• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
19 May, 2013
அஞ்சு ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்!
அஞ்சு ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்! பெட்ரோல் விலை ஏறும்போது எல்லாம் ராமர் பிள்ளை முகம் ஞாபகத்துக்கு வரும். என்ன செய்கிறார் என்று தேடிப் பார்த்தோம். சென்னையில் வசித்தாலும் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு இருக்கும் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் பிடித்தோம். இன்னும் அதே உற்சாகத்தோடு இருக்கிறார்.  ''ஆகஸ்ட் வரைக்கும் காத்திருங்க சார். நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியோட வர்றேன். எல்லா சதிகளையும் முறியடிச்சு வெற்றிக்கோட்டை நெருங் கிட்டேன்'' என்று உற்சாகம் ததும்பப் பேசும் ராமர் பிள்ளையின் பேச்சு முழுவதும் அதிரடி சரவெடி. ''நான் சாதாரணக் கிராமத்து மனுஷன். உலகத் தையே வாட்டி வதைக்கிற எரிபொருள் பிரச்னைக்கு என் அறிவுக்கு எட்டுன அளவில் ஒரு பொருளைக் கண்டுபிடிச்சு, 'மூலிகைப் பெட்ரோல்’னு பேர் வெச்சேன். அப்போ நாடே பரபரப்பாச்சு. நாலு மாநில முதல்வர்களுக்கு முன், அதை சோதனை செஞ்சு காட்டினேன். ஆனால் என் வளர்ச்சி பல பேரைப் பயமுறுத்த ஆரம்பிச்சது.. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 106

பெட்ரோல் உலகின் மிகப்பெரிய பிஸினஸ். அதன் முதலாளிகள் உலக கோடீஸ்வரர்கள். அரசியல்வாதிகள், போலீஸ், மீடியா என்று எல்லாத்துக்கும் படியளப்பவர்கள். அவ்வளவு சீக்கிரத்தில் இந்த அப்பாவியை வளரவிடுவார்களா? இருந்தும் போராடும் ராமர்பிள்ளை வெற்றியடைய வாழ்த்துவோம்.

அய்யா மணி அய்யா .... உங்கள் வாதம்கண்மூடித்தனமான திமிரான வாதம்.. தாமஸ் எடிசன் என்ன கால்டெக்கிலா படித்தார் ??? ஈஸ்ட்மேன் கோடாக் என்ன அய் அய் டியிலா படித்தார் ?? (கிரகாம்பெல் டெலிபோன் கண்டுபிடித்த காலத்திலேயே ... நல்லாத்தான் இருக்கு ஆனா 10 பேருக்கு மேல இத யாரும் உபயோகம் செய்யமாட்டார்கள் என்று சொன்ன உலகம் தான இது !!!! ) சரி, அய் அய் டிக்காரன் என்ன PATH-BREAKING கண்டுபிடிப்பு இது வரைக்கும் கண்டு பிடிச்சிருக்கான்??? முதலில் இந்த ஸ்டீரியோ டைப் திமிரை விடுங்கள். அய் அய்டியை நான் மதிக்கிறேன். அவர்களும் ஏதோ நல்லது செய்கிறார்கள். அதற்காக அவர்களை ONLY GOLD-STANDARD ஆக ஏற்று சொந்த சிந்தனையில் ஏதாவது உயர்வாக கண்டுபிடிப்பவர்களை எள்ளி நகையாடக்கூடாது .... அறிவியல் பூர்வமாக அவர் கண்டுபிடிப்பைப்பற்றி வாதாடுங்கள் சரி .... மேலும் எரிபொருள் உண்மையாயிருந்தால் அதை அரசாங்கம் உடனே ஏற்கும் என்று கட்டாயமில்லை ... நாட்டில் ஏகப்பட்ட லாபி உள்ளது ... உள்நாட்டு எண்ணை துரப்பண வியாபார லாபி, வெளிநாட்டு லாபிகள் என்று ..... அவர்களுக்கு இதனால் நட்டம் என்றால் என்னவேண்டுமானாலும் செய்வார்கள் ..... நான் ராமர் பிள்ளை முற்றிலும் சரியென்று சொல்லவில்லை .. அவர் கண்டுபிடிப்பைப்பற்றி எனக்கு முழுதும் தெரியாது ... அதனால் தான் அவர் தப்பு என்றும் நான் சொல்ல மாட்டேன் .... வாய்ப்புக் குடுங்கள் ... தப்பென்றால் தள்ளிவிடுங்கள் ... சரியென்றால் பாராட்டி உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள் ... அதை விடுத்து அயய்டியா ஆப்பிரிக்காவா என்றெல்லாம் சொல்லக்கூடாது.

மூலிகைப் பெட்ரோல் என்ற பெயருக்கு பதிலா மூல் - ஈகைப் பெட்ரோல் என்று வைத்திருந்தால் ஒருவேளை ஜாஹிர் அவரை முல்லா நஸ்ருதீன் ரேஞ்சுக்கு ஜீனியஸ் என்று கொண்டாடியிருப்பார் !!!!

விஞ்ஞானிகளின் முன் சோதனை செய்தபோது, அவர்கள் கேட்ட கேள்விக்கு இவரால் ஏன் பதில் சொல்ல முடியவில்லை. இவர் உபயோகித்த ஒரு குழாயை சோதித்து பாக்க விரும்பியபோது இவர் ஏன் ஒத்துக்கொள்ளவில்லை? என் நண்பர் இவர் ஊர்க்காரர். அந்த ஊரில் இவரை ஓர் மனனிலை சரியில்லாதவராகத்தான் பார்க்கிறார்கள். அதுவும் இவர் பெட்ரோல் எல்லாம் தயாரிக்க ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே.இவரின் நடவடிக்கை இவரின் பேச்சுக்கு ஆதாரமாக இல்லை.

கஏன் ஸாஹீர் அவர்கள் இந்துமதத்தை சேர்ந்தவர்கள் என்பதாலா இல்லை இந்து மதத்தை காக்க முயற்சிப்பதாலா? அதிலும் ரவிசங்கருக்கு இருக்கும் ஆதரவை அறியாமல் பேசுகிறீர்கள்னு நினைக்கிறேன்.

இவருக்கெல்லாம் விகடன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. எரிபொருள் உண்மையாயிருந்தால் ஏன் அதை மத்திய அரசு அதை கையில் எடுத்திருக்காதா? மூலிகை பெட்ரோல் என்று சொன்ன சுத்த பிராடு ஆசாமி. இவர் என்ன ஐ.ஐ.டி யிலா படித்திருக்கிறார்.

Let us see........

என்னமோ பன்னுங்க, பெட்ரோல் அரக்கனிடமிருந்து ஜனங்களை காப்பாற்றினால் போதும்...

ஒருவர் ஊழல் பெயரால், ஒருவர் யோகா பெயரால், ஒருவர் ஆன்மீகம் பெயரால் ஊரை ஏமாத்தும் போது, இவர் பெட்ரோல் பெயரால் ஊரை ஏமாத்த அவர்களுடன் கூட்டு சேருவது ரொம்ப சரி தான்.

அதெல்லாம் இருக்கட்டும். ஹாயாக பைக்கில் உட்கார்ந்து போஸ் கொடுக்கிறாரே ராமர் பிள்ளை? அவரிடம், அந்த பைக்கில் எந்த பெட்ரோல் போடுகிறார் என்று கேட்டு எழுத வேன்டியதுதானே? (பார்த்தால் மூலிகை எரிபொருளில் ஓடுகிற வண்டி மாதிரி தெரியவில்லையே)?!!!

இராமர்பிள்ளையின் கண்டுபிடிப்பு என்னவாக இருப்பினும், அஃதொரு மாற்று எரிபொருள் என்றுதான் நானும் நம்பியிருந்தேன். இருப்பினும் இப்போது சற்றே ஐயம் வருகின்றது. இராமர்பிள்ளைக்கு எனது கேள்விகள்: (1) இந்த மாற்று எரிபொருளுக்கும், மூலிகைக்கும் தொடர்பில்லை எனில், அதை ஆரம்ப காலத்தில் மூலிகை பெட்ரோல் என அழைத்தது ஏன்? (2) தங்களின் ஆரம்பகால செய்முறைகளில் ஏதோ மூலிகையைப் பயன்படுத்துவதாகக் கூறியது ஏன்? (3) 13 இலட்சம் எரிபொருளை விற்ற நீவிர், அதை தொடர முடியாதது ஏன்? (4) சுவீடனோ, மற்ற ஏதோ ஒரு நாடு, இவரையும் இவரது கண்டுபிடிப்பையும் ஆதரித்து காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது; விரைவில் உலகளாவிய உற்பத்தி தொடங்கும் என சில மாதங்களுக்கு முன் விகடனில்தான் படித்ததாக நினைவு. அது என்னவாயிற்று? இப்போது இரவிசங்கர்ஜி ஆதரவை நாடியது ஏன்? முதலில் உங்களைப் பற்றிய மர்மங்களுக்கு விடைகொடுங்கள். பிறகு, உமது கண்டுபிடிப்பின் மர்மம் தானாகவே விலகும். செய்வீரா? ஜூ.வி., உம்மால் இரவிசங்கர் ஜியிடம் இதைப் பற்றி கருத்து கேட்க முடியவில்லையா?

காலைப் பிடித்து இழுக்காமல் என்ன செய்வார்கள். பெட்ரோல் விற்பனையில் அடிக்கிற கொள்ளை கொஞ்ச நஞ்சமா? இனிமேலும் உங்களை லேசில் விடமாட்டார்கள் ராமர்பிள்ளை

Why don't we try Herbal alternative to petrol. What is wrong in that. Politicians are exploiting he public. Ramapillai will do good to public.

The issue is, if the educated invent something the apprach is different. This guy is not good in that, may be thats why he could not survive.

மணி உன்னைப்போன்ற ஆட்கள் இருக்கும் வரை எவனையும் உருப்பட விட மாட்டீர்கள். இங்கே ஆயில் மாபியா மிகப்பெரிய அளவில் இருப்பதால் அவர்கள் இது போன்ற முயற்சியை எப்போதுமே தட்டுக்கப் பார்க்கிறார்கள். அப்படியே ராமர் பிள்ளை 200ம்ல் பெட்ரோல் வைத்து ஒரு லிட்டர் தயாரித்தாலும் அதுவும் நமக்கு நல்லதுதானே? ஈஈட்-யில் படித்தால் மட்டும்தான் ஒருவன் கண்டுபிக்க முடியுமா? சைக்கிள் கடை வைத்திருந்த சகோதரர்கள் விமானம் கண்டு பிடிக்கலையா?

42 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கி 13 ரூபாய்க்கு விற்க, நான் என்ன லூஸா?....அப்படித்தான் உலகம் சொல்லும்...நீர் உம்ம பாதையில் செல்லும்...காலம் திரும்பி பார்க்கும் வரை!... ராமர் பேரை காப்பாற்றும்..இல்லையேல் சாமி கோவிச்சுக்கும்.. அதான்..ராமகோபாலன் சாமி!

ராமர் பிள்ளைக்கு இப்பொழுது தேவையானது உதவி. அவரது ஆராய்ச்சிக்கு நம்மாள் உதவ முடியவில்லை என்றாலும், அவரது உழைப்பை இழிவாக பேச வேண்டாமே? அவருக்கு என் வாழ்த்துக்கள்! ஒரு இந்தியனின் கண்டுபிடிப்பை ஒரு இந்தியன் நம்ப வேண்டும். இல்லையென்றால், ஏதாவது வேறு ஒரு நாடு இந்த கண்டுபிடிப்பை தட்டிக் கொண்டு சென்று விடும்!

கண்டுபுடித்தது உண்மை என்றால், நிச்சயம் மாற்றம் வரும். கம்பெனிகள் புது என்ஞின் கண்டுபிடிப்பார்கள்

மூன்று கோமாளிகளுடன் நான்காம் கோமாளி....

ஹலோ மணி, ஐ.ஐ.டி, ல படிச்சவங்க மட்டும் புத்திசாலி கிடையாது.

ஜூவி நிருபருக்கு , இவரது வண்டி எந்த எரிபொருளில் ஓடுகிறது என் கேட்க மறந்து விட்டதா? என்ன நிருபர் நீங்க?

ஒருவர் ஊழல் பெயரால், ஒருவர் யோகா பெயரால், ஒருவர் ஆன்மீகம் பெயரால் ஊரை ஏமாத்தும் போது, இவர் பெட்ரோல் பெயரால் ஊரை ஏமாத்த அவர்களுடன் கூட்டு சேருவது ரொம்ப சரி தான்.

I learned, Mr Ramar Pillai was not able to satisfy the scientific community on his demo at MIT , Anna University. the basic principle of matters. The weight of the all raw materials should be equal to the end product or is to be less than that considering the chemical reactions. But in his case the end product weight is higher than the raw material. how could this may happen.

hence the scientific community is not endorsing his right of claim. They felt that the hollow glass stirrer was filled with Benzine a petrollium product. he was not redo his demo on their claim.
I too pray that he can be successful , But should be geninue. there should be any cheating.

lot of people dont like him, why dont to give another chance to him,he have lot of problem, because his tamilan.........

ப்ரசில் பெட்ரொலை சார்ந்து இல்லை. அவர்கள் 2014ஆவது ஒலிம்ப்பிக் போட்டிக்கு தயாராவதை படித்துப் பாருங்கள். இன்றைய இந்தியர்கள் நம்மால் முடியும் என்று நம்புவதும் இல்லை. நம்புவர்களை பாராட்டுவதும் இல்லை.
இதே விகடனில் 1 ரூபாய்க்கு லேடீஸ் நாப்கின் தயாரித்தவரைப் பற்றி படித்தோம். அதுபோல் ராமர் பிள்ளையும் வருவார் என நம்புவோம்.

  Displaying 1 - 25 of 65
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 13 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook