• வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு
  • லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம்
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார்
  • காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி
  • புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
  • சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ.
20 June, 2013
கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள் எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.  ஜனாதிபதி வேட்பாளராக லோக்சபா சபாநாயகர் மீரா குமாரை முன்னிறுத்துகிறாரே மம்தா? மக்களவையில் யார் என்ன திட்டு திட்டினாலும் சிரித்துக்கொண்டே இருக்கிறார் மீரா குமார். இந்தத் தகுதியால் இருக்குமோ?  கே.ஆர்.செந்தில்குமார், காங்கேயம். ஜெயலலிதாவின் உருப்படியான சாதனை என்ன? கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பியது மட்டும்தான்! இன்று தன்னுடைய சாதனைகளாக ஜெயலலிதா சொல்பவை அனைத்தும் ஓர் அரசாங்கம் தனது குடிமக்களுக்குச் செய்துதர வேண்டிய அடிப்படைக் கடமைகள், அவ்வளவுதான். இதை ஜெயலலிதாவும் செய்யலாம். கருணாநிதியும் செய்யலாம். ஏதாவது ஒரு கவர்னரும் உட்கார்ந்து கொண்டு செய்யலாம். பரீட்சை எழுதி பாஸ் ஆன அனைவரும் சாதனை செய்தவர்களாக சொல்லப்படுவது இல்லை. அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றிக் காட்டினேன். ஏழ்மை இல்லாத நிலையை உருவாக்கினேன். மின் பற்றாக்குறை இல்லாத தமிழகம் இது. வேலை இல்லாப் பட்டதாரிகள் கிடையவே கிடையாது என்பது மாதிரியான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களையே சாதனைகளாக வரவு வைக்கவும், வரவேற்கவும் முடியும்!. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 55

நித்தாவைப் பத்தி பத்த வெச்சச்சா? அது சரி.

விசில் ப்ளோயிங் என்பது ஒரு செயல் நடைபெறுவதற்கு முன்னர், தவறு இவ்வாறாக நடை பெறலாம் என எச்சரிக்கை செய்வது.இது இன்னும் முற்போக்காக கொள்கையலவில் செயல்திட்டம் இருக்கும் நிலையில் மக்கள் ஆலோசனைகளை உட்படுத்துதலில் நிறுவப்படும்.இணைய தலம் சார்ந்த அரசு செயல்முறை இதற்கு வழி தரும்.செயல் நடந்த பிறகு சம்பந்தப்பட்ட நபரின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்காக மட்டுமே இதுவரை தகவல் அறியும் சட்டம் பயன் பட்டு வந்திருக்கிறது.அதில் கொலைகள் எதிர்பார்க்ககூடியதே.இந்திய அரச்சியலமைப்பு சட்டத்தின் முன்னுரையின் படி வெளிப்படைத் தன்மையும், பதில் சொல்லும் பொறுப்பும் சட்டத்தில் சம உரிமை என்ற அளவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.இந்த அடிப்படையில் ரகசியம், என்பது எந்த அரசுச் எயல்முறையிலும் நியாயப்படுத்தக் கூடியது அல்ல.அந்த முறையில் பாராளுமெனறமே லோக் பால்.தகவல் அறியும் உரிமை சட்டமும், லோக் பால் மசோதாவும் அவசியமற்றவை.இனைய தலமங்கள் வெளிப்படைத்தன்மையுடன் அரசுத் துறைகளுக்கு உருவாக்கப்பட்டு அரசு செயல்முறைகள் மின்னாளுமையில் நடைபெறும் நிலையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரிமை நிறுவப்படும்.இது எல்லோருக்கும் இலகு வாழ்க்கை தரும்.

ஊழலில் திளைப்பவர்களெல்லாம் தேசதுரோகிகளே... அது மாதிரியான தேசதுரோகிகளுக்கு தேசபற்றாளர்களென்றாலே எதிரிகள் தானே...

கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பியது.....ஜெவை நம்பி மக்கள் செய்தது,இதில் ஜெவின் பங்கு எதுவும் இல்லை.....

கடந்த ஆட்சியை விட விட,அம்மா,அம்மா என்று பிலாக்கணம் பாடி விளம்பரம் செய்வது இந்த ஆட்சியில் ரொம்ப ஓவர்.அசிங்கமாகவும்,அருவருப்பாகவும் இருக்கிறது.இன்னும் எல்லா ஊர்களிலும் நல்ல பொது கழிப்பிடம்,சாலைகள்,குடி தண்ணீர் கிடையாது.சுத்தம் என்பது அறவே கிடையாது.இதில் எனா சாதித்ததாய் விளம்பரம் செய்கிறார்கள்?சாதாரண ஒரு கட்சி தலைவனின் வீட்டு திருமண விழாவுக்கு,தெருவெல்லாம் அடைத்து விளம்பரம். மகா மோசமாக இருக்கிறது.

ஜெகஜீவன் ராமின் மகள், சோனியாவின் சொல்படி நடப்பவர்ங்கிறது தகுதி போதாதா? அவர் திறமையைப் பத்தி பேசி ஏன் ஜனாதிபதி பதவிக்கு ஏதோ திறமை தேவைபடுவதைப் போல் சித்தரிக்கிறீங்க?

Hi eagle

what jaya doing is a small thiing for you. sad part is even that small thing is not done by the DMK regime.

Have you ever condemened dmk regime they are not doing anything in their 5 year term.. you put jalra to them at that time

now you are not ready put jalra . i doubt are ur straight forwardness

டாக்டர். திருமதி. மீனாட்சி பிரபாகர் அவர்களே!

இதனால் தாங்கள் அவைக்குக் கூற விரும்பும் செய்தி?

மன்னிக்க வேண்டும், வேறு இரண்டு பக்கங்களிலும் இதே போல் கருத்துக்கள் எழுதியிருக்கிறீர்கள். நல்ல வளமான தமிழ் நடை, அரசியல் அகராதியை அறிந்த பொருள் பொதிந்த வார்த்தைகள், சமூக அக்கறை எல்லாமே இருக்கிறது. ஆனால் மேற்கண்ட செய்திக்கும் உங்கள் எண்ணத்திற்கும் பொருதம் சேரவில்லையே.

தவிர கழுகார் வாயில கூட 'விசில்' இல்லையே!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றியது ஜெ சாதனையா?????????

ஒரு கொள்ளியிடம் இருந்து இன்னொரு கொள்ளியிடம் 5 வருடத்துக்கு ஒரு முறை மாறி மாறி அஜகப்பட்டு ரணப்படும் பொதுசன வேதனை!

பக்தி, ஆன்மிகம், கடவுள், மதம் ஆகியவை ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவை, தனிச்சொத்து. நம்பிக்கை சார்ந்த விஷயம்.

(முருகன்)
"ஜெயலலிதாவின் உருப்படியான சாதனை என்ன?
கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பியது மட்டும்தான்!................."

ஹலோ கழுகாரே, தாத்தாவை வீட்டுக்கு அனுப்பியது மக்கள். ஜெயலலிதாவை யாரும் மக்கள் விரும்பி தேர்ந்தெடுக்கவில்லை. தாத்தா மீது இருந்த வெறுப்பைத்தான் மம்மி அறுவடை செய்தார். தி.மு.க வேட்பாளருக்கு எதிராக ஒரு கழுதையை நிறுத்தியிருந்தாலும் அந்த கழுதை ஜெயித்திருக்கும். அந்த அளவுக்கு வெறுப்பை சம்பாதித்து வைத்திருந்தார்கள். அனால் மம்மியும் இப்படியே போனாங்கனா அவங்களுக்கும் தாத்தோவோட கதிதான்.

இது, சகுனிகளின் காலம். அண்ணா சொன்ன அந்த உதாரணம் வெறும் கனவு!

அதென்ன அண்ணா சொன்ன உதாரணம்? அதையும் பிரசுரிக்கலாமே!

நேர்மையான பத்திரிக்கையாளன் ஒரு பொழுதும் தன்னை குறிப்பிட்ட அரசியல் கட்சியோடு இணைத்து கொள்ள மாட்டான்...

இந்தியாவின் மதிப்பு குறைந்ததில் சோனியாவுக்கு தான் ஏகப்பட்ட வருத்தமாம்... அப்புறமென்ன, இந்தியாவை நல்ல விலைக்கு அடகு வைத்து விட்டு செட்டிலாகலாம் என்று சோனியா நிணைத்து கொண்டிருக்கும் போது, இப்படி மதிப்பு குறைந்தால் பிழைப்பு என்னாவது???

"மெளனமாக இருந்தே நித்திக்கு ஆதரவு தருகிறார் ஜெயலலிதா" என்று பைந்தமிழரெல்லாம் மதுரையில் பேசி கொள்வது ஜெயா காதுகளுக்கு இன்னுமா போகவில்லை??? "நித்திக்காக நேர்மையான சகாயத்தை தூக்கியடித்து விட்டு, நித்திக்கு வேண்டியவரை ஆட்சியாளராக ஜெயா நியமித்துள்ளார்" என்று முத்தமிழரெல்லாம் மதுரையில் புலம்பி கொண்டிருப்பது ஜெயா காதுகளுக்கு இன்னுமா கேட்கவில்லை????

அரசியல் அவலட்சனமாகும் போது ஆண்மீகமும் தலையிட்டு தேசத்தை காக்க வேண்டும்... அதே நேரத்தில் ஆண்மீகவாதிகளும் சுயலாபத்திற்காகவோ, தற்பெருமைக்காகவோ, அரசியல்வாதிகளின் பின் செல்வது மிக கொடிய கேட்டினை ஆண்மீகத்திற்கு கொண்டு வரும்...

ராஜபக்சேவால் கைது செய்யப்பட்டவர் என்பதற்காக ஃபொன்சேகா புனிதராகி விட முடியாது.... கொல்லபட்டார் என்ற காரணத்துக்காக பிரபாகரனும் புனிதர் ஆகி விட முடியாது.

சிங்கள வெறியர்களுக்கு ஒரு பொழுதும் உண்மை பேச வராது என்பதை நிருப்பித்துள்ளது பொன்சேகாவின் பேச்சு....

ஜெயாவின் உருப்படியான சாதனைகளில் முக்கியமானது "நித்தியை இளைய ஆதினமாக்கியது" அடுத்து "மன்னார்குடி கும்பலை தூக்கி கொஞ்ச நாள் ஜெயிலில் வைத்தது" மற்றபடி கொடுத்த வேதணைகளே அதிகம்...

சும்மா ஒரு மிரட்டல் வசூலுக்காகவே மீராவை தூக்கிபிடித்துள்ளார் மம்தா...

ஜெயலலிதாவின் உருப்படியான சாதனை என்ன?

1. 20 கோடி செலவில் ஓராண்டு சாதனை (???) என்ற பெயரில் விளம்பரமாய் மக்கள் பணத்தை வீணாக்கியது.
2. மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முனைவது.
3. சமச்சீர் கல்வியை சீர்குலைத்தது
4. அண்ணா நூலகத்தை நிறுத்த முயல்வது
5. புதிய தலைமைச் செயலகத்தை வீணாக்குவது
6. அமைச்சர்களை மாற்றுவது
7. நித்தியை வளர்த்து விடுவது
8. பால், பஸ் விலையை ஏற்றுவது......... இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

முருகன், முக மேல் இருந்த வெறுப்பினால்தான் ஜெ ஆட்சிக்கு வந்தார்னு ஒரு கதை திமுக ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது. அப்ப முக ஆட்சிக்கு வர்றதும் ஜெ மீதுள்ள வெறுப்பினால்தான் சொல்ல வேண்டியதுதானே. ஏன்ன இந்த வாதத்துக்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. கேட்டா கழுதையை நிறுத்தினாலும் ஜெயிக்கும் ஒரு காமெடி வேற. அப்ப திமுகாவுக்கு எதிரா பாஜனதாவுக்கு மக்கள் ஓட்டு போட்டிருக்கலாமே? ஏன் ஜெ வுக்கு ஓட்டளித்தார்கள்? ஏன்னா ஜெ ஏற்கனவே முதல்வராக இருந்தவர். அவரின் ஆட்சியையும் போனமுறை முக செஞ்ச ஆட்சியையும் ஒப்பிட்டு எது சரின்னு மக்கள் ஓட்டு போட்டாங்க. அவ்வளவுதான். சும்மா உங்க மனசாந்திக்காக மக்கள் ஜெ வுக்கு போடலைன்னு சொல்லிக்கிறீங்க. வேணும்னா ஜெ ஒன்னும் முதல்வராக இல்லைன்னு வேணும்னாலும் நினைச்சுக்கோங்க, என்ன குடி முழுகி போகிறது.

அரசின் ஓராண்டு சாதனைகள் ஒரு அரசின் அடிப்படை பணிகள் என்றால், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வினால் பால், பஸ் மற்றும் மின்கட்டண உயர்வு மட்டும் எப்படி மக்கள் விரோத அரசாகும். பஸ் தண்ணியில் ஓடவில்லை. பெட்ரோல், டீசலில் ஓடுகிறது என்பது கழுகாருக்கு தெரியாதா? கடந்த இரண்டு ஆண்டுகளில் 200% அளவுக்கு பெட்ரோல், டீஸல் விலை உயர்ந்துள்ளது தெரியாதா? உதிரி பாகங்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளதே? பத்திரிக்கை செய்திகளின் வெற்றியே மக்களின் அறியாமை தான் என்பதை என்னால் அறுதியிட்டு கூறமுடியும். மக்களுக்கு இருக்கும் அவசரத்தில் செய்திகளை ஆராய்ந்து புரிந்து கொள்ள நேரம் ஏது?

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை-அரசியலில் நிச்சயம் இல்லை..

நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன மத்திய அரசுக்கு?

  Displaying 1 - 25 of 52
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 03 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook