• தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு
  • பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவி: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு
  • எஸ்.ஆர்.எம். குழுமத்தில் ரூ.6 3/4 கோடி பறிமுதல்: வருமானவரித் துறை தகவல்
  • 42 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு உதவித் தொகையை நிறுத்தியது தமிழக அரசு
  • ஜெயலலிதாவுடன் இன்று தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சந்திப்பு? சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிக்கு செல்வது யார்? இந்தியா- இலங்கை இன்று பலபரீட்சை
  • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதியில் இங்கிலாந்து; பரிதாபத்தில் தென் ஆப்பிரிக்கா
20 June, 2013
மிஸ்டர் கழுகு: டெசோ...! புஸ்ஸ்ஸ்சோ
மிஸ்டர் கழுகு: டெசோ...! புஸ்ஸ்ஸ்சோ கழுகார் உள்ளே நுழைந்ததும், ''ப.சிதம்பரம்....'' என்று தொடங்கி வைத்தோம். ''அதற்கு நான் அப்புறம் வருகிறேன். கடந்த இதழில் நான் சொன்ன மதுரை ஆதீனம் - நித்தி மேட்டருக்கு முக்கியமான ஃபாலோ-அப் இருக்கிறது. அதை முத லில் சொல்கிறேன்'' என்று தொடங்கினார்!  ''மதுரை ஆதீனத்தின் கோபத்தையும், நித்தியின் பதவிக்கு ஆபத்து நெருங்கி விட்டதையும் கடந்த இதழில் சொல்லி இருந்தேன். இன்னும் சில அதிரடி சம்பவங்கள் மதுரையில் நடக்கத் தொடங்கி விட்டன. மதுரை ஆதீனம் மதுரையிலும் நித்தியானந்தா கொடைக்கானலிலும்தான் இருக்கிறார்கள். நித்தியின் அழைப்பின் பேரில் கொடைக்கானல் சென்ற ஆதீனம், உடனே திரும்பி விட்டார். 'எனக்கு அங்கே குளிர் சரிப்படலை’ என்று காரணம் சொன்னார். ஆனால், இருவருக்குமான மனவருத்தம்தான் ஆதீனம் திரும்பியதற்குக் காரணம் என்று அப்போது சொன்னார்கள்!'' ''இப்போதைய திருப்பங்களைச் சொல்லும்!'' ''கடந்த 12-ம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென மதுரை வந்தார் நித்தியானந்தா. அருணகிரி​நாதரிடம் சில. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 62

நித்தி, எனக்கும் வழக்குக்கும் சம்பந்தம் இல்லை. ஆனா நான் 8 கோடி தரவும் ரெடி. உனக்கு தான் சம்பந்தம் இல்லைல அப்புறம் என்னத்துக்கு நீ தர? என்னா கழுகார் லாஜிக் இடிக்கலயா? சும்மா அள்ளி விடுறது...!

-----------> இந்த பீலாவையும் நம்புவது தான் திமுகவின் திராவிடப் பகுத்தறிவு.

ஐயோ, சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. அன்புமணிக்கு ஏழாம் அறிவா, எழாத அறிவா?

"தனியாக தனது வீட்டுக்கு வந்தார். அங்கிருந்தபடி, கருணாநிதியைச் சந்திக்க சி.ஐ.டி. காலனி வீட்டுக்குச் சென்றார்."-----------> அது ஒன்னும் இல்லீங்க, டெலிகாம் துறை அமைத்துள்ள ஸ்பெக்ட்ரம் பங்கீட்டுக் குழுவுக்கு சிதம்பரம் புதிய தலைவர். அதனால் ஆலோசனை, அறிவுரை பெற அனுபவம் கொண்ட கருணாவைச் சந்தித்தார்.சி.ஐ.டி. காலனி வீடு தான் தலைமை இடம் என்பது சிதம்பரத்துக்கு நன்கு தெரியும்.

"ஆதீனத்துக்கும் நித்திக்கும் கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது."----> போப்புக்கும், இமாமுக்கும் இப்படி சம்மன் அனுப்பும் திராணி, இந்தியாவில் எந்த கோர்ட்டுக்காவது உண்டா?

மு.க ஈழம் பற்றீ பேசக்கூடாது.சொரனை இருந்தா.

இப்படி சிதம்பரம்மேல்லாம் கூப்பிட்டு மிரட்டும் அளவுக்கு அசிங்கபடணுமா? இப்படியெல்லாம் பண்ணி தன்னொட பரந்து விரிந்த குடும்பத்தொட வயித்துபாட்டுக்கு வழி தேடணுமா? இப்பவே எல்லாத்தியும் விட்டுட்டு வூட்ல ஈசாணி மூலைல சிவனேன்னு உக்காந்துகரது நல்லது. இல்லாங்காட்டி கார்த்தி சிதம்பரம், யூத்து பார்ட்டி யுவராசா எல்லாம் கூப்பிட்டு மிரட்டர நிலமை வரும். பார்த்து செய்.

"அருணகிரியை மதுரைக்கு அனுப்புவதா அல்லது கொடைக்கானலிலேயே தங்க​ வைப்பதா" - ஆதீனம் அரண்டு போயிருப்பாரே!

அது சரி முக அயோகியனா இருந்துட்டு போகட்டும்.. உங்க அந்த அம்மா பிங்களே எங்க காணோம்..ரொம்ப வேலை செய்து டயர்டாகி ரெஸ்ட்ல இருக்காங்ளோ....

அய்யோ கொல்றாங்களே! அய்யோ கொல்றாங்களே - நான் தமிழனை இப்படி கொல்றாங்கன்னு சொன்னேன்!

அமைச்சருக்கு அவர் பி.ஏ-வும் இல்லை, அரசு அதிகாரியும் இல்லை. பத்திரப் பதிவுத் துறையில் இருக்கும் சப் ரிஜிஸ்தார்கள். புதிய தலைமைச் செயலகம் கட்டுமானத்தில் தொடர்புடைய கம்பெனி - இப்படித் துண்டுச் செய்திகள் ஆங்காங்கே வெளியிடுகிறீர்களே - ஏதாவது பயன் உண்டா?? சம்பந்தப் பட்ட பெயர்களை சி பி சி ஐ டிக்கு, சி பி ஐக்கு அனுப்பி வைப்பீர்களா?? இல்லை வெற்றிடங்களை நிரப்ப மட்டும்தானா இவை ??

ஹ்கருணா நிதியின் கபட நாடகம் 2009 மே மாத மூன்று மணி நேர உண்ணா விரதத்தின் போதே எல்லோருக்கும் புரிந்து விட்டது ! இப்போது டெசோ, புஸ்ஸா ஆனது கண்ட பின்னும் இந்தக் கபட வேட தாரியைப் புரிந்து கொள்ளாவிட்டால் ஒன்று அவன் சர்வ மடையனாக இருக்க வேண்டும் ! அல்லது இவரைத் தமிழினக்காவலர் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் ஏமாளித் திமுக தொண்டனாக இருக்க வேண்டும். பாவம் அந்தத் தொண்டன் ! தான் ஒன்றும் புரியாத சர்வ மடையனாக எத்தனை ஆண்டுக்காலம் தான் தொடர்ந்து இருக்கப் போகிறானோ?

தனித்தமிழ்நாடு கேட்டார்கள் ஒரு காலத்தில்... அகண்ட தமிழகம் என்று கூட கற்பனை செய்தார்கள். அண்ணா மேடை போட்டு முழங்கினார். செல்வா தமிழ் ஈழம் என்ற வாதத்தை எடுத்துச் சென்றார். கூட்டுக் கழித்துப் பார்த்த இந்திரா அம்மையார், அண்ணாவிடம் பேசினார். தனித் தமிழ் நாடு கோரிக்கை கைவிடப் பட்டது.

தற்போது ப.சி, கலைஞரிடம் பேசியிருக்கிறார், தனித்தமிழ் ஈழம் கைவிடப்பட்டிருக்கிறது.

மொழிப் பிரச்னை தமிழர்களுக்கு பலமும் பலவீனமும். இந்தி கற்றிருந்தால் இன்றைக்கு தேசியக் கட்சியாக திமுக ஆகியிருக்கும். அதே சமயம், தமிழன் என்ற தனித்துவத்தை இழந்திருப்போம்.

ஈழப் பிரச்னை என்பது தமிழகத்தில் ஒரு அரசியல் ரீதியான அடையாளப் பிரச்னை மட்டுமே, ஒரு தீவிரப் பிரச்னை அல்ல, என்பதை ஈழத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள் என்பது தான் வேதனை.

இவர்களெல்லாம் மண் குதிரைகள். இந்தக் குதிரைகளை நம்பியா ஆற்றைக் கடப்பது?

கொட நாட்டு எஸ்டேட் 850 தொழிலாளார்கள் வேலைசெய்யும் நிறுவனம்

அருனகிரி பார்த்து, குரு மஹாசந்நிதானம் கையிலாயம் சென்று விட்டார் என்று நித்தி பேட்டி கொடுத்துட போறார்... உஷாராக இருங்க, உங்களுக்கு தைரியமில்லையென்றால் நெல்லை கண்ணன் அவர்களது உதவியை கேட்டு பெறுங்கள்...

எங்கிருந்து அருனகிரிக்கு வந்தது இம்புட்டு தைரியம்??? ஒரிஜினல் சிடியை கைப்பற்றி விட்டாரோ???

கலிப்போர்னியா தீர்ப்பு நித்திக்கு எதிராகவே தான் வரும்.. அந்த நேரம் அருனகிரிக்கு கூடுதலாக கொஞ்சம் போட்டு கொடுத்தால் அமுங்கிடுவாரு என்று நித்தி சொல்லியிருக்காராம்...

சிதம்பரம்: பெரியவரே, உங்களுக்கு ஏன் இந்த வம்பு?? சும்மாயிருக்காமல் தமிழீழம், டெசோ என்று ஏன் தொல்லை செய்றீங்க??? பாருங்க, தலைவரு ராகூலு கடுப்பாகி போயி இரண்டு ஜாமீனையும் ரத்து செய்யுங்க, உரப்பொடி ஊழலையும் ஆரம்பித்து வைச்சிடுங்க என்று கோபப்படுறாரு... கருணாநிதி: என்னங்க சிதம்பரம் இது?? நான் டெசோ தமிழீழம் என்று சொல்லி கனியை மந்திரியை ஆக்கிடலாம் என்று கணக்கு போட்டால், இளைய தலைவரு ராகூலு வேறு மாதிரி கணக்கு போடுதாரே?? சிதம்பரம், நீங்களே நேரில் வந்து இம்புட்டு தூரம் சீரயஸாக எச்சரிக்கும் போது, நான் எதுக்குங்க வம்பழக்க போறேன்.. போயி ராகூலிடம் சொல்லுங்கோ, அடியேன் கருணாநிதியால் சோனியா சர்க்காருக்கு யாதொரு தொந்தரவும் வராது.. அதே போல இந்த கருணாநிதியால் தமிழினத்திற்கும் யாதொரு நண்மையும் கிட்டாது என்பதை... சிதம்பரம், அப்படியே கனிக்கு மத்திய மந்திரி பதவி.. ஹி, ஹி.... சிதம்பரம்: என்னங்க ஆளு நீங்க?? செய்யுறதையும் செஞ்சுட்டு இப்படி மந்திரி பதவி கேட்டு கெஞ்சுறீங்களே... சும்மாயிருந்தாலாவது ஏதாவது கெஞ்சி கதறி கேட்டு இருக்கலாம், நீங்க டெசோ, குசோ என்று ஏழரையை இழுத்து விட்டு இருக்கீங்களே?? சரி, சரி, தலைவரு ராகூலு நல்ல மூடில் இருக்கும் போது கார்த்தியை பேச சொல்லி பார்க்கிறேன்...

கருணாநிதி கூட தமிழினம் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டாரே என்று ஆய்வில் இருந்த நடுநிலையாளர்களுக்கு, அண்பர்களே கருணாநிதியாகிய என்னை இது போண்ற சந்தேக நோக்கில் சிந்திக்காதீர்கள்.. நான் என்றுமே சுயநல குடும்பவெறி கருணாநிதி தான் என்று உரக்க உறுதியாக கூறியிருக்கிறார் நம் அரசியல் சகுனி கருணாநிதி...

அட அல்ல கைகளா உங்க அம்மா ஈழப்பிரச்சனையை என்ன செய்கிறார் என்று பார்க்கலாம். பதவிக்காவே ஈழப்புராணம் பாடிய உங்க அம்மா வேஷம் ஒரு நாள் கலையத்தான் போகிறது. அப்போது புரியும் கருணாவும் இவரும் ஒன்று என்று. எருமை மாடு போல் ஒருவனை சுவீகரப்புதல்வனாக எடுத்து அவனுக்கு பல கோடி செலவு செய்து கல்யானம் பண்னுகிறேன் என்று தான் மேக்கப் போட்டு விட்டு சூட்டிங் முடிந்தவுடன் அருமை மகனை துரத்திவிட்ட உங்க அன்பு அம்மா நடிப்பு ரொம்ப நாளைக்கு செல்லாது.

Mr Karunanidhi and Mr P Chidambaram - shame on you.

இரண்டு பேருமே சோனியா அடிமை. ப.சி. நேரடி அடிமை. மு.க. அடிமைக்கு அடிமை. இதில் ஒருவரை மட்டும் குறை கூறுவது தவறு. எய்தவன் இருக்க அம்பை நோவானேன்.

நாமதான் இவர்களுக்கு அடிமையாக இல்லாமல் சூதனமாக இருக்கணும்.

சரித்திரத்தின் பக்கங்களைத் திருப்பிப் பார்த்தால் இந்தியாவில் அமைந்த சாம்ராஜ்யங்கள் எல்லாமே விந்திய மலைக்கு மேலே உள்ள பகுதிகளை ஆண்டு அரசாண்டதாக மட்டுமே இருக்கும். கிறிஸ்து பிறப்பதற்கு முன் அமைந்த குப்த சாம்ராஜ்யமும், மௌரிய சாம்ராஜ்யமும் கூட விந்திய மலைக்குக் கீழே ஒரு சில ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செலுத்த முடிந்தன என்பது மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தென்னகத்தையும் தங்களது ஆளுமைக்குள் கொண்டுவர முடியவில்லை.

முகலாய சாம்ராஜ்யம் தென்னகத்தைத் தன்வசப்படுத்த நடத்திய முயற்சியுடன் அந்த சாம்ராஜ்யமே சீர்குலைந்து மராட்டியர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. மராட்டியர்களும் சரி, ஒட்டுமொத்தத் தென்னகத்தையும் தங்களது ஆளுமைக்குள் கொண்டுவர முடியவில்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அமைந்தபோதுகூட, திருவிதாங்கூர் தொடங்கி மைசூர், ஹைதராபாத் போன்றவை பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆளுமைக்குள் கொண்டுவரப்படவில்லை.

விந்திய மலைக்கு மேலே உள்ள பகுதிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு என்று பிரிக்கப்படாமல் ஒரு குடையின்கீழ் ஆட்சி செய்யப்பட்டதால் கலாசார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் அவை ஒன்றுபட்டு நிற்பதற்கான காரணிகள் இருந்தன. தக்காண பீடபூமி இந்திய தீபகற்பத்திலிருந்து வித்திய மலையால் பிரிக்கப்பட்டே இருந்தது என்பதை மனதில் கொள்க. மொழி, கலாசார, உணவுப் பழக்க ரீதியாகத் தெற்கு தனித்தன்மையுடன் விளங்குகிறது.

இலங்கையின் அரசியல் சட்டம் மாற்றப்பட்டு இந்தியாவைப்போல நாடாளுமன்ற ஜனநாயக முறை அமலுக்கு வராதவரை, பெருவாரியான சிங்களர்களின் பிரதிநிதி மட்டுமே சர்வ வல்லமை பெற்ற அதிபராக முடியும் என்கிற நிலைமை தொடரும்வரை, இலங்கைவாழ் தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை. இதை வலியுறுத்த அங்கேயும் யாருமில்லை, இந்திய அரசும் தயாராக இல்லை, சர்வதேசத் தலைவர்களும் அக்கறை காட்டுவதில்லை.
இலங்கையின் அடிப்படைப் பிரச்னையே இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் முழுமையான பங்கு அளிக்கப்படவில்லை என்பதுதான். அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதால்தான், ஏன் மறுக்கிறீர்கள் என்று கேட்டவர்களை வன்முறையால் ஒடுக்கி, மனித உரிமைகள் மிதிக்கப்பட்டபோதுதான், அந்த மண்ணில் மிதிவெடிகள் பரவலாகின.

கருநாநிதி க்கு டெசோ ஒரு கண்துடைப்பு முகமூடி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சிலர் வங்காள தேசத்தை இலங்கை யுடன் ஒப்பிடுவது தவறு. கிழக்கு பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்தியா தஞ்சம் அளித்ததால் பாகிஸ்தான் தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி சூனியம் வைத்துக்கொண்டது. இந்தியா முதலில் செய்த அத்து மீறிய செயல் ஆபரேஷன் பூமாலை. அதை மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் ஜெயவர்த்தனே யே பிரச்சினையை அப்போதே முடிவுக்கு கொண்டு வந்திருப்பார். இந்த வசவுகளை எல்லாம் இந்தியர்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய அவலம் வந்திருக்காது.

  Displaying 1 - 25 of 54
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 22 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook