Latest News
Published on :30-11--0001 06:00 AM
மிஸ்டர் கழுகு: மதுரை கலெக்டர் தலை தப்புமா?
மிஸ்டர் கழுகு: மதுரை கலெக்டர் தலை தப்புமா? பொங்கல் கொண்டாடி முடித்து​விட்டு உற்சாகமாக வந்தார் கழுகார்.  ''தலைவர்களின் பொங்கல் எப்படி இருந்ததாம்?'' என்று தூண்டிவிட்டோம். ''பொங்கல் பண்டிகையைத் தமிழர் திருநா​ளாகக் கொண்டாடி மகிழ்வார் கருணாநிதி. இந்த ஆண்டும் கோபாலபுரம் இல்லம் நோக்கி அவரது கட்சியினரும் ஆதரவு அமைப்பினரும் அணிவகுத்தனர். வழக்கம்போல அனைவருக்கும் பத்து ரூபாய் கொடுத்து இருக்கிறார். அந்தப் பத்து ரூபா யை வாங்குவதற்குத்தான் கடுமையான போட்டி.'' ''பத்து ரூபாய்தான் கொடுப்பாரா?'' ''பொங்கலுக்காகவே பத்து ரூபாய் கட்டு மாற்றி வைத்துவிடுவார்கள். ஒரே ஒரு ஆண்டு மட்டும் 100 ரூபாய் கொடுத்தார். மற்றபடி, அனைத்து ஆண்டுகளும் பொங்கல் தினத்தில் பத்து ரூபாய்தான். அதுவும் முகம் பார்த்துதான் கொடுப்பார். கும்பலோடு வந்து யாரோ ஒரு தொண்டர் கையை நீட்ட, 'யாருன்னு தெரியலைய்யா’ என்று பத்து ரூபாயைக் கொடுக்கவில்லையாம்.'' ''அன்று நடந்த அரசியலுக்கு வாரும்!'' ''மகன்கள் ஸ்டாலின், தமிழரசு, மகள் செல்வி, அக்கா மகன் அமிர்தம்,. . .

COMMENT(S): 71

இவர் குடும்பம் நன்றாக இருகிறதென்றால் கடவுள் இல்லை என்று அர்த்தம்!

நடு ரோட்டில் சிலை வைப்பது கூடாது என்பது போலவே கண்ட இடங்களில் பிணங்களை புதைத்து அதற்கு எதாவது பேர் வைத்து பச்சை துண்டை போர்த்தி வைப்பது கூட தவறு. உதாரணத்துக்கு திருச்சியில் பல இடங்கள் - மெயின்கார்டு கேட்; மார்க்கெட் போல.

Along with the public holiday list they should also consider restricting people in power - The below will bring in some accountability and stop feudalistic politics.

President - 1 Term
Prime Minister - 2 Terms
Chief Minister - 3 Terms
MLA MP - 4 Terms

இது என்ன தலைப்பு?.ஒரு அரசு அதிகாரி தன் கடமையை செய்கிறார்.அதுவும் குழு நிலையில்.இந்த சந்தேகத்திற்கு அவசியம் என்ன?

கனிம வளம், சுரங்கத்தொழில் அரசு சார்ந்ததே.தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் தரலாம்.சுரண்டுதல் என்னும் நிலைப்பாடு ஆகாது.

விவேகானந்தரின் உடுப்பு கிண்டல் செய்யப்பட்ட இடத்தில், ப்ரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ் என அவர் ஆற்றிய உரை உலக பிரசித்தம் பெற்றது.

இந்த ஆண்டை சகோதரத்துவ ஆண்டாக அறிவியுங்கள்.விவேகானந்தருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் சகோதரத்துவம் நடை முறை வாழ்க்கையாக தளம் அமையுங்கள்.

பங்களிப்பு சகோதரத்துவம் என பகிருங்கள்.ஆதிக்கம், வெட்டு, ஊடறு நிலையில்லா வாழ்வியல் சகோதரத்துவம் என நிறுவுங்கள்.செலவு இல்லை.பலன் அதிகம்.அன்னாரது ஆன்மா வாழ்த்தும்.

இங்கும் அரசியலை புகுத்தினால் எப்படி?

வழக்கு, என்பது வாழும் கலை பயிற்சி.பழக்க வழக்கம் என்பது பயிற்சியினால், பழக்கத்தால் வாழும் கலை பயிலுவது, அனுபவ உறருதல், புரிதல்.

உன் புரிதல் இது.,ஆனால் நடைமுறை சமூகத்தில் சிக்கல் ஏற்படுத்தாமல் இருக்க சராசரி பெரும்பான்மைக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டம் இவ்வாறு சொல்லுகிறது.அதை மீறிய மிகு பலன் உன் திறனுக்கு, தனித்துவத்தால் கிடைக்குமெனில் ஒப்புதல் ஏற்படுத்தி பெற்றுக் கொள் என்னும் நெறி முறை சட்டம், நீதி மன்றம், துறை செயல்பாடுகள்,, பெரியோர்கள் ஏற்க வேண்டிய பொறுப்பு.

கட்டுப்படுத்துதல், அல்ல.சர்வாதிகாரத்தால், பெரும்பான்மை பலத்தால் திணிப்பது அல்ல.அன்னிலையில் பார்க்கும் போது அரசு விதி நிறுவினால், பி ஆர் பி குழுமத்தின் மிகு நிதி அரசை சேரும்.யாருக்கும் இழப்பு இல்லாத தீர்வு வரும்.

அரசு சட்டம் நிரூபிக்கும் எந்த ஒரு சான்றும், காக்னிசபிள் அஃப்ஃபென்ஸ் என்ற வகையில் நீதி மன்றம் செல்லாமலேயே தீர்வாகும் நிலை பெற்றது.புலனாய்வுத்துறையின் விசாரணையை ஒட்டி நிகர் செய்யும் உரிமையை குற்றம் சுமத்தப்பட்டவருக்கு தருவது.

புனித வெள்ளி, பக்ரீத்துக்கு எல்லாம் விடுமுறை தேவையில்லை. அதைவிட மிக அதிக மக்கள் கொண்டாடும் ஆயுத பூஜை, விநாயகர் சதூர்த்திக்கு விடுமுறை தேவை.

மறைந்த தலைவர்களுக்கு விழா எடுப்பதாலோ, நடு ரோட்டில் சிலை வைப்பதாலோ, நினைவு நாள் கொண்டாடுவதாலோ நாட்டிற்கு எந்த நன்மையும் கிடையாது.... எம்.ஜி.ஆர். சிலைக்கும் சரி, விவேகானந்தர் விழாவுக்கும் சரி, அதனால் என்ன பயன், அரசுப் பணம் வீண்.

முதல்ல தேவையில்லாத விடுமுறகளை குறைக்கவேண்டும்... அப்பொழுதுதான் நிர்வாகமும் ஒழுங்காக நடக்கும், தமிழகமும் உருப்படும்...

1. தீபாவளி - 1 நாள்
2. பொங்கல் - 2 நாட்கள்
3. ஆங்கில வருடப்பிறப்பு - 1 நாள்
4. தமிழ் வருடப்பிறப்பு - 1 நாள்
5. கிருஸ்மஸ் - 1 நாள்
6. புனித வெள்ளி - 1 நாள்
7. ரம்ஜான் - 1 நாள்
8. பக்ரீத் - 1 நாள்
9. சுதந்திர தினம் - 1 நாள்
10. மே தினம் - 1 நாள்
11. உள்ளூர் விடுமுறை - தேவைக்கேற்ப

மேற்கண்ட நாட்களுக்கு மட்டும் விடுமுறை விடலாம்... அதிகத்தேவையெனில் சொந்த விடுப்பு எடுத்துக்கொள்ளச்செய்யலாம்...

மதுரை கலெக்டர் தலை தப்புமா?......மக்களும்,ஊடகங்களும்,பத்திரிக்கைகளும்,விழிப்புடன் இருந்தால் தப்பும்......

இவர்கள் சொன்னதற்கு தலை ஆட்டுவதற்கு, மேலிடம் என்ன தலை ஆட்டி பொம்மையா?
சொன்னவன் சொன்னான், கேட்டவனுக்கு மதி......?

If JJ wants all the 40 M.P. seats in 2014 election she MUST punish the granite mafias and prove her mettle otherwise she won't get any seats and TN people know to whom to vote. Both Ms. Sahayam and Misra had done tremondous work under tremondous pressure from all quarters, their hard work shouldn't go wasted JJ must react her authority with all severity in this case

கொடுக்கறதே 10 ரூபாய், இதில் ஆள் பாத்து ஆதாயம் பார்த்து வேற கொடுக்கறது. இதுவே எம்.ஜி.யாராக இருந்தால் அள்ளிக்கொடுப்பார். நமக்கு வாங்கித்தான் பழக்கம், அதான் கொடுக்கும்போது பாத்து கொடுக்க வேண்டியிருக்கு.

'நீங்கள் குறிப்பிடும் மனிதரோடு ஆரம்பத்தில் சிக்கல் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால், அதில்தான் சமாதானம் ஏற்பட்டு விட் டதே. அப்புறம் எதற்காக விசாரணை என்று அலைக்கழிக்கிறீர்கள்’

ஆட்சிக்கு வந்ததே இந்த மாதிரி பண முதலைகளிடம் பணம் பிடுங்குவதற்காக, பிஆர்பி கேசும் ஒன்னுமில்லாமல் போகப் போகுது நாடாளுமன்றத்துக்கு தேவையான அறுவடையை செய்து முடித்ததும், ஓட்டு போட்ட மக்கள் நல்ல ஏமாளிகள் தான், தேர்தல் நாளன்று கிடைக்கும் 1,000 ரூபாய் திருப்தியுடன்

சொல்லப்போனால் அந்த பத்து ரூபாயைக் கொண்டு போய் தான் அதைப் பெறும் தொண்டர்கள் நிர்வாகிகள் பொங்கல் பொங்கிச் சாப்பிடும் நிலையில் இல்லை. ஆனாலும் தங்கள் கட்சித் தலைவரிடமிருந்து பெறும் பத்து ரூபாய் அவர்களுக்கு கோடி ரூபாய்க்குச் சமானம். எனவே அதை கிண்டலடிப்பது சரியல்ல.

தானும் தன் குடும்பமும் கோடி கோடியாய் கொள்ளையடித்துவிட்டு பத்து ரூபாய்க்கு அடிச்சு மோதும் பிச்சைக்காரர்களாக தொண்டர்களை வைத்திருக்கிறாரே?

இவர் குடும்பம் நன்றாக இருகிறதென்றால் கடவுள் இல்லை என்று அர்த்தம்!

எல்லா கிரானைட் கற்களும் நல்ல கற்கள் அல்ல. கட்டிங் பண்ணி அடுக்கி வைத்திருப்பதால் அவை எல்லாம் விலை உயர்ந்த கற்கள் ஆகிவிடாது. ஏலம் விடும் போது தான் அதன் உண்மையான மதிப்பு தெரியும். ஆனால் ஏலம் இன்டெர்னேஷனல் டெண்டர் ஆக இருக்க வேண்டும், அப்போது தான் உள்ளூர் தலைகள் அதில் அரசியல் பண்ண முடியாது. உண்மையான விலையும் கிடைக்கும்.

தேவையெனில் அன்சுல் மிஷ்ரா மற்றும் சஹாயம் இருவரும் அஷோக் கெம்கா போல் அவர்கள் எழுதிய குறிப்புகள் நாடறிய பகிரங்கபடுத்தவேண்டும். துனிச்சலாக பத்திரிக்கை மற்றும் ஊடகங்களை சந்த்தித்து பேட்டி கொடுக்கவேண்டும். குறுக்கே வரும் முன்னாள்,இன்னாள் மந்திரிகளை காட்டிகொடுக்கவேண்டும்.

"அதுவும் முகம் பார்த்துதான் கொடுப்பார். கும்பலோடு வந்து யாரோ ஒரு தொண்டர் கையை நீட்ட, 'யாருன்னு தெரியலைய்யா’ என்று பத்து ரூபாயைக் கொடுக்கவில்லையாம்.''அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் பொழுது மட்டும் முகம் தேவைப்படுகிறது ஒட்டு வாங்கும் பொழுது முகம் தெரியாத வாக்காளரின் கால் இருந்தால் போதுமானது விழுந்து ஓட்டு கேட்பதற்கு.பாவம் அந்த தொண்டர் இருப்பினும் திருந்தமாட்டார்கள் அடுத்த வருடம் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று இப்பொழுதே தவம் இருப்பார்கள்.

நாயர் புலிவால் பிடிச்ச கதைதான் போங்க! கிரானைட் விவகாரத்தில் 'சகாயமாய்' இல்லாதவர் மாற்றப்பட்டார் இவரோ அன்ஸுல் மிஸ்ராவாக இல்லாமல் அனல் மிஸ்ராவாகத் தெரிகிறார். ஏதோ தி மு க ஆட்களை மாட்டவிடலாம்னுதான் ஆரம்பிச்சோம் ஆனால் மாட்டறது நம்ம ஆட்கள்தான்னு தெரிஞ்சுப்போச்சா இல்லை 39 தொகுதி செலவையும் ஏத்துக்கிறேன்னு சொன்னது வொர்க் அவுட் ஆயிடுச்சோன்னு சந்தேகமாயிருக்குப்பா! ஒன்னும் புரியலை!

விவேகானந்தருக்கு அதிகத் தொடர்புடைய தமிழகத்தில் மிகவும் சிறப்பாக அரசே கொண்டாடி இருக்க வேண்டும். ஏனோ தெரியவில்லை*** தமிழக மீடியாக்களும் புறக்கணித்து விட்டன. நடிகர் பிறந்த நாளுக்கு பக்கத்தை நிரப்பும், நாள் முழுதும் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளி பரப்பும். ஆனால் நாட்டுக்குப் பெருமை சேர்த்த வீரத்துறவியை மறந்து விடும்.

வழக்கம்போல அனைவருக்கும் பத்து ரூபாய் கொடுத்து இருக்கிறார்.** அடிப்பது பல லட்சம் கோடிகள் அளப்பது வெறும் பத்து ரூபாய்.

If JJ wants all the 40 M.P. seats in 2014 election she MUST punish the granite mafias and prove her mettle otherwise she won't get any seats and TN people know to whom to vote. Both Ms. Sahayam and Misra had done tremondous work under tremondous pressure from all quarters, their hard work shouldn't go wasted JJ must react her authority with all severity in this case

>>>"சொந்த ஊருக்கு போய்விட்டதால் கோட்டைதான் காற்றாடியது."<<"சொந்த ஊருக்கு போய்விட்டதால் கோட்டை காற்றாடியது.""சொந்த ஊருக்கு போய்விட்டதால் கோட்டையும் காற்றாடியது."< என்று இருக்க வேண்டும்.

நீங்களே இந்த மூன்று வாக்கியங்களையும் படித்துப் பாருங்கள். வித்தியாசம் தெரியும்.


சிலைகளை எல்லாம் அகற்றி அவற்றை ஒரு சிலைக்காட்சி (பொருட்காட்சி மாதிரி) அமைக்கலாம். அப்புறம் அவற்றை எல்லாம் யாராவது எடுத்து கொண்டு போய் பள்ளத்தை நிரப்ப உபயோகிக்கலாம்.

கட்சிக்காரர்களின் பேச்சையும், அரசியல்வியாதிகள் கூறும் பொய்களையும் நம்பி மாவட்ட ஆட்சியாளர்கள் மாற்றப்படுகிறார்கள் என்றால், தமிழனின் தலைவிதியை ஒண்ணும் செய்ய முடியாது. இது ஜெ. இன்னும் திருந்தவில்லை என்பதையே காட்டும்.

வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் எனில் அன்சுல் மிஸ்ரா போன்ற நேர்மையான அதிகாரிக்கு பாதுகப்பும் ஊக்கமும் கொடுத்து, கோடிக்கணக்கில் திருடிய க்ரேனைட் கொள்ளையர்களை அழிக்கவேண்டும். இதனைச் செய்தால், மதிப்புகுரிய முதல்வர் அம்மா அவர்களின் துணிச்சலான செயலால் மக்களிடையே பாராட்டும், செல்வாக்கும் பெருகும். வரப்போகும் தேர்தலில் மட்டுமல்ல, எப்போதுமே வெற்றி நிச்சயம்

சின்னசாமி, சிங்கப்பூர்

 Displaying 1 - 25 of 46
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 23 Jan, 2013 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook