மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2012-13 சாதிக்கத் துடிக்கும் இளமை இதயங்களுக்கு, நீங்கள் சாதிப்பதற்கும் உங்கள் கனவுகள் கைகூடுவதற்கும் ஒரு வாய்ப்பு வழங்குகிறது விகடன். இதுவரை 850 மாணவச் செல்வங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்து, பயிற்சியும் அனுபவமும் தந்து பக்குவப்படுத்தி, பரிமளிக்கச்செய்த விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் அடுத்த அத்தியாயம்... இதோ ஆரம்பம்! கடந்த வருடங்களில் நடந்த பயிற்சித் திட்டங்களில் பங்குகொண்டு பயிற்சி பெற்றவர்கள்... இன்று பல துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, சட்டம், இலக்கியம், தொழில் துறை எனப் பரந்துபட்ட பல தளங்களில் உயிர்ப்போடு இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள் விகடனின் முன்னாள் மாணவப் பத்திரிகையாளர்கள். எந்தத் துறையாக இருந்தாலும், எவ்வளவு உயரம் சென்றாலும், 'நாங்கள் விகடனின் மாணவர்கள்’ என்று தங்களுக்கே உரிய தனி முத்திரையைத் தொடர்ந்து பதித்துக்கொண்டே இருக்கிறார்கள்! புதுமைக்கு 'ஆ.வி.’, நேர்மைக்கு 'ஜூ.வி.’, பெண்மைக்கு 'அவள்’, அறிவுக்கு 'சுட்டி’, அருளுக்கு 'சக்தி’, செல்வத்துக்கு 'நாணயம்’,. . .
COMMENT(S):