Latest News
Published on :30-11--0001 06:00 AM
கண்ணதாசன் பேட்டிகள்
கண்ணதாசன் பேட்டிகள் உண்மை பேசினால் எப்படி இருக்கும்... என்பதற்கு உதாரணம் இந்தப் புத்தகம்! பொய்மை, பாசாங்கு ஏதும் இல்லாமல் சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் பேசத்தெரியாத மனிதனாக வாழ்ந்து மறைந்தவர் கண்ணதாசன். புகழின் உச்சிக்கு வந்தபோதும் தன் மீதான எந்தப் புகாரையும் மறைக்காமல் ஒப்புக்கொண்டு, அதைத் தன்னுடைய நேரடி வாக்குமூலமாகவே பதிவு செய்த சத்தியவான். திரும்பிய பக்கம் எல்லாம் இவரது திரை இசைப் பாடல்கள் ஒலித்த நேரத்தில்கூட, ''இவை தொழில் ரீதியாக எழுதப்படும் பாடல்கள். இவை எல்லாமே எனக்கு உடன்பாடானவை என்று சொல்லிவிட முடியாது. எல்லாம் தேவைக்கேற்ப, சம்பவங்களுக்கு ஏற்ப எழுதப்படுபவை. டைரக்டர்களும் தயாரிப்பாளர்களும் சொல்கிறபடிதான் எழுத வேண்டியிருக்கிறது'' என்று சர்வசாதாரணமாய்ச் சொல்லியவர். ஆனால் அவை, சாகாவரம் பெற்றவையாக இன்றும் இரவுகளில் நம்மைத் தாலாட்டுகின்றன. கவிஞருக்கு நெருக்கமான இரண்டு நண்பர்களே அந்தக் காலகட்டத்தில் முதல் அமைச்சர்களாக இருந்தனர். அந்த இருவரையும் சம தராசில் வைத்து விமர்சிக்க இவர் தயங்கவில்லை. 'கருணாநிதி அற்புதமான. . .

COMMENT(S): 20

DSAD it only shows your ignorance.

"பொய்மை, பாசாங்கு ஏதும் இல்லாமல் சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் பேசத்தெரியாத மனிதனாக வாழ்ந்து மறைந்தவர் கண்ணதாசன். புகழின் உச்சிக்கு வந்தபோதும் தன் மீதான எந்தப் புகாரையும் மறைக்காமல் ஒப்புக்கொண்டு, அதைத் தன்னுடைய நேரடி வாக்குமூலமாகவே பதிவு செய்த சத்தியவான்."
ஒரு கவிஞனின் முதலீடே பொய் தானே. அப்புறம் எப்படி இவர் சத்தியவான் ஆக முடியும். இவர் மட்டும் பிழைப்பிற்காக எவ்வளவு பொய் மட்டும் சோல்வாராமா. இவர் சொன்ன பொய்களால் தான் ஒருவர் முதல்வரே ஆனார். தமிழக மக்கள் இவரின் பொய்களை இன்னும் கொண்டாடுகிறார்களே

லஞ்சம், ஊழல், விளம்பர ஆசை ஆகியவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் - Karunanithi is still in same page

கவிஞரே உங்களை பற்றி நிறையா பேரு தெரிஞ்சிகிட்டதே " கண்ணதாசன் காரைக்குடி நீயும் கொஞ்சம் ஊத்திக்குடி" பாட்டு மூலம்தான்.

கண்ணதாசன் ஒரு பிறவிக் கவிஞன். ஒரு கவிஞனுக்கு இருக்க வேண்டிய தலைக்கனம், மிடுக்கு, குடி, கூத்தி எல்லாமே அவரிடம் காணப்பட்டது. அவரது முதல் பாட்டான `கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.
`அச்சம் என்பது மடமையடா,’ `சரவணப் பொய்கையில் நீராடி,’ `மலர்ந்தும் மலராத...,’ `போனால் போகட்டும் போடா..,’ `கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’ `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ `சட்டி சுட்டதடா கை விட்டதடா..., ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் அழியாத காவியங்கள். எப்படி இவர் தமிழை வசப்படுத்தினார் என்பது புரியாத புதிர். தமிழ் அவர் கூப்பிட்ட போதும் கூப்பிடாத போதும் அவருக்கு முன் ஓடிச் சென்று சேவகம் செய்தது என்று சொல்வதுதான் பொருத்தம்!

சிறந்த கவிஞர். தன்னைப் பற்றி விமர்ச்சனம் செய்துகொள்ளத் தயங்காத சிறந்த மனிதர். இவரின் வனவாசம் அந்தக்கால திமுகாவினரின் போலித்தனங்களை தோலுரித்து காட்டியது. தலைவர்களைப் பற்றி உருவாக்கப்பட்ட பிம்பங்களை மீறி உண்மையை உரத்து சொன்னவர்.

ஒரு ஆச்சரியம், முகவுக்கும் கண்ணதாசனுக்கு பிரிவு ஏற்பட காரணமான விசயம். கண்ணதாசனின் 2 வது திருமணம். அதை எதிர்த்த முக பின்னர் துணைவி வைத்துக்கொண்டார்.

''கருணாநிதி அற்புதமான நிர்வாகி. லஞ்சம், ஊழல், விளம்பர ஆசை ( 2 பொண்டாட்டி பிரச்சினைகள், துரோகங்கள், சுயநலம்) ஆகியவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால்!!''
இதற்குமேல் ஒருவரை சரியாக மதிப்பிடமுடியாது.

டிசாட், எப்படி பாட்டி ஊத்திக்கொடுக்க கேப்டன் காலையிலேயே போட்டுக்கிர மாதிரியா?

எம்ஜிஆரைப் பற்றி அலை ஒசையில் 70களில் இவர் எழுதிய கட்டுரைகள் மிகப் பிரசித்தம்.

''இவை தொழில் ரீதியாக எழுதப்படும் பாடல்கள். இவை எல்லாமே எனக்கு உடன்பாடானவை என்று சொல்லிவிட முடியாது" என்று கண்ணதாசன் கூறினாலும், நான் கேள்விப்பட்ட வரை, இசையமைப்பாளர் டியூனைக் கொடுத்து விடுவார், இயக்குனர் காட்சியமைப்பைச் சொல்லி விடுவார், பாடல் வரிகளை கவிஞர்தான் எழுத வேண்டும் என்பதுதான் உண்மை.. அதனால் பாடல் வரிகளுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்று கவிஞர் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அவரது பாடல் வரிகளில் யாரும் குறை கண்டு பிடித்ததாகச் சொல்ல முடியாது. இருப்பினும் அவரது வெளிப்படையான பல பேச்சுக்கள் பாராட்டப்பட வேண்டியவை.

அழியாப்புகழ் பெற்ற ஒரே சினிமாக் கவி - இன்றுவரை!
சாகாவரம் பெற்ற பாடல்கள் - ஒவ்வொன்றும் வைரம்!

'கருணாநிதி அற்புதமான நிர்வாகி. லஞ்சம், ஊழல், விளம்பர ஆசை ..
கடைசியில் கருணாநிதிக்கு என்ன ஆயிற்று ?. சரிதிரத்தில் தமிழினத்தை அழித்தவர் என்ற பெயரே நிலைத்து இருக்கும். தீயதை பொற்றுவர் அதனாலே அழிக்கப்படுவார்.

இன்னுமோர் ' வனவாசமா" ?

Displaying 1 - 13 of 13
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 19 Sep, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook