• ஐபிஎல் 6: அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க கோரி வழக்கு
  • திரைப்படமாகிறது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்
  • ஶ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள்
  • இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை
  • தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் திட்டவட்ட அறிவிப்பு
  • இந்தியாவுடன் நட்புறவு பலமாக உள்ளது: சீன பிரதமர் லீ கெகியாங்
  • நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு
  • நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது?
  • பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம்
21 May, 2013
நடுத்தர மக்களை மூழ்கடிக்கும் மின் கட்டண பூகம்பம்!
நடுத்தர மக்களை மூழ்கடிக்கும் மின் கட்டண பூகம்பம்! காணக் கிடைக்காத அரிய சமாச்சாரமாக மின்​சாரம் மாறி வரும் நிலையில், மின் கட்டண உயர்வும் சேர்ந்து​கொண்​டதால், கோடையில் அனலாய்க் கொதிக்கிறார்கள் மக்கள்.  ஏப்ரல்  முதல் தேதியில் இருந்து, புதிய கட்டணம் நடைமுறைக்கு வருகிறது என்றாலும், ஜூன் மாதத்தில் மின்கட்டணம் செலுத்தும்​போதுதான் கட்டண உயர்வின் உண்மையான தாக்கம் தெரியும் என்கிறார்கள், பெயர் வெளியிட விரும்பாத மின்வாரிய அதிகாரிகள். குறைந்த அழுத்த மின்சாரம் பயன்​படுத்து​பவர்களுக்கும் அதிக பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. விளக்குகள், மின் விசிறிகள், குளிர் சாதனங்கள், வானொலி, தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக சாதனங்கள், மரம் வளர்ப்பதற்கான நீர்ப்பாசன சாதனங்​களுக்கான மின் பயன்பாடு போன்றவை இந்தப் பிரிவில் வருகிறது. இதைத் தவிர, வீடுகளில் உள்ள கைத்தறிகள், ஒருங்கிணைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகங்கள், சமூக ஊட்ட மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவுக் கூடங்கள், அரசு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்படும் பள்ளிக் கட்டடங்கள், முற்றுமுழுதாக இலவச. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 26

மின் கட்டண உயர்வு அதிகம்தான் ஆனால் எத்தனை காலத்திற்குதான் இலவசம், மானியம என்று காலம் தள்ள முடியும். இன்று ஒரு அரசு ஊழியரின் சம்பளம் ஐ.டி ஊழியருக்கு இணையானது. அரசு ஊழியர்கள் அந்த அளவுக்கு உழைப்பாளிகளா இல்லையா என்று கூட பார்க்க வேண்டாம். ஆனால் இந்த அளவு சம்பளம் தர வருமானம் எங்கே? கடன் வாங்கிதான். பிறக்கும் குழந்தை கூட பல்லாயிர கடன் சுமையுடன் பிறப்பதாக - புள்ளியியல் நிபுணர் வி.காந்த் கூட சொன்னாரே.

ஆக வருங்கால சந்ததியினரின் மேல் கடன் சுமையை ஏற்றிவிட்டு இன்றைய தினம் எல்லோருக்கும் வேண்டிய அளவு ஊதிய உயர்வு (வேலை செய்கிறார்களோ இல்லையோ) எல்லாவற்றிற்கும் மானியம் (அட நிலக்கரி என்ன இனாமாகவா தருகிறார்கள்?), இலவசம் என்றால் வருமானம் எங்கிருந்தாம்?

இதே மின் துறையை தனியார் மயமாக்கி இருந்தால் ..?

ஆனாலும் நாம் இலவசம் என்று பழகிவிட்டோம். அந்த இலவசம் நிஜமாகவே இலவசம் இல்லை ஆனால் வருங்காலத்திலிருந்து திருடப்படும் நிதி என்று உணர்ந்தால் இந்த புழுக்கம் போய்விடும்.

இது தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் பொருந்தும். இன்று அமெரிக்கா இதனால் சிரிப்பாய் சிரிக்கிறது சீனாவிடம் வெட்கத்தை விட்டு அடங்கி போக வேண்டி இருக்கிறது. நாளை தமிழ்நாடும் கடன் குடுத்தவரிடம் அடங்கி இருக்க வேண்டி வரும். அத்தகைய தருணத்தில் வரிகள் தாறுமாறாக எகிறும் வாய்ப்பு உண்டு. இல்லையேல் ரூபாயின் மதிப்பு குறைய விலைவாசி கண்மண் தெரியாமல் ஏற வழி வகுக்கும்.

இந்த விலை உயர்வு, கடினம் என்றாலும் - தரப்படும் கசப்பு மருந்தே ஆகும். சம்பளம் அதிகம் வந்தால் சந்தோஷப்படும் நாம் அந்த சம்பளத்தை தர வருமானம் எங்கிருந்து என்றும் யோசிக்க வேண்டும்.

மானியத்தை குறையுங்கள். சோம்பேறித்தனத்தை ஒழியுங்கள். அரசிடம் கையேந்தி இருப்பதை குறையுங்கள். மின் துறையை தனியார் மயமாக்குங்கள். மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மூலம் அவர்கள் கட்டண உயர்வை கட்டுப்படுத்தலாமே? த்னியார் மூலம் நிர்வகித்தால் - அரசு ஊழியரை போல வேலை செய்யாமல் குளிர் காயும் பலர் காணாமல் போவார்கள். நிர்வாகம் சீராகும். உற்பத்தி பெருகலாம். மின் இழப்பு குறைக்கப்படும். தரமான மாற்று இயந்திரங்களும் உபகரணங்களும் பயனுக்கு வரும்.

அது ஒன்றுதான் சரியான வழி - இல்லை எனில் இனி வருடா வருடம் கட்டணம் உயரும் (மினசாரம் தருகிறார்களோ இல்லையோ). ஆயிரமாயிரம் கூடாங்குளம் வந்தாலும் நிர்வாக திறமையின்மை, அதில் அரசியல் போன்றவையால் இழப்புகளே அதிகமாகும்.

ஆஅம

வராத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு வந்தாயென்ன வல்லென்னா என்ன? நாயுள்ளம்... சோரி.. தாயுல்லம் படச்சம்மாதான் 10காசு லொள் லொள்.. ஐமீன் கொரைச்சுட்டாங்களே...

1000 யுனிட்டிர்கு மெல் பய்ன் படுத்துபவர்க்லுக்கு யுனிட் 10 ருபாய் ஆக்க்லாம்.

புதிதாக அமைக்கபடும் எந்த மின் உற்பத்தி நிலயத்திலும் ஒரு யூனிட் ரூபாய் 7க்கு குறைவாக உற்பத்தி செய்யமுடியாது.

"மின் கட்டண உயர்வும் சேர்ந்து​கொண்​டதால், கோடையில் அனலாய்க் கொதிக்கிறார்கள் மக்கள். "-----------> சினிமாவுக்கு 200ரூ டிக்கெட், கிரிக்கெட் பார்க்க 500ரூ டிக்கெட், 2 கி.மீ. ஆட்டோவில் செல்ல 50ரூ என்று முகம் சுளிக்காமல் கொடுக்கும் ஜனம், பயன்படுத்தும் மின்சாரத்துக்கு, பஸ்ஸுக்கு கட்டணம் உயர்வதை எதிர்ப்பது அநாகரீகம். முறையற்றதும் கூட.

மின்சாரம் தொடர்ந்து ஷாக் அடிக்கின்றது...

வெதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறீவிட்டது.

எல்ல விலையும் எறுது தெரியுது ஆனால் விவசாயி உற்பத்திசெய்யும் நெல்லில் விலைமட்டும் ஏறம்மாட்டெங்கெ ஏன் அரிசிவிலை கிலொ 30ரூ என இருக்குது அபப்டி ஆனால் நெல் கிலொ 15 ரு இருக்கனும் ஆனால் இப்போ நெல் வாங்குவது கிலொ8ரூதான் மிதி ப்ணம் இடைதரகள் எடுத்துக்கொல்ளும் வாய்க்கரிசி யா

பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை வாங்கி அனைவருக்கும் இலவச சம்பளம் தர வேண்டும் என்று தமிழக தலைவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். பணம் அச்சடிக்கும் அரசாங்கம் ஏன் வெறும் ஐம்பதாயிரம் கோடி கடனை அடைக்க முடியாது என்று தமிழக மாக்கள் கேள்வி கேட்க வேண்டும். பணம் அச்சடிக்கும் அரசாங்கம் எதற்காக மக்களிடம் வரி கேட்கிறது? இலவசத்தால் உயர்ந்த திராவிடனை யாரும் ஏமாற்றி விட முடியாது என்பதை தெரிவிக்க கடமை பட்டுள்ளேன்

" ஏப்ரல் முதல் தேதி " இந்த நாளை தெரிவு செய்திருக்க வெண்டியதில்லை, மக்கள் எப்போதுமே முட்டாளுங்க தான்.

அம்மா இலவசம் வேண்டாம்...மதுவும் வேண்டாம்..வாங்கும் சம்பளத்திற்கு சரியான்படி வேலை செய்யட்டும்.. ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கையை தொடங்குகள்..முக்கியமா ஊழல் அரசியல்வாதிகள்..

மக்களே ப்லீஸ் உங்கள் வீட்டில் எவ்ளோ அரைகளில் வீணா லைட் ஃபான் சுத்துது , எவ்ளொ நேரம் டிவி ஓடுதுன்னும் கணக்கு பாருங்க .மனிதனால் கன்டுபிடைக்கப்பட்ட மின்சாரம் அன்ரு ஒரு வீட்டுக்கு அளித்த மின்சாரம் எவ்ளோ இன்ரு நாம் சிலவு செய்யும் மின்சாரம் எவ்ளோ இப்படியே எல்லாத்தையும் கணக்கு பாருங்க. எப்பொதுமே மின்சாரத்துலே சிக்கனம் பார்த்தால் நல்லது . அரசியல்வ்யாதிகள் சிலவு செஞ்ஜா அவந்தான் கரன்ட் பில் கட்டணும்னு சட்டம் வரணும் ,செத்தா விழ பிரந்தா விழா ஒரு மந்தி போனால் அவருக்கு பின்னாடி முன்னாடி ஏன் அவ்ளொ கார்கள் போவணும் எவ்ளோ பெட்ரோல் வீண் இது போல எவ்ளோ சொல்லலாம்

இந்த மின்சார கட்டண உயர்வால் அழுந்த போவது ஏழைகளே... ஆயிரம் யூணிட்டுகள் வரை உபயோகிப்போருக்கு பழைய விலையையே வைத்திருக்க வேண்டும்... வேணுமின்னா, மதுவிற்கு இன்னும் ஒரு இருபது சதவித வரியை உயர்த்தி இருக்கலாம்...

மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், டி.வி. போன்றவற்றை இலவசமாக கொடுத்தால், அதற்குண்டான மின்சாரத்தை அதிக காசு கொடுத்து வாங்குவதால், இலவசத்தால் ஏற்படும் நிதி சுமையை குறைக்க இந்த அரசு உயர்த்தி இருக்கிறது. என்று இலவசங்கள் கிடையாது என்று அறிவிக்கும் கட்சியை நாம் தேர்ந்தெடுக்கிறோமோ அன்றுதான் நமக்கு கொஞ்சமாவது தன்மானமும் உயரும்.

சுப்ரமணியம் வெறும் வாய்ப்பந்தல் போடுகிறார். உற்பத்தி அதிக மாகி விட்டால் மாத்திரம் விலை குறைந்து விடுமா என்ன? வேண்டுமானால் மின் தடை இல்லாமல் இருக்கலாம்.மற்ற எல்லாப் பொருட்களும் இந்தப் பத்து ஆண்டு காலத்தில் எவ்வளவு விலை ஏறி இருக்கிறது என்று பார்த்தால் தெரியும். தன் சம்பளம் வருஷா வருஷம் உயர வேண்டும்; ஆனால் மின் கட்டணம் மாத்திரம் ஒன்பது வருடமும் அப்படியே இருக்க வேண்டும் என்று அந்தத்துறையைச் சேர்ந்தவரே சொல்வது எத்துணை கொடுமை? இலவச மின்சாரம் விவசாயத்துக்கு என்று சொல்லி அப்படியே மீட்டர் இல்லாமல் திருடி மற்ற உபயோகங்களுக்கு செலுத்துபவரை உடனே தடலடியாக உள்ளே போட வேண்டும். இலவச மின்சாரமும் இந்த திருடர்களும் ஒழியும் வரை இதற்கு விடிவு காலமே இல்லை. முந்தைய அரசும் அதற்கு முந்தைய அரசும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

வர்ணாசிரம தர்மத்தில் கூட பிரிவுகள் நான்கு தான்.ஆனால் மின் கட்டணம் கணக்கிடுவதில் எத்தனை பிரிவுகள் எத்தனை பிரித்தாளும் கட்டணங்கள்.பிரித்தாளும் கொள்கையை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய வெள்ளைக்காரன் கூட இந்த வெள்ளைக்காரம்மா கிட்டே பிச்சை வாங்க வேண்டும்.

மாசத்துக்கு ஒரு பீர் கம்மியா குடிச்சா,ஒரு மாச மின்சாரகட்டனம் செலுத்தி விடலாம்...

கூடங்குளத்தில் இருந்து விலையில்லா, அளவில்லா, ஆபத்தில்லா மின்சாரம் வந்த உடன் யூனிட் ஐம்பது பைசாவுக்கு கிடைக்கும்...

வணக்கம்
ஓடாத அல்லது பழுதுபட்ட மின் மானிகளின் விழுக்காடு சுமார் 60. அவைகளைச் சரிசெய்தாலே மின்கட்டண உயர்வைக் குறைக்கலாம்,
மின்வாரியத்தின் நட்டத்தைச் சரி செய்ய இது ஒரு நல்ல முறை, இல்லாவிட்டால் ஒரு வருடத்துக்கு 500யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ 6 என்று அமுல் படுத்தலாம்

ஜெயலலிதா ஒரு தணி நபர் மின்சார கட்டணம் மட்டும் 60 ஆயிரம். இவர் பயன்படுத்தும் கட்டணத்தை மக்களிடம் வசூலித்து கொள்கிறார். இதனால்தான் சாதாரணமக்களின் வாழ்க்கையில் ஷாக் கொடுக்கிரார். பேசாமல், கற்கால மனித வாழ்க்கைக்கு திரும்புதல் நல்லது.

ஒரு பரோட்டா 10 ரூபா கொடுத்து வாஙகி சாப்பிடும் பொழுது, கரென்ட்டுக்கு கூட கொடுத்தால் குடி முழுகாது.

மின்கட்டண உயர்வுக்கு காரணங்கள் பல என்றாலும் மின் உற்பத்தி செலவு அதிகமானதுதான் அடிப்படை. இந்த செலவுகள் 1)அளவுக்கு அதிக மின் திருட்டு - 42% தமிழ்நாட்டில், 5% மேல்நாடுகளில். 2) நிலக்கரி கொள்முதல் ஊழல் 3) அதிக அளவில் தேவையற்ற ஊழியர்களை நியமித்து அவர்களுக்கு மிக அதிக சம்பளம் தருதல். 4) மின்சார நிறுவு திறனில் 60% மட்டுமே உற்பத்தி செய்தல் 5) இலவச மின்சாரம் அளவில்லாமல் கொடுத்தல்.

கட்சிக்காரர்களால் திருடப்படும் இலவச மின்சாரமும் "வீணாகும்" மின்சாரமும் பொதுமக்கள் தலையில் இறக்கப்படுகிறது. இதற்கு உடந்தையாக இருக்கும் மின் துறை ஊழியர்களில் பாதிப்பேரை வேலையை விட்டு அனுப்பிவிட்டால் மின் கட்டண உயர்வே தேவை இல்லை. உற்பத்தியை நிறுவுதிறன் அளவுக்கு கொண்டுவந்தால் கட்டணத்தை குறைக்கவே முடியும்.

இதோடு இப்போ நிலங்கள் விர்ப்பத்தில், ரெஜிஸ்டிரேஸன் பீஸும் நான்குமடங்கு அதகரித்து உள்ளார்கள். இது அரசாங்கம் பகல் கொள்ளைக்கு சமம். வரும் முத்துக்குமார் தொகுதி இடை தேர்தளில் கட்டாயம் ஜெஜெ மண்ணைகவ்வுவார். கதை சொல்லி அரசை நடட்த முடியாது.

Displaying 1 - 24 of 24
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 08 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook