• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
24 May, 2013
சகாயத்தை சாய்த்த ஆஸ்ரா... ஆஸ்ராவை அசைத்த சகாயம்!
சகாயத்தை சாய்த்த ஆஸ்ரா... ஆஸ்ராவை அசைத்த சகாயம்! கமிஷனர் கண்ணப்பன், கலெக்டர் சகாயம், எஸ்.பி-யான ஆஸ்ரா கர்க் - அதிரடிக்குப் பிரபலமான இந்த மதுரை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்றாவது விக்கெட்டும் வீழ்ந்து விட்டது. கலெக்டர் சகாயத்துக்கு டிரான்ஸ்ஃபர் உத்தரவு வந்த மறுநாளே, ஆஸ்ரா கர்க் திருப்பூருக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்படவே, 'என்னதான் நடக்கிறது?’ என்று புரியாமல் குழம்பிக்கிடக்கிறார்கள் மதுரை மக்கள்.  ஆஸ்ராவுக்கும் கிரானைட் பின்னணி? மூன்றெழுத்து கிரானைட் கம்பெனிக்கு கிடுக்கிப்​பிடி போட்டதுதான் சகாயம் டிரான்ஸ்ஃபருக்கு முக்கியக் காரணம் என்று கடந்த இதழில் கழுகார் சொல்லி இருந்தார். ஆஸ்ரா கர்க், டிரான்ஸ்ஃபருக்கும் அதையேதான் காரணம் சொல்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன், கிரானைட் அதிபரின் மகன் மீது நிலஅபகரிப்பு வழக்குப் போட்டார் ஆஸ்ரா கர்க். அப்போது தலைமறைவாக இருந்துகொண்டே, புகார் கொடுத்தவரை அந்தர்பல்டி அடிக்க வைத்தார் கிரானைட் அதிபரின் மகன். இதில் கடுப்பான எஸ்.பி., கிரானைட் குவாரிக்குள் நடந்த ஒரு மர்ம மரணம் குறித்து. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 29

இப்படி அடித்து கொள்வது போல செட் அப் செய்து விட்டு இட மாற்றல் தர மேலிடம் நினைத்திருக்குமா?

சகாயம் இப்பவாது உலக நடப்பு தெரிஞ்சிட்டார்.

மதுரையை யாராலும் காப்பாற்ற முடியாது.......... ஏனென்றால் மதுரை மக்கள் அப்படி. நித்தியானந்தாவையே சகித்துக்கொண்டு மீசையை மட்டுமே வளர்த்துக்கொண்டு அலைபவர்கள் அவர்கள் ==> கவிதா !!!, எத்தனை முறை மதுரைக்கு விஜயம் செய்துள்ளீர்கள்? மதுரையைத்தவிர மற்ற இடங்களெள்ளாம் சுபிட்ஷமாக இருப்பதாக நினைப்போ? முதலில் திரைப்படம் பார்ப்பதை குறைத்துக் கொண்டு உன்மை நிலை என்னவென்று தெரிந்துகொண்டு , பிறகு 'கருத்து' சொல்லுங்கள்...

இனி மேல் கொண்டாட்டம் தான் பொட்டாருக்கும், அட்டாக்குக்கும், கிரானைட் திருடர்களுக்கும் முக்கியமாக அஞ்சா நோஞ்சர் (மன்னிக்கவும்) நெஞ்சருக்கும் ! ஜெயலலிதா தொடர்ந்து செய்து வரும் தவறுகளில் இதுவும் ஒன்று ! கட்சி நடத்த பணம் வேண்டுமே ! சகாயத்தையும், ஆஸ்ரா கர்க்கையுமா போய் கேட்கமுடியும் ! அவ்வப்போது முடிச்சவுக்கிகள் மொள்ளமாரிகளிடம் போய் கையேந்தினால் தானே கருப்புப் பணம் கொட்டும்! யாருக்கும் வெட்கமில்லை ! ஊழல் அரசியல் வாதிகளுக்கு வெட்கமில்லை ! அவர்களைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் மக்களுக்கோ வெட்கமே கிடையாது ! வாழ்க இந்திய ஜன இல்லை பண நாயகம்! சும்மாவா சொன்னார் பெரும் தலைவர் , கர்ம வீரர் காமராஜர் ! இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளும் ஒரே குட்டையில் அதுவும் நாற்றமுடைத்த ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள் என்று ! சத்தியமான கணிப்பு !

எது எப்படியோ, அழகிரி வகையறாவுக்கு கொண்டாட்டம், பி.ஆர்.பி. கிராணைட் வகையறாவுக்கு திருவிழா, நித்திக்கோ ஆணந்த பெருவிழா.... மதுரை மக்களுக்கோ மிக பெரிய ஏமாற்றம்... வாங்குவதை வசமாக வாங்கி கொண்டு மக்களை ஏமாற்றுவது ஜெயலலிதாவுக்கு ஒன்றும் புதிதல்லவே....

இவர்கள் எங்கிருந்தாலும் நல்லது செய்யட்டும். மற்றபடி இங்கு சொல்லப்பட்ட கிரானைய் புள்ளியை 5 மணி நேரம் காக்க வைத்தது அரசாங்க அதிகாரி என்ற ஆணவத்தினால் தானே? பெரும் தொழில் சாம்ராஜ்யம் நடத்தி வரும் ஒருவரின் 5 மணி நேரத்தை வீணடித்தது தவறு. அமெரிக்காவில் கூட கோர்ட்டுகளில் வழக்கறிஞர்கள் ஆஜராகும் சிறு வழக்குகளை முதலில் முடித்து அவர்களை அனுப்பி விடுவார்கள். காரணம் அவர்கள் நேரம் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக. குற்றம் செய்திருந்தால் தகுந்த ஆவனங்களுடன் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டுமே தவிர அவரின் நேரத்தை வீணாடிப்பதற்கு எஸ்.பிக்கு என்ன உரிமை இருக்கிறது. தொழிலதிபர் என்று மட்டுமல்ல் வேறு எந்த பொது மக்களின் நேரத்தை வீணாடிப்பதற்கும் அரசாங்க சம்பளம் வாங்கும் அதிகாரிகளுக்கு உரிமையில்லை.

அஷ்ராக் கொஞம் அதிகம் ஆடிட்டார்

இப்படி எல்லாம் கலெக்டர், கமிஷனர், எஸ்.பி என எல்லோரையும் குவாரி சொந்தகாரகள் பேச்சைக் கேட்டு மாற்றவா மக்கள் அதிமுகவுக்கு ஓட்டு போட்டார்கள். எம்.பி தேர்தலில் அதிமுக போணி ஆகாது. மக்கள் என்ன முட்டாள்களா???

இதை நம்ப முடியவில்லை. இருவரையும் பிடிக்காத யாரோ இவ்வாறு வதந்தி கிளப்பி விட்டிருக்கலாம். நேர்மையான அதிகாரிகளை பற்றி எழுதும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விகடன் நிருபர்கள் பரபரபிற்காக உண்மையை குழப்பக்கூடாது.

அப்ப ட்ரான்ஸ்ஃபருக்கு நித்தி காரணமில்லையா?

மதுரையை யாராலும் காப்பாற்ற முடியாது.......... ஏனென்றால் மதுரை மக்கள் அப்படி. நித்தியானந்தாவையே சகித்துக்கொண்டு மீசையை மட்டுமே வளர்த்துக்கொண்டு அலைபவர்கள் அவர்கள்.

வீரணனைக் கொன்ற விஷயத்தில், அவனது மனைவியை விடுவித்த ஆஸ்ரா கர்க்கின் முடிவே சரியாகப்படுகிறது.! பல நாட்கள் நடந்த கொடுமைகளை அனுபவித்த மனைவி, அதன் உச்சகட்டமாக நடந்த அந்த நிகழ்ச்சியில் பொங்கி எழுந்ததாகத்தான் அதைக் கருத வேண்டும்.! இந்த விஷயத்தில் சகாயம் சறுக்கி விட்டார்.!

ஒரே உறையில் இரண்டு கத்திகள் மட்டும் அல்ல, புத்திகளும் இருக்க முடியாது.

Sakayam ,anna you are my brother

சகாயம், அசகாயமாக மாறுவாரென்று பார்த்தால், சக காயம் (காயம்=உடல்) ஆக அல்லவா மாறிவிட்டார்.

மக்களுக்கு சேவை செய்ய பணியமர்த்தபட்டவர்கள் ஏதோ தாங்கள் கடவுளின் மறுஅவதாரம் என்று நினைப்பதுதான் இதர்க்கெல்லாம் காரணம்.

அதனால், வீரணனைக் கொலை செய்வதுதாந்-- இது உண்மையானால் சகாயம் செய்தது தவறு...

நாட்டின் பல பிரச்சினைகளுக்கு காரணம்... ஈகோ!

இந்தியாவில் குடிமைப்பணிகள் உட்பட, பல்வேறு உயர் பதவிகளில் இருக்கும் அரசு அதிகாரிகளும் தங்களுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைத்துக்கொள்கின்றனர். ஆனால், எந்த ஓர் அதிகாரியும் தான் மக்களுக்குச் சேவை செய்வதற்காக பணியில் இணைந்திருப்பதாக நினைப்பதில்லை. அரசியல்வாதிகளும் அப்படியே! ஆனால் இந்த இரு வர்க்கத்தினருமே ஒருவரையொருவர் மாற்றி, மாற்றி ஆட்டிப்படைக்கின்றனர். சொல்லப்போனால், எந்த அரசு அதிகாரியை விடவும் நடைமுறையில் சர்வவல்லமை படைத்தவர்கள் அரசியல்வாதிகளே! அவர்களைப் பகைத்துக் கொண்டு எந்த அதிகாரியும் சுதந்திரமாகச் செயல்படவே முடியாது. அதுவே, திரு. சகாயம் அவர்களின் மாறுதலிலும் வெளிப்படுகின்றது. அடுத்ததாக, இந்த கட்டுரையில் பிரதானமாக எழுப்பப்பட்டிருக்கும், உயர் அதிகாரிகளுக்கு இடையிலான பனிப்போர். இந்தியக் குடிமைப் பணிகளில் இருப்போரிடையே இது மீயளவில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், இது போன்ற பணிகளில் இருப்போரும் கூட, சாதீய அடிப்படையில் பிணைந்துள்ளனர் என்பது கண்கூடு. ஆகவே, இவர்களால் மக்களுக்கு நன்மை விளையும் என்று நினைந்திருந்தால் அது நமது முட்டாள்தனமே!

Initially Sagayam was doing nice job but later due to his popularity and media he became egoistic . It seems like Asra Gargs transfer is loss to Madurai

Bad Example not good for goverment

Bad Example not good for goverment

'ஆதிதிராவிடர் நலத்துறையில் தற்சமயம் அதற்கான நிதி இல்லை. அதனால் செய்ய முடியவில்லை’ என்று பதில் கொடுத்தாராம் கலெக்டர்.

திருடர்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமை ஏனோ நல்லவர்களுக்கிடையில் இருப்பதில்லை!

சகாயமும் ஆஸ்ரா கர்கும் ஒற்றுமையாக செயல்பட்டிருந்தால் மக்களுக்கு இன்னும் நன்மைகள் விளைந்திருக்கும்.
அப்பாவி ஒருவரின் கொலையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து கிரானைட் புள்ளியின் கொட்டத்தையும் அடக்கியிருக்கலாம்.

Displaying 1 - 25 of 25
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 03 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook