'அருந்தவப் பன்றி’ சுப்பிரமணியபாரதி பாரதி கிருஷ்ணகுமார், தி ரூட் வெளியீடு , 7/4 ஏழாவது தெரு, தசரதபுரம், சாலிகிராமம், சென்னை.93 விலை 200 பாரதி வாழ்ந்ததே 39 ஆண்டுகள். அவர் எழுதியதில் சீனி.விசுவநாதன் தொகுத்தது மட்டும் பல நூறு பக்கங்களைத் தாண்டிப் போய்க்கொண்டே இருக்கிறது தொகுதி தொகுதியாக. எழுதும்போது திருப்தி அடையாமல் கிழித்துப் போட்டவை எத்தனையோ. ஆனால், பாரதி தன் வாழ்வில் ஆறு ஆண்டுகள் எதையும் எழுதாமலே இருந்திருக்கிறார் என்கிற ஆச்சர்ய அதிர்ச்சியைக் கண்டுபிடித்துச் சொல்லி இருக்கிறார் பாரதி கிருஷ்ணகுமார். 'வாராய்! கவிதையாம் மணிப்பெயர்க் காதலி! பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன. நின்னருள் வதனம்நான் நேருறக் கண்டே!’ என, பாரதி எழுதிய இந்த மூன்று வரிகளுக்கு என்ன காரணம் இருக்க முடியும் என்ற கேள்வியில் பிறந்துள்ளது இந்தப் புத்தகம். எட்டயபுரம் வீதிகளில் காந்திமதி நாதன் கிண்டல் செய்த சிறுவயதுக் காலம் முதல் திருவல்லிக்கேணி யானையின் காலால் மிதிபட்டது வரை, கவிதாதேவியின் காதலைத் துறக்காமல். . .
திருச்சி காரன் அவர்களே இது ரொம்ப ஒவெர் பாரதிக்கு மீடியா புகழா! அவர் வாழ்ந்த காலத்தில் அவரை யாரும் கவனிக்கவே இல்லை. அவர் போல் ஒரு கவி பிற்ந்ததும் இல்லை பிறக்க போவதும் இல்லை....
மொத்த வாழ்க்கையே 39 வருடம். அதில் ஆறு எழுதாமலே போனது. பத்து வருடம் சிறுவனாக. மீதம் இருக்கும் 23 வருடங்களில் சுதந்திர போர் வீரனாக, கவிஞனாக, எத்தனை சாதனைகள்? ஒரு அரிய, அற்புதமான மனிதர்.
COMMENT(S): 15
அந்த காலத்திலெ பால்ய விவாகம் தானெ ஐயா நடந்தது, இப்பொதுமெ அங்காங்கெ நடக்குது அதிசயமா கேனத்தனமான கேள்வி பால்ய விவாக்த்தை பாரதி துவங்கினார்னு
திருச்சி காரன் அவர்களே இது ரொம்ப ஒவெர் பாரதிக்கு மீடியா புகழா! அவர் வாழ்ந்த காலத்தில் அவரை யாரும் கவனிக்கவே இல்லை. அவர் போல் ஒரு கவி பிற்ந்ததும் இல்லை பிறக்க போவதும் இல்லை....
fantastic
அருமை."காந்திமதி நாதனைப் பார்-அதிச் சின்ன பையல்" என்ற குறும்பு செயதவராயிற்றே இப்பாடிடும் குயில்.
14 வயது பாரதிக்கு, 7 வயதில் மனவி? குழந்தை திருமணத்தை இவர்தான் தொடங்கி வைத்துளார்போல் தெரிகிறது. இந்த புரட்சி பாரதிக்கு புரட்சி என்ன ஆனது.
"கட்டுப்பெட்டித் தனமான நெல்லைச் சிறுவனாக காசிக்குப் போன பாரதி, அங்கேதான் கிராப் வைத்தார்."----------> இது ஓவர் குசும்பு!!!
மொத்த வாழ்க்கையே 39 வருடம். அதில் ஆறு எழுதாமலே போனது. பத்து வருடம் சிறுவனாக. மீதம் இருக்கும் 23 வருடங்களில் சுதந்திர போர் வீரனாக, கவிஞனாக, எத்தனை சாதனைகள்? ஒரு அரிய, அற்புதமான மனிதர்.
மணி எக்கோவா?
பாரதி ஒரு "புதிர்"
பாரதி மாதிரி கவிஞர்களை தமிழ்னாட்டில் இருட்டடிப்பு செய்தனர் திராவிடம் பேசும் சிந்தனையாளர்கள்.
பாரதிக்குக் கிடைத்த மீடியா புகழ் அவரின் தகுதியொத்த பல கவிஞர்களுக்குக் கிடைக்காமல் போனது கொடுமையான விஷயம்.
அரிய செய்தி. நன்றி.
அருமை
அருமை
அருமை