• என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • தமிழகம் முழுவதும் 34 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்
  • சூதாட்டப் புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களின் சொத்துகள் முடக்கம்?
  • பட்டாசு விபத்தில் முதல்வர் நிவாரண நிதி வழங்கவில்லை: எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
  • மலேசியாவில் 4 தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை
24 May, 2013
நில மோசடி செய்தாரா துக்கையாண்டி?
நில மோசடி செய்தாரா துக்கையாண்டி? ஐ.பி.எஸ். அதிகாரிகள் சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. புதுவரவு... துக்கையாண்டி. பணியில் இருந்து ஓய்வுபெறுவதற்கு ஒரு நாள் முன்பு, அவர் மீது நடவடிக்கை பாய்ந்து, ஒய்வூதியப் பலன்களுக்கும் குழிவெட்டி இருக்கிறது ஒரு நில மோசடிப் புகார்!  என்ன நடந்தது? சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜய்யா. மகேந்திரகுமார் கம்பானி என்பவரின் நிலத்தை வாங்குவதற்கு, அந்த நிலத்தின் பவர் ஏஜென்ட்டான ரவியுடன் ஒப்பந்தம் செய்து, முன்பணமாக ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தார் ராஜய்யா. அதன்பிறகு, நீலாங்கரை சார்பதிவாளர் அலு​வலகத்தில் வில்லங்கம் போட்டுப் பார்த்தார். அப்போதுதான், ராஜய்யா வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டிருக்கும் நிலத்தை ஏற்கெனவே, தனலட்சுமி என்பவர் வேறு ஒருவருக்கு விற்று இருப்பது தெரிந்தது. நிலத்துக்கு உரிமையாளரான மகேந்திரகுமார் கம்பானியிடம் இருந்து, 2007-ம் ஆண்டு தனலட்சுமி அந்த நிலத்துக்கான பவரைப் பெற்று, அதைத் திருச்சி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறார். அதன்பிறகு அந்த இடத்தை சுப்புலட்சுமி என்பவருக்கு விற்பனை செய்திருக்​கிறார். அடுத்த. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 15

தியகராஜன்..உங லிச்ட்ல ;மூப்பனார் வீட்ல டாண்ச் ஆட வந்த பாட்டி ய பத்தி மரந்துட்டீங்கலே

கற்பனையில் ஒருவரை உருவாக்கி, அவர் பெயரில் ஊரார் நிலத்தை மூட்டையடித்தவர் யாராக இருந்தாலும் அவர் குற்றவாளியே... என்னங்க கருணாநிதி, துக்கையாண்டிக்கு ஆதரவாக சிறை நிரம்ப போகலையா???

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் பொறுப்பு அதி காரியாக, தி.மு.க. ஆட்சியில் விஜிலென்சில் பொறுப்பு வகித்த துக்கையாண்டியை நியமித்தார்கள். ஜெ.வும் அவருடன் குற்றம்சாட்டப்பட்டவர்களும் வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருந்த அந்த சமயத்தில், கோர்ட்டில் சரியாக ஆஜராகிவிடுவார் துக்கையாண்டி. "அவரால்தான் இந்த வழக்கு நெருக்கடியாகிறது' என்று கார்டனுக்குத் தகவல் சொன்ன ஜெ. தரப்பு வழக்கறிஞர் கள், கோர்ட் ஹாலிலேயே, "ஆட்சி மாறியதும் உன்னை உள்ளே வைக்கிறது நிச்சயம்' என்று துக்கையாண்டியைப் பார்த்து கமெண்ட் அடிப்பதும் வழக்கம் என்கிறார்கள் கர்நாடக வழக்கறிஞர்கள். புகாரின் நோக்கம் அறிந்த தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் உள்ளிட் டோர், இதில் நடவடிக்கை எடுக்க முடியாது எனத் தெரிவித்தபோதும், அரசின் சட்டப்பிரி வைச் சேர்ந்த முக்கியப்பொறுப்பில் இருப்பவர், "அவரை கம்பி எண்ணவிடாமல் வெளியே விடக்கூடாது. கோர்ட்டில் கேஸ் அடிபட்டா லும் பரவாயில்லை. அவரை அசிங்கப்படுத்தி யாகணும்' என்று மேலிடத்தின் எண்ணத்தை வெளிப்படுத்த, இதனையடுத்து, ரிடையர் மெண்ட்டுக்கு முதல் நாளான ஜூன் 29 அன்று வேறு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ஏ.டி.ஜி.பி. துக்கையாண்டி.
இதுதான் அம்மா ஆட்சியின் லட்சணம்.

ஒரு உண்மையான சம்பளம் மட்டுமே வாங்கும்,எந்த உயர் அதிகாரியாக இருந்தாலும்,அரசு தரும் சலுகைகளை தவிர எதுவுமே செய்துக்க முடியாது,இந்த மாதிரி லஞ்ச மகா பிரபுகளால்தான் இத்தனை தில்லாலங்கடி செய்ய முடியும்,கடைசி பாரா நியாயமில்லாதது....

அம்மா உங்களை சும்மா விட்டு விடுவாரா? குறைந்த பட்சம் போன ஆட்சியிலேயே வாலன்டரி ரிடையர்மென்ட் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே.

"நிலத்தை வாங்குவது லஞ்ச ஒழிப்புத்துறைக் கூடுதல் டி.ஜி.பி. துக்கையாண்டியின் மனைவி என்பதால் திருச்சி பத்திரப்பதிவு அலுவலர்களும், நீலாங்கரை பத்திரப்பதிவு அலுவலர்களும் விதிமுறைகளை மீறி இருக்கிறார்கள்."

- You've written everything (including the imaginary Seller).
Then Why again a Question "He is a Genuine Person or Not ?"

Don't know why this Fate for our Country !

ஓவர் லட்சுமி கடாட்சம் உடம்புக்கு ஆகாது, துக்கு அண்ணே! இந்த வெள்ளை சட்டை, பேண்டையெல்லாம் விட்டுவிட்டு, டவுசர், கட்டம் போட்ட சட்டை போட்டு இப்பவே ட்ரைனிங் எடுத்துக்கோங்க!

என்னத்தை சொல்வது....?
நாடு நாசமா போச்சு...

இவன் எல்லாம் டி.ஜி.பி , ஆமாம் சமூக சேவை கோட்டாவில் நிலம் அபேஸ் செய்த டி.ஜி.பி. ஜாஃபர் சேட் வழக்கு என்ன ஆச்சு

அண்ணா நகரில் அவனவன் (அதாவது மாதம் நாற்பது அல்லது ஐம்பதாயிரம் சம்பளம் மட்டுமே வாங்கக்கூடிய உத்தம போலீஸ் உயர் அதிகாரிகள், கிம்பளமே வாங்காத அதி உத்தமர்கள்) இரண்டு முதல் நான்கு கிரவுண்ட் இடமும் குறைந்த பக்ஷம் மூவாயிரம் சதுர அடிக்கு பங்களாவும் வைத்துக் கொண்டு உத்தம வேடம் போட்டுக்கொண்டு போலீஸ் உத்யோகம் பார்க்கின்றானே ! இவன்கள் எல்லாம் எப்படி சுமார் மூன்று கோடி மதிப்புள்ள இடங்களை தங்கள் குறைந்த வருமானம் மூலமாக மட்டுமே வாங்கி இருக்க முடியும் ! இந்த அழகில் அதே அண்ணா நகரில் கண்ணைப் பறிக்கும் அழகில் ஒரு பிரம்மாண்டமான பங்களாவுக்கு சொந்தக்காரர் ஒரு ஓய்வு பெற்ற மதுரை மன்னரின் பெயர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி வேறு ! இந்த நாடு எப்படி உருப்படும்! ஒரு பக்கம் அன்னாளில் திருட்டு ரயிலில் வந்தாலும் அறுபதே ஆண்டுகளில் நம்பர் ஒன் பணக்காரரக மாறிய தலைவர் ஒருவர் ! மறுபுறம் இந்த அன்னாடங்காச்சியாக அரசாங்க உத்யோகம் பார்த்தாலும் வருமானத்திற்கு மிஞ்சிய சொத்து சேர்க்கும் போலீஸ் (பொறுக்கி அல்ல) மற்றும் நீதிபதிகள் (திருடர்கள் அல்ல)! வெட்கக் கேடு ! தூ ! தூ ! இதெல்லாம் ஒரு பிழைப்பா? இதற்கு நடு ரோட்டில் பிச்சை எடுத்து வாழ்வது எவ்வளவோ மேல்!

துக்கையாண்டியின் மீது ஆக்சன் எடுத்திருக்கும் ஜெ., ஏன் பாலாஜியை காத்திருப்பில் வைக்க வேண்டும்?. நடுநிலையில் இருக்க வேண்டும். வேண்டியவ்ர்,வேண்டாதவர் என்ற பாகுபாடு அதுவும் ஆட்சியாளர் காட்டக்கூடாது.

சூடு ஆறியதும் இது தன்னால் அமுங்கி விடும்.காரணம் போலீஸ் சம்பந்தப்பட்டது.தமிழக சரித்திரத்தில் எந்தப் போலீஸ் அதிகாரியாவது (அட போலீஸ் கான்ஸ்டேபிளாவது) தண்டிக்கப்பட்டிருகிறாரா?கொஞ்ச நாள் சஸ்பென்ஷன் பின்னர் ஒரு நொண்டி கேஸ்,வாயதா அப்புறம் மீண்டும் யூனிஃபார்ம் போட்டுத் தொடங்க வேண்டியது தான்.

should we appreciate JJ for taking action against thukaiyandi??
should we curse her for keeping balaji in waiting list of posting?
thalai suthudhu.

இவ்வளவு மோசடி செய்திருக்கும் துக்கையாண்டி மீது நடவடிக்கை எடுத்தால் பழிவாங்கவே அவர் மீது இந்த கடைசி நிமிட சஸ்பெண்ட் உத்தரவு என்று எப்படி உங்களால் எழுதமுடியுது? இதில துக்கையாண்டி உத்தமரா இல்லையா என்கிற கேள்வி வேர.

ஜெ நல்லவரா கெட்டவரா என்பது இங்கு கேள்வியில்லை... பல போலீஸ் அதிகாரிகள், ஐ ஏ எஸ் அதிகாரிகள் குவித்துள்ள சொத்துக்கள் திமுக அதிமுக அரசியல்வாதிகளையும் மிஞ்சும்... இது மாதிரி நடவடிக்கைத் தொடர வேண்டும். பல அதிகாரிகள் அரசு காரில் வைக்கோல் தங்கள் பண்ணைக்கு அடிப்பது கண்கூடு... ஜெயின் இந்த நடவடிக்கைகளின் விடை நல்லதிலேயே முடியும்...

Displaying 1 - 15 of 15
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 08 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook