• சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி
  • பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம்
  • இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி
  • கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல்
  • வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை
  • ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல்
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
26 May, 2013
மிஸ்டர் கழுகு: உள்காய்ச்சல்!
மிஸ்டர் கழுகு: உள்காய்ச்சல்! ''கோமதி சீனிவாசன் படத்தை எடுத்து வைத்துக்கொள்ளும்!'' - ஆபீஸ் வாசலில் இருந்து எஸ்.எம்.எஸ். தட்டியிருப்பார் போல, மெசேஜ் படித்து நிமிர்ந்தபோது, நம்முன் கழுகார் புன்னகையுடன் இருந்தார்.  ''கோமதி சீனிவாசனை இந்நாள் அரசியல்வாதிகள் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி​ விட்டது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில், கோமதி சீனிவாசனுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையை திருச்சி நீதிமன்றம் விதித்​துள்ளது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் வலம் வந்த பெண் அமைச்சர்களில் ஒருவர், இந்தக் கோமதி சீனிவாசன். மொத்தம் நான்கு ஆண்டுகள் அமைச்சராக இருந்தார். 96 முதல் 2001 வரை எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக புகார் பதிவானது. அதில்தான், அவருக்கு மூன்று ஆண்டு மற்றும் நான்கு மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுஉள்ளது. பொதுவாக சொத்துக்குவிப்பு வழக்குகள் எப்படிப் போகும் என்பதற்கு உதாரணமாக இந்தத் தீர்ப்பைச் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்!''. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 25

>>''இந்தக் கூட்டத்தில் இன்னொரு விஷயமும் நடந்துள்ளது. 'கென்டகி கர்னல்’ என்ற பட்டம் பெற்ற மு.க.ஸ்டாலினை << "தங்கதாரகை" மாதிரி இதுவும் வாங்கப்பட்ட பட்டமா???

நிலச் சொந்தக்காரரை கண்ணீர் சிந்தவைக்கும் நில ஆக்கிரமிப்பின் கொடுமை பரிணாமம் புரிய ஆரம்பித்திருக்கிறது.

''கர்நாடக மாநில பி.ஜே.பி. அரசு அதைச் செய்யாது அல்லவா?'' ஊரில் எல்லோரும் பி.ஜெ.பி ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் கலந்து ஆறாக ஓடும் என்றல்லாவா பேசுகிறார்கள்.

இப்போதாவது நடராசன் ஜெ பற்றிய இரகசியங்களையும், அவர் செய்த தில்லு-முல்லுகளையும் விளியிடுவாரா?

இதுவும் வேணும், இன்னும் இருக்கு நடரஜருக்கு! தன் மனைவியாலேயே இப்ப சரியான பாடம். ஆனால் ஒரு ஆறுதல், தன்னை சிறையில் அடைத்தவர்கள், சீக்கிரம் இதைவிட கடுமையான சிறைவாசத்தை எதிர்னோக்கி உள்ளார்கள் என்பதுதான்.

கோமதிசீனிவாசன் இப்போ எங்க சார் இருக்காங்க....33லட்சத்துக்கே 3வருசம்ன்னா,ஜெவுக்கு,கனிக்கு எல்லாம் எத்தனை வருடமோ....

இந்த நடராஜன் ,அம்மா சொன்னதை விட ஓவரா ஆக்ட்டு கொடுக்கிறர்....

"'கென்டகி கர்னல்’ என்ற பட்டம் பெற்ற மு.க.ஸ்டாலினை வாழ்த்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்"-----------> நடிகர் சங்கம் என்ன திமுகவின் கிளைக் கழகமா? அது சரி, பட்டம் வாங்க எவ்வளவு செலவு?

"'பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று ஸ்டாலின் வெளிப்படையாக அறிவித்து இருந்தார். ஆனாலும், வெளிப்படையாக அவரது பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டார்கள் அவரது ஆதரவாளர்கள்."------------> வேண்டாம் என்று சொன்னால் வேண்டும் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதே கட்சியின் பகுத்தறிவுக் கொள்கை. ஆங்கிலத் தேதியில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடுவது திராவிடத்தமிழ் கலாசாரம்.

"'சந்தர்ப்ப சூழ்நிலையால் இப்போது பிரிந்து இருக்கிறோம். மீண்டும் சேர்ந்து விடுவோம். அப்போது உங்கள் நிலைமை என்னாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்’ என்று நடராஜன் கோபப்பட்டாராம்."------------> வழக்கமான போலிஸ் மரியாதையை அவருக்குக் கொடுத்தால்தான் யதார்த்த நிலைமை அவருக்குப் புரியும்.

"'தேவை இல்லாமல் வழக்கை இழுத்தடிக்கிறார்கள். எனவே விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்’ என்று அன்பழகன் மனுத்தாக்கல் செய்யத் திட்டமிட்டு உள்ளாராம்.''--------> ஸ்பெக்ட்ரம், தா.கி., தினகரன் ஊழியர்கள் எரிப்பு போன்ற கேசுகளுக்கும் அன்பழகன் இப்படிக் கேட்பாரா?

ஸ்டாலினுக்கு எதுக்கு திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் பாராட்டு தெரிவித்து தீர்மானம் இயற்ற வேண்டும். வேணும்னா தனிப்பட்ட முறையில் பாராட்டு தெரிவிக்கலாம். கருணாவுக்கோ அல்லது ஜெ விற்கோ பாராட்டு தெரிவித்ததில்லாவது ஒரு அர்த்தம் இருக்கு, அவர்கள் திரைப்படத்துறைக்கு சலுகைகள் அறிவித்தார்கள். ஸ்டாலினுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஏதோ வீரன் என்று பெயர் வைத்தால் வீரன் என்று நினைப்பு போலா.. ம்ம்ம்ம்ம்ம்

ஆத்தா பிரியமா ஊட்டிவிடுது.....அக்கா பிச்சு எடுத்துக்கப் பாக்குது.....!

சரத்குமர் ஆதாரம் இல்லாமல் ஏதும் செய்ய மாட்டார். தோண்டினால் தங்கச்சுரங்கம் தெறியும்.

கந்துவட்டி சங்கர் ??????????

கே.ஃப்.சி சிக்கன் சாப்பிட்டே கர்னல் விருது வாங்கிட்டாரு ... ;)

சரத்குமார் ஆளுங்கட்சி கூட்டணியில் இல்லை. அவர் போட்டியிட்டு வென்றது இரட்டை இலை சின்னத்தில்; எனவே அவர் அதிமுக உறுப்பினராகத்தான் சட்டப்படி செயல்பட முடியும்.

சபாஷ் ரவிடலாஸ்.

ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள், மறந்துட்டேனுஙக!

கோமதி ஸ்ரீ கதையை சொல்லி மேலே இருப்பவருக்கு திகில் ஊட்டி விட்டீர்கள்!அனால் அன்றைய 33லட்சம் இன்றைய 33கோடிகளாக வேண்டுமானால் ஆகலாம் , 60கோடி?ம்ஹ்ம், கேஸ் சிக்கல் தான்..

செல்வி அம்மா எல்லாத்துக்கும் வந்துடுவாங்க, அவங்க யார் பக்கம் நு சொல்லிக்க முடியாது

எனக்குத் தெரிந்து "கென்டகி கர்னல்" என்றால் கே.எஃப்.சி. சிக்கன் கடையில் இருக்கும் கர்னலின் ஃபோட்டோதான்!

'சந்தர்ப்ப சூழ்நிலையால் இப்போது பிரிந்து இருக்கிறோம். மீண்டும் சேர்ந்து விடுவோம். அப்போது உங்கள் நிலைமை என்னாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்’ என்று நடராஜன் .......................
இது வரை நடராஜனை வெத்துவேட்டு ,தன் மனைவியின் மூலம் சொத்து சேர்க்கும் அரசியல்வாதி,அலட்டல் பேர்வழி என்றுதான் நினைத்திருந்தேன். இப்போது தான் தெரிகிறது இதெல்லாம் தற்காலிக நாடகங்கள் என்று.பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.கருணாநிதியின் உள்கை அல்லவா?கொஞ்சமாவது கபடத்தனம் இருக்காதா?

"ஆடி அடங்கும் வாழ்க்கையடா ! ஆறு அடி நிலமே சொந்தமடா " எந்தப் படிப்பறிவுமில்லாத சர்வ மடையனுக்கும் புரியக்கூடிய இந்த எளிமையான பாட்டின் அர்த்தம் எப்படி இந்த சசிகலா, நடராஜன், ஜயலலிதா, கருணா, ஸ்டாலின், முக்கியமாக வீரபாண்டியாருக்கு விளங்காமல் போய்விட்டது? வாரம் ஒரு முறை சேலத்துச் சிங்கமென முன்னால் பெருமையாக அழைக்கப்பட்ட ஆனால் வீரக் கோழைப் பாண்டியாருக்கு சேலத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அவர் நிலத்தை அபகரித்தார், இவர் நிலத்தை அபகரித்தார் என்று புகார்கள் வருவதைப் பார்த்தால் மஹாகேவலமாக இருக்கிறதே! இவருக்குத்தான் இந்தக் கேவலத்திலும் இன்னும் எவ்வளவு தற்பெருமை !

நடராஜனுக்கு இப்போதாவது தெரிந்ததே இதுவரை தான் ஒரு 'பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு' என்று...

ஆடிய ஆட்டமென்ன....

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்..!!

Displaying 1 - 25 of 25
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 07 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook