அடுத்த ரெய்டு ஆவுடையப்பன் வீட்டிலா? தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்களை வளைத்த இன்றைய ஆளும் கட்சி இப்போது கடந்த ஆட்சியில் கோலோச்சிய அதிகாரிகள் மீதும் கை வைக்க ஆரம்பித்து உள்ளது! கடந்த தி.மு.க. ஆட்சியில் சட்டசபைச் செயலாளராக இருந்தவர் செல்வராஜ். பணி நீட்டிப்பில் காலத்தை ஓட்டிய செல்வராஜ், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஓய்வு பெற்றார். இந்தநிலையில், கடந்த 3-ம் தேதி திடீரென செல்வராஜின் வீட்டில் நுழைந்து சோதனை நடத்தியது, ஊழல் மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸ். அவரது வீட்டில் இருந்து 34 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்படவே, அதிர்ந்து நிற்கிறார்கள் சட்டசபை ஊழியர்கள். அலுவலக வேலைக்காக டெல்லி போவதாகச் சொல்லி, தனிப்பட்ட பணிகளை மேற்கொண்டது, சட்ட மன்ற விடுதி அறைகளைத் தகுதியற்ற நபர்களுக்கு இலவசமாக ஒதுக்கியது, அரசு வாகனத்தைக் குடும்பத்துக்குப் பயன்படுத்தியது, சட்டமன்ற நூலகத்துக்கு மராமத்துப் பணிகளைச் செய்யாமலேயே, செய்ததுபோல கோப்புகள் தயாரித்துப் பணம் கையாடல் செய்தது என்று செல்வராஜ் மீது ஏகப்பட்ட. . .
ஆவுடையப்பன்,அவரது மகன் வகையறாக்களின் தப்பாட்டங்கள் நீலாங்கரை பங்களா கொலை வரை நீண்டு ,தேர்தலுக்கு முன் 'ஜெ'கூட இதைப் பற்றி விமரிசித்தார்.ஆனால் அது அப்புறம் ஏன் அடங்கி விட்டது?
"செல்வராஜிடம் கேட்டபோது ''என் மீது பொய் வழக்கு போட்டு இருக்கிறார்கள். நான் நிரபராதி'' என்றார்"-----------> இப்படிச் சொல்லாவிட்டால்தான் அதிசயம். அடுத்து, சாதி, மதம் போன்றவற்றைக் காட்டி தப்பிக்க வாய்ப்பு உண்டு. பாவிகளை மன்னியும் ஆண்டவரே!!!!
COMMENT(S): 6
ஆவுடையப்பனுக்கு பின்னால் மிக பெரிய மர்மங்கள் இருக்கிறது... விசாரித்து தண்டனை வாங்கி தருவாரா ஜெயா???
ஆவுடையப்பன்,அவரது மகன் வகையறாக்களின் தப்பாட்டங்கள் நீலாங்கரை பங்களா கொலை வரை நீண்டு ,தேர்தலுக்கு முன் 'ஜெ'கூட இதைப் பற்றி விமரிசித்தார்.ஆனால் அது அப்புறம் ஏன் அடங்கி விட்டது?
"செல்வராஜிடம் கேட்டபோது ''என் மீது பொய் வழக்கு போட்டு இருக்கிறார்கள். நான் நிரபராதி'' என்றார்"-----------> இப்படிச் சொல்லாவிட்டால்தான் அதிசயம். அடுத்து, சாதி, மதம் போன்றவற்றைக் காட்டி தப்பிக்க வாய்ப்பு உண்டு. பாவிகளை மன்னியும் ஆண்டவரே!!!!
திமுக ஆட்சியின்போது ஜெ வெளியிட்ட அறிக்கைகளை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டால் .... ?
அதிகாரிகள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. பென்ஷன் வாங்கிக் கொண்டு மீதி வாழ்க்கையை செய்த, செய்யாத காரியங்களுக்கு பிராயசித்தம் செய்யலாம்.