விரோத போக்கு எங்கும் ஏற்பட்டிருக்காது என்பதுடன் ஒத்துழைப்பும் பெருகியிருக்கும்.

சத்துணவு ஊழியர் நியமனம் நாடு முழுதும் நடை பெறுவது.ஒரு முன் மாதிரி நியமனம் இவர் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் செய்யும் நிலையில், முன் கூட்டியே அரச்சுக்கு தெரியப்படுத்தி ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.ஒப்புதல் கிடைக்காத நிலை எழுத்து மூலமான தகவல் தொடர்பில் சாத்தியமில்லை.இவ்வாறு செய்திருக்கும் நிலையில் இவர் தன் பணியை முழுமையாக செய்திருக்க முடியும்.அனைவரையும் மேலதிகாரிகள், அரசியல் வாதிகள்(மக்கள் பிரதினிதிகள்) உட்பட அனைவரையும் அவரவர் பணி நிலையில் ஈடு படுத்தியிருக்க முடியும்.

லஞ்சம் வாங்குவது பிச்சையெடுப்பதற்கு சமம் என பேசுவது வீண்.லஞ்சம் வாங்காது தன் திறன் நிரூபித்து வேண்டிய ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கான அடிப்படை விதிகளை பயன்படுத்தி அத்தகையோருக்கு உயர்வு ஏற்படுத்தித் தருவது கலெக்டரின் கடமை.சத்துணவு தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு பணியின் நோக்கம் என்ற மெரிட்டின் பால் இல்லையென்பது நிதரிசனம்.இந்த சத்துணவு பணியாளர் நியமனத்தில் இவர் காட்டியது வேகம்.விவேகமில்லை.

இந்த காத்திருப்பில் கிடைக்கும் அனுபவம் திரு.பாலாஜியை பண் படுத்தும்.வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக எல்லோரையும் உட்படுத்தி பணியாற்ற உதவும்.தவறுகள் புரிதல் இல்லாத நிலையில், பகிர்தலுக்கான களம் இல்லாத நிலையில் நிகழுகின்றன.அவை தரும் சூழல் எல்லோரையும் முற்போக்காய் முன்னேற்றும்.இதே விருது நகரில் மீண்டும் போஸ்டிங் பெற்று அனைவரையும் உட்படுத்தி உயர திரு.பாலாஜி முயல்வார் என நம்புகிறேன்.

திரு பாலாஜிக்கு அதிகாரம் இல்லை என எப்படி சொல்ல முடியும்? சத்து உணவு தொழிலாளர்களை தகுதி அடிப் படையில் நியமிக்க ஒரு கலெக்டருக்கு அதிகாரம் இல்லையா? அப்படி ஆனால் அதே போல அதிமுகவுக்கும் கட்டாய ஓய்வு கொடுக்க மக்கள் தயங்க மட்டார்கள்.

Well done Mr. Balaji. JAY should take action to prove that she will not condone these actions and reinstate MR. Balaji ASAP.

Shame on the part of these trecherous polititions. The people of the district should rise against the action of the Government and teach them a lesson. The MLAs should be stripped in streets. I dream that THESE AGITATIONS take place.

இப்போ மக்கள் செய்ய வேண்டியது என்னன்னா, நாங்க ஓட்டு போட்டு எம்.எல்.ஏ ஆக்கின கழிசடைங்கள திரும்ப பெறுறோம்னு எல்லோரும் கையெழுத்து போட்டு ரேசன் கார்டோட கொண்டு போயி நீதி மன்றத்தில ஒப்படைக்க வேண்டியதுதான்.

மிகவும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விசயம் இது. கலெக்டர் தண்டிக்கப்பட்டால் ஊழல்வாதிகளுக்கு மிகவும் கொண்டாட்டமாக ஆகிவிடும் அல்லவா? அது நேரிடையாக ஊழலுக்குத் துணை செய்வதாகும். ஏற்கனவே நியமனம் வாங்கியவர்கள் தெருவில் இறங்கிப் போராட வேண்டும். இதை சும்மா விடக் கூடாது.

ஜெ யோட அருகதை இதுதான்...

இந்தியா வல்லரசு ஆகிவிடும் (500 வருடதில்)

"அதனால் நேர்மையான அதிகாரிகள் இனி, ஆளும் கட்சிக்காரர்களைக் கண்டு பயப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது" - நேர்மையான அதிகாரிகள் என்ன ஆனாலும் பயப்படக்கூடாது. அவர்களை எங்கு பார்த்தாலும் தப்பு பண்ணும் அரசியல்வியாதிகளும் ஈன பிறப்பு அதிகாரிகளும் தான் பயப்பட வேண்டும்.

"நாடு அவ்வளவு சீக்கிரத்தில் திருந்தி விடுமா, திருந்து​வதற்குத்தான் விட்டு விடுவார்களா நம்முடைய அதிகாரிகளும் ஆட்சியாளர்களும்." - கொசுவை ஒழிக்க அது உருவாகும் இடத்தை சுத்தப்படுத்த வேண்டும். இப்பொழுது சொல்லுங்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டியது எது? சமுதாயத்தை பற்றிய நம் பார்வை தானே?

Please publish all the names related to Mr Balaji's removal. Minister, MP, MLA, District etc....The people should know the truth.


We support Mr Balaji.
Jai Hind!

நேர்மையான அதிகாரிகளால் ஆட்சிக்கு பெருமை. இதை ஜெயலலிதா உணர வேண்டும்.

மக்களுக்காக போராடியவர்க்காக மக்கள் தான் போராட வேண்டும்.

கலெக்டர் நல்லது செய்யவே முயன்றிருக்கிறார்... ஆனால் பிரயோஜனம்?... இப்பொழுது அவரும் காத்திருப்போர் பட்டியலில்... பணி நியமன ஆணை பெற்றோரும் காத்திருக்கவேண்டிய நிலைமை... ஆளும் கட்சியினரின் ஆட்டம் தற்பொழுது அதிகமாகவே இருக்கிறது... சென்னையை மட்டும் திருத்தினால் போதாது... நல்லது செய்யும் இந்த மாதிரி அதிகாரிகளை பார்த்துப்பார்த்து பழிவாங்கும் இந்த அரசு, ஊழல் அதிகாரிகளை கண்டுகொள்ளாதது ஏனோ?...

Dr.Mrs.MeenakshiPrabhakar : கலெக்டர் பாலாஜி செய்தது சாதனை அதை பாராட்ட மனமில்லாமல் ஆர்வக்கோளாறில் தன் பணியின் அடிப்படை தேவைகளுக்கு அவசியமில்லாத செயல்களை அதிரடியாக செய்திருக்கிறார் என்று சொல்வது அக்கிரமம்.

கலெக்டர் பாலாஜி செய்தது அனைத்தும் அரசு வழிகாட்டுதல்கள் படி நியாயமாக செய்திருக்கின்றார் முன் கூட்டியே அரச்சுக்கு தெரியப்படுத்தி ஒப்புதல் பெற்றிருக்க வேண்டிய புதுமைகள் எதுவும் இல்லை.

எல்லா கலெக்டர் மதரி கலெக்டர் பாலாஜியும் தலைக்கு இவ்வளவு என்று தன் பங்கை வாங்கிக் கொண்டு சந்தோஷமாக இருந்து இருக்கலாம் ஆணால் லஞ்சம் வாங்குவது பிச்சையெடுப்பதற்கு சமம் என மிக நாகரிகமாக கலெக்டர் பாலாஜி தெரிவித்து தான் முதற்கொண்டு அதை செயல்படுத்தி இருக்கிறார். உண்மையில் லஞ்சம் வாங்குவது விபச்சாரம் செய்வதற்க்கு சமம்.

அரசு ஊழியர்களுக்கு உயர்வு ஏற்படுத்தித் கொள்ள அரசு ஊழியர்களுக்கான சங்கங்கள் எத்தனையோ உள்ளன.


ஒரு அரசாங்கம் உண்மையிலேயே நேர்மையான முறையில் சத்துணவு ஊழியர் நியமனம் செய்ய வேண்டும் என்று விரும்பினால் கலெக்டர் பாலாஜி செய்த முறையை விட சிறப்பாக செய்ய முடியாது என்பதே உண்மை. இதை அரசாங்கம் செய்ய நினைத்தால் பத்து பேராவது கொண்ட கமிட்டி ஆறு மாதம் யோசித்தும் விவாதித்தும் இரண்டு கோடி செலவு செய்து அறை கொறையாக (should be as per government guidlines ) என்று தன் முடிவை சமர்ப்பிக்கும்.


இவர் ஒரு சிறந்த கலெக்டர் அவர் செயல்களை கேவலப் படுத்தாதீர்கள்

இதுக்கு மு.கவே பறவாயில்லை போல. மு.கவாவது சகாயம் போன்றோரை இடமாற்றம் செய்யாமலிருந்தார். ஆனால் ஜெயா.......? இதெல்லாம் பண்ணிட்டு சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களிடம் சும்ம சவுண்டு குடுத்து என்ன பயன்.

let us retain collector like Mr. Balaji in TN......just a hope

சகாயத்தில் ஆரம்பித்து இன்று பாலாஜியில் வந்து நிற்கிறது.. நேர்மையான ஆட்சியை தருவேன் என்று ஜெயா சொல்லுவது வெறும் வாய்ஜாலாக்கு தான்.. ஜெயா திருந்தவேயில்லை, திருந்த போவதுமில்லை...

Dr., I think you domicile in US.

You should know the reality in life.

As a collector, he has performed his duties perfectly. While doing his job as per the policies of the government, no need to beg for going with the policy.

Do you think the salaries of the government servants are less?

They dont know what to do with the surplus from their salary income, that is why they fell prey to the bogus investment companies, who are offering higher rate of interest, say more than 50% which is not practical.

Whatever Mr. Balaji has done was perfectly alright, and we should appreciate him, atleast not discourage him.

எனக்குத் தெரிந்த இரண்டு விதவைகளுக்கு எந்த சிபாரிசோ, பணமோ இல்லாமல் ஆட்சியர் பாலாஜி அவர்கள் ஆயா வேலைக்கு பணி நியமனக் கடிதம் அனுப்பியுள்ளார். இதைப்போல் தினமும் சாப்பாட்டுக்கே அள்ளாடும் எத்தனையோ பேரின் வாழ்க்கையில் வெளிச்சம் போட்டுக் கொடுத்துள்ள பாலாஜி போன்ற நல்லவர்களைப் பலி வாங்கும் இந்த ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இறக்கமே அற்ற,சுயநலவாதிகள். இவர்களுக்கும் கொடுங்கோல் சர்வாதிகாரிகளுக்கும் வித்தியாசம் இல்லை!

மிக மிக நேர்மையாக நடந்து கொண்ட ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர் அரசியல் வியாதிகளால் பழிவாங்கப்பட்டிருக்கின்றார். இதை ஆளுங்கட்சி, தனது அதிகாரத் திமிரில் செய்யும்போது, தட்டிக்கேட்க வேண்டிய எதிர்க்கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? முன்னாள் ஆளுங்கட்சியான திமுக கேட்காது. ஏனெனில், அப்படி கேட்கும் அருகதையை அந்தக் கட்சி எப்போதோ இழந்துவிட்டது. இன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் நடிகர் சங்கத் தலைவருமான விஜயகாந்த் என்ன செய்து கொண்டிருக்கின்றார்? இலங்கைத் தமிழருக்கும், முல்லைப் பெரியாறு அணைக்கும் குரல்கொடுக்கும் வைகோ இந்த அரசின் வன்கொடுமையை எதிர்த்து போராடியிருக்க வேண்டாமா? காங்கிரஸ் கம்பெனியும், பாஜக பரிவாரமும், கம்யூனிச தோழர்களும் நீள்துயிலிலிருந்து இன்னும் மீளவேயில்லையா? ஓரிரு சட்டமன்ற உறுப்பினர் இடங்களுக்காகப் போட்டி போட்டு, அதிமுக தலைமைக்கு அடிபணியும் மனிதநேய(?) மக்கள் கட்சி, அகில இந்திய சமத்துவ(?) மக்கள் கட்சி, புதிய(?) தமிழகம், கொங்கு இளைஞர்(?) பேரவை எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன? சீறும் சிறுத்தைகளும், பாட்டாளிகளின் கூட்டாளிகளும், தமிழரின் வாழ்வுரிமை பேணுவோரும், நாம் தமிழர் என்போரும், கொங்கு நாட்டை ஆள்வோரும், திராவிடத்தைக் காப்போரும் திரு. பாலாஜிக்கு எதிரான இந்த அத்துமீறலைக் கண்டிக்காதது ஏன்? ஏனெனில், இவரெல்லாம் பெயரில் வேறுபட்டோர்; ஆனால் செயலில் வேறுபட்டோரல்ல. இதை வேடிக்கை பார்த்தும், வேதனையில் கருத்தெழுதியும் வாழும் நாம், அவர்களின் அடாவடிக்கு மௌனச் சாட்சிகள்.

அம்மா மீனாட்சி பிரபாகர், அரசியல் வாதிகளும், ஊழல் வாதிகளும் அடாவடி செய்யும் போது இந்த மாதிரி ஆர்வகோளாறுகள் தேவைதான், இங்கு சாத்வீகம் பேசிகொண்டிருக்க இயலாது அதிரடி தான் பயனளிக்கும்.

   Displaying 1 - 25 of 86
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 08 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook