• வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு
  • லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம்
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார்
  • காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி
  • புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
  • சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ.
19 June, 2013
பிரார்த்தனைக்கு செவி சாயுங்கள்... பிழைகளைத் திருத்திக்கொள்ளுங்கள்!
பிரார்த்தனைக்கு செவி சாயுங்கள்... பிழைகளைத் திருத்திக்கொள்ளுங்கள்! அன்பிற்கினிய தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களுக்கு...  வணக்கம். வளர்க நலம். ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, நீங்கள் முதல்வர் மகுடம் தரித்து அரியாசனத்தில் அமர்ந்து ஓர் ஆண்டு முடிந்து விட்டது. கன வுகளைக் கண்ணில் சுமந்து, நம்பிக்கைகளை நெஞ்சில் நிறைத்து வாக்குச்சாவடிகளைத் தேடி வந்து, கலைஞரை வீட்டுக்கு அனுப்பும் விருப்பத்துடன் மக்கள் வழங்கிய தீர்ப்பு உங்களைக் கோட்டையில் கொண்டுபோய் அதிகார நாற்காலியில் அமரச் செய்தது. உங்கள் தலைமையில் தமிழகத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதைவிட, களப்பிரர்களைக் காட்டிலும் மோசமாக ஆட்சி செய்த கலைஞரின் பரிவாரத்திடம் இருந்து தமிழகத்தை எப்படியாவது விடுவித்தாக வேண்டும் என்பதே வாக்காளர்களின் வேட்கையாக இருந்தது. இந்தக் கணிப்பு உங்கள் உள்ளத்துக்கு உவப்பைத் தராமல் போனாலும் இதுதான் மறுக்கமுடியாத உண்மை. தமிழகத்தின் தேர்தல் வரலாற்றிலேயே உச்சபட்சமாக 77.8 சதவிகிதம் வாக்குகள் பதிவானதே கோட்டையில் இருந்து கலைஞரைக் கோபாலபுரத்துக்கு அனுப்பி வைக்கும் நோக்கத்துடன் புதிய வாக்காளர்கள். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 60

இடிப்பாரே இல்லா ஏமாறா ம்ன்னன் கெடுப்பார் இல்லானிம் கெடும்.

த்மிழ் அருவி மணீயன் அவர்கள் கருத்து கூற் விகட்ன் இடம் கொடுத்ததற்கு மிக்க நன்றி

காமராஜர் ஆட்சி நடந்தால் கூட எதையாவது சொல்லி பிழைப்பு நடத்துவார்.பிரார்த்தனையாமுல்ல.

எங்களுக்குத் தேவை காமராஜரைப் போல் எளிமை சார்ந்த, தன்னலமற்ற ஒரு முதல்வர். ஆடம்பர ஆரவாரங்களுக்கு இடம் தராத ஆட்சிமுறை, -- முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டியது காமராஜர் ஆட்சியில் சி சுப்பிரமணியம், கக்கன் போன்ற சான்றோர்கள் இருந்தனர். இங்கு அது போல் யாரையும் நாம் தேர்ந்தெடுக்கவில்லை. காமராஜர் ஆட்சி என்பதெல்லாம் இனி நினைத்து பார்க்க இயலாது..

'அம்மா, அம்மா’ என்று சந்நதம் வந்ததுபோல் வார்த்தைக்கு வார்த்தை பொய்யாய் உருகிப் போலியாய் நடிப்பதும், விடலைப் பிள்ளைகள் போல் அடிக்கடி ஓயாமல் மேஜையைத் தட்டுவதும் உங்கள் பெருமையை ஒரு போதும் உயர்த்தாது.--- மிக மிக மிக சரி.. இது போன்ற நல்ல தொரு கருத்துக்களை தெரிவியுங்கள். உங்களையும் எல்லாரும் மெச்சுவர்.

எல்லா மாவட்டங்களிலும் உயர் சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் நோயுற்றவர்க்கு எளி​தாகக் கிடைக்கச் செய்வதுதானே ஒரு நல்லரசின் நல்லடையாளமாக இருக்க முடியும்.-- இது போன்ற நல்ல பரிந்துரைகளை முதலில் பரிந்துரையுங்கள்.. அவர் கேட்கவில்லையெனில் அவரை சாடுங்கள். மக்கள் உங்களையும் மதிப்பர். அதை விடுத்து எடுத்தவுடன் குறை கூராதீர்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் அனைவரும் அ.இ.அ.தி.மு.க. அனுதாபிகள் என்று நாளை ஒரு மாற்று அரசு மலர்ந்து இவர்களை வீட்டுக்கு அனுப்பினால், அது விவேகமான செயல் என்று நீங்கள் ஆதரிப்​பீர்களா?-- ஒரு வேளை அதிமுக காரனை தேர்ந்தெடுத்தால் அப்படித்தான் நடக்கவேண்டும். ஆனால் இப்பொழுது எல்லாவற்றுக்கும் துணை போன பொதுனல வழக்கு கூட இப்பொழுது இவர்களுக்கு துணை போகாததிலிருந்து மக்கள் நல பணீயாளர் யார் என்பது தெரிந்தே இருக்கிறது.

தன்னந்தனியாக இருக்கும் உங்களுக்கு போயஸ் தோட்டத்தில் சசிகலா உதவியாக இருப்பதில் ஒரு தவறும் இல்லை. ஆனால், அரசு நிர்வாகத்தில் சசிகலா குடும்பம் நிச்சயம் தலையிடப் பார்க்கும். ஆடிய கால்களும் பாடிய வாயும் எளிதில் மௌனிப்பது இல்லை.--- ஆடும் பொழுது ஏன் பகிரங்கப்படுத்தாமல் உம்மை போன்றோர் வாய் மூடியிருக்கவேண்டுமென்பதே எனது ஆதங்கம்.. கூடியிருக்கும் பொழுது எல்லாம் இனிக்கிறது. ஆனால் கொஞ்சம் தள்ளிவைத்தால் குறை கூறுவதே உமது பிழப்பு என மாற்றிக்கொண்டுவிட்டீர் நீரும் என்றே நினைக்கதோன்றுகிறது.

கடந்த ஓர் ஆண்டில் உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் ஊழல் நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபட்டது இல்லை என்று இதயசுத்தியுடன் சொல்லக் கூடுமா? உங்கள் கவனத்துக்கு அவற்றைக் கொண்டு வந்தால், தக்க நடவடிக்கை எடுப்பீர்களா? ஊழலில் புழுத்துப்போனவர்களை நேர்மையாளர்களாக மாற்றிவிடக் கூடுமா? --- இவ்வாறு பேசுவதற்கு பதில் பகிரங்கமாக ஊழல் செய்தவர்களை வெளிப்படுத்திவிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினால் இவர் பக்கம் நியாயம் இருக்கிறது. அவர் ஊழல் செய்தவனை பற்றி குறை வந்தால் மாற்றிக்கொண்டுதான் இருக்கிறார். என்ன செய்வது நம் மக்கள் தேர்ந்தெடுத்த பெரும்பாலானோர் ஊழல்வாதிகளாகத்தான் இருக்கின்றனர்.

YOU ARE GREAT தமிழருவிமணியன்.

உள்ளதைச் சொன்னாலும், உண்மையைச் சொன்னாலும் யாரும் கேட்கப் போவதில்லை.

பிஸ்தா படத்துல கார்த்திக் சொல்லற மாதிரி... "அவ திருந்தலை!"

வாசு, பட்டாவுக்கான லஞ்சம் அதிகரித்திருப்பதற்கு காரணம், விலைவாசிதான். அதுக்கும் ஜெ வுக்கு சம்பந்தம் தொலைதூரம். இப்போதய சூழ்னிலையில் யார் ஆட்சி செய்தாலும் கீழ்மட்ட அளவில் தலைவிரித்து ஆடும் லஞ்சத்தை செய்வது அதிகாரிகள் மாறமாட்டார்கள்.

அதே மாதிரி இந்த ஆட்சி போன ஆட்சியைவிட மட்டம்னு உங்களைப் போல் வெகு சிலர் மட்டும் நினைக்கலாம். பெரும்பாலான மக்களுக்கு போன ஆட்சியைவிட எந்த ஆட்சியும் மேல்தான்.

தமிழருவி அய்யா,உன்
நெஞ்ச மட்டுமல்ல, காலையும் சேர்த்து நக்குறீங்களே. பிச்சபோடு தாயீன்னு கேக்கல, உங்க மடல்ல அவ்ளோதான்

Good article, well written. Hope the person to whom this is addressed takes some lessons!

ஆயிரம்தான் சொல்லுங்கள்.. அழுதாலும் புரண்டாலும் அதிமுக திமுக போல் ஆக முடியாது. ஊழல் சுதந்திரம் வாங்கிய காலத்திலிருந்து பஞ்சாயத்திலிருந்து பாராளுமன்றம் வரை பரவிக்கிடக்கும் ஒன்று. இதற்கு திமுகவை மட்டும் குறைசொல்பவர்கள் அரசியல் அறியாத அரைவேக்காடுகள் என்றுதான் சொல்லவேண்டும். மீண்டும் கலைஞர் மேற்பார்வையில் தளபதி தலைமையில் ஆட்சி அமையத்தான் போகிறது. அதையும் நீங்கள் எல்லாம் பார்க்கத்தான் போகிறீர்கள். மற்றபடி தமிழருவி மணியன் ஏதோ தன்னை நியாயவாதிபோல் நினைத்துக்கொண்டு யதார்த்தநிலை புரியாமல் புலம்புயிருக்கிறார். இவர் கலைஞரோடு இணக்கமாக இருந்தபோதெல்லாம் தெரியாத குறைகள் தனது குடியிருப்பு வீட்டுக்கு பாதிப்பு வந்தவுடன் குய்யோ முறையோ எனப் புலம்புவதில் எவ்வித நியாயமும் எதிர்பார்க்கலாகாது.

தமிழருவி மணியன் அவர்கள் நல்லதிற்கு சொல்கிறார்... அதையெல்லாம் ஜெயா கேட்டகனுமே...

Kamarajar rule again ? Impossible with current crop of leaders.

Again Kamarajar betrayed Tamilnadu in Peelamedu issue.He came from a different background that never read how British created United India. They used all the skills under the sky to do so.Without realing the gift they got,Kamarajar crowd just frittered away the future well being of Tamilnadu

தி மு க ஆட்சியே மேல் என்று எங்களைப் போன்றவர்கள் எல்லாம் நினைக்கத்தொடங்கிவிட்டார்கள்.அவ்வளவு மோசமாக ஆட்சி நடக்கிறது.அளவுக்கு மேல் லஞ்சம் தலை விரித்தாடுகிறது.முன்பு பட்டா பெயர் மற்றம் செய்ய 1500 கொடுத்தால் போதும்.இப்போது 5000 கேட்கிறார்கள்.இது மட்டுமல்ல,எல்லா இடத்திலும்தான்.இப்படியே போனால் ஓட்டு போடக்கூட எவனும் வரமாட்டான்.

இந்த ஆட்சியில் , மணல் கொள்ளையும், சட்டம் ஒழுங்கு சீர் குழைவும் மிகவும் அதிகம். டாஸ்மாக் போதையை விட மோசமானது , முதல்வர் ஜால்ரா போதையில் மூழ்கி இருப்பது.

தமிழருவி அய்யா
நெஞ்ச மட்டுமல்ல, காலையும் சேர்த்து நக்குறீங்களே. பிச்சபோடு தாயீன்னு கேக்கல, உங்க மடல்ல அவ்ளோதான்.

மணீயன் அவர்கள் மக்கள் நினைக்கிரார்கள்,மக்கள் பேசுகிறார்கள் என சொல்வது எந்த அளவுகோலின்படியோ தெரியவில்லை. மக்கள் மனம் இவருக்கு மட்டும் தான் தெரிவதுபோல் கூறுகிறார். அப்படி மக்கள் மனம் அறிந்தவராக இருந்திருந்தால் இவர் இன்னும் நல்ல அரசியல்வாதியாக திகழ்ந்திருக்கமுடியுமே

உங்க கடிதத்திற்கு ஜெ,யின் ரியாக்சனை பாருங்கய்யா....

நிறையவே தவறான கருத்து.
நிர்வாக திறன் வேண்டும் - அது இருக்கிறது.
பொருளாதார தொலை நோக்கு தேவை - அதுவும் இருக்கிறது.
திடமான முடிவுகளை எடுக்க துணிவு வேண்டும் - அதுவும் இருக்கிறது.
விவேகத்துடன் தன் நிலையிலிருந்து இறங்கி (ஏறி) வர வேண்டும் - அதுவும் இருக்கிறது.

ஒரு அரசை நடத்துப் பொழுது எல்லோருக்கும் நல்லது செய்ய இயலாது அதனை உணராதவராக இருக்கிறார் தமிழருவி மணியன்.

ஓருவருக்கு நல்லது மற்றவருக்கு நல்லதல்லவே. ஒரு சாலை போட வேண்டும் எனில் அதற்கு நிலத்தை வாங்க வேண்டுமே- அதனால் இழப்பு நில உரிமையாளருக்கு. சாலை மூலம் பயன் பெறுபவர் அரசை பாராட்டலாம் ஆனால் அந்த ஏழை விவசாயி? ஆக எது சரி, நிலத்தை வாங்காமல் இருப்பதா இல்லை சாலை அமைப்பதா?

இவரது கருத்துகள் அது போல இருக்கிறது.

பஸ் கட்டண உயர்வை பார்க்கவும். அரசிற்கு நிதி நெருக்கடி (அரசு நிறுவனம் போக்குவரத்து கழகம். அவர்கள் அரசு ஊழியர்கள் அல்லவே). பஸ் கட்டணத்தை உயர்த்தினால் அவதி என்று பொதுமக்கள் எல்லோரும் கருதினால் போக்குவரத்து கழக ஊழியருக்கு ஊதியம், போனஸ் தர இயலாது - அது அவர்களுக்கு நல்லதல்லவே? டீஸல் வாங்க இயலாது அதனால் பஸ்கள் இயக்க இயலாது. ஊழல், திருட்டு என்பது இலலை என்று கொண்டாலும்.

ஆக கட்டண உயர்வை எதிர்ப்பதா இல்லை திடமான தொலை நோக்க்கோடு எடுத்த முடிவு என்று ஆதரிப்பதா? இன்று பல நூறு புது வாகனங்களா வாங்கி இயக்க முடிகிறதே?

ஆக திட்ட வேண்டும் என்று நினைத்தால் இவரை, மன்மோகனை, முக வை நிறைய காரணங்களோடு திட்டலாம். அது போல அதே விஷயங்களுக்காக இவரை பாராட்டுபவர்களும் அதிகம் என்பதை உண்ர் வேண்டும்.

பத்திரிக்கை, மீடியா இவரின் குறைகளை மட்டுமே காட்ட விழையும் ஏனெனில் அதில அவர்களின் பிழைப்பு உள்ளது. வருமானம் உள்ளது. ஒரு சென்ஷேனலிஸம் இருக்கிறது.

முக வும் சரி, ஜெ ஜெ வும் சரி பல்வேறு (சாதி, மதம்) பிரிவுகளை ஆள்கிறார்கள் - நல்ல மற்றும் புளுத்து போன அரசியல்வாதிகள், அதிகாரிகள் இருந்தும் கூட.

அதற்காக அவர்களை பாராட்ட வேண்டும். தங்களுக்காக 1991 - 1996 ஜெஜெ, 2006 - 2011 முக (மற்றும் 70 - களில்) கொள்ளை அடிக்காதிருப்பின்.

இதுவரை ஜெஜெ கொள்ளை அடிக்கவில்லை என்றே தோன்றுகிறது. மற்றவை எல்லாம் ஒருவருக்கு தவறு எனில் மற்றவருக்கு சரி. அதனை ஆய்ந்து முடிவு எடுப்பதை அவருக்கு தந்திருக்கிறோம். அதற்கு கட்டுபடுவது ஜனநாயக கடமை.

Thamizharuvi sir, Your advice are ok. But nothing going to happen anymore, we have practice ourself for another four years.

  Displaying 1 - 25 of 52
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 23 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook