மீண்டும் குடும்பக் குத்து! மீண்டும் குடும்பக் குத்தாட்டம் மதுரையில் ஆரம்பம்! கருணாநிதியின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக மதுரையில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டம், மீண்டும் ஒரு பிரளயத்தை தி.மு.க. மேலிடத்தில் கிளப்பியுள்ளது. கடந்த 26-ம் தேதி நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பொறுப்பாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? மொத்தமே 20 பேர். ஆட்கள் குறைவு என்றதும், வாடகைக்கு ஆட்களைத் திரட்டி வந்த பிறகும் கலந்துகொண்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 200-ஐத் தாண்டவில்லை என்பதுதான் சோகம். சமீபத்தில் அழகிரியின் அனுமதி இல்லாமலேயே மதுரைக்கு வந்த ஸ்டாலின், இளைஞர் அணி நேர்காணல், பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திவிட்டுத் திரும்பினார். அதனால், மதுரையிலும் கட்சி அவரது கைக்குப் போய்விட்டதாகச் சொன்னார்கள். 'அப்படி எல்லாம் இல்லை. என்றைக்குமே, மதுரைக்கு அண்ணன்தான் மன்னன்’ என்று சொல்லாமல் சொல்வதற்காகத்தான் இந்தக் கூட்டத்தை நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தார்களாம். மதுரை மாநகரில் மொத்தம் உள்ள 72 வட்டச் செயலாளர்களில் 66 பேர் ஆப்சென்ட். 9. . .
இவனுங்களுக்கு பொழுது போனா பொழுது விடிஞ்சா வேற வேலையே.. கருணாநிதி என்ன ஒரு வயசு பாப்பாவா... பொறந்த நாள் கொண்டாடுறதுக்கு...? உங்கள எல்லாம் கொசு மருந்த அடிச்சித்தான் விரட்டனும். தமிழ்நாட்டுல அவனவன் பெட்ரோலுக்காக வெயில்ல கெடந்து சாகுறான்.. உங்க அப்பனுக்கு பொறந்த நாள் மட்டும்தான மிக அவசியம்..
ஏம்ப்பா கழக உடன் பிறப்புகளே ! உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? உங்கள் தலைவரின் பிறந்த நாள் விழாவில் கூட சிண்டு பிடி சண்டை போடும் எதிர் காலத் தலைவர்களான இந்த சகோதரர்கள் இருவரும் சண்டைக் கோழி போல சிலிர்த்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தும் இவர்களை இன்னும் நம்பி இவர்கள் பின்னால் இன்னமும் செல்வதற்கு?
அந்தப் பெரியவருக்குத் தலைமையினால் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயரைப் பற்றி ஒன்றுமே கவலையில்லையாமா? அவரவருக்கு அவர் காரியம் தான் பெரியது... தலைமை எவ்வழி தொண்டர்கள் அவ்வழி!!!!
கொஞ்சம் மதிப்பு குறைந்துவிட்டதெனில் அப்பன் ராஜீனாமா நாடகம் ஆடுவான். மகன்கள் சண்டை போட்டுக்கொண்டு பொதுமக்கள் சிலரை கொல்வர்.. அவர்கள் குடியில் எதுவும் ஆகிவிடாது. சாவதும் வீழ்வதும் நஷ்டப்படுவதும் பொதுஜெனமாகவே இருக்கும்.. இப்படிபட்ட கேவலமான குடியில் வந்ததுகளுக்கு ஒரு பெரிய முட்டாள் கூட்டம் தொண்டர்களாக இருப்பதே தமிழனாக பிறந்த ஒவ்வொருவனும் வெட்கவேண்டிய விஷயம்.
எந்த கழகம் தனது கையைவிட்டுப் போய்விடக்கூடாது என்று கலைஞர் நினைத்தாரோ, அந்த கழகம் அவரது வாரிசுகளாலேயே பந்தாடப்படுவது விசித்திரம். உட்கட்சி ஜனநாயகம் நலிவுற்று, உண்மையான தொண்டர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, உதட்டளவில் உறவை வைத்து நெஞ்சத்தளவில் நஞ்சினை வைத்தோர் உயரே வந்ததனால் விளைந்த விளைவு இது. இன்றைய சூழலில், உண்மையான உடன்பிறப்பு திக்கற்று இருக்கின்றான் என்பதே நிதர்சனம்.
COMMENT(S): 20
மதுரையிலே நித்தியிருக்கும் வரை திமுக கோஷ்டி கொஞ்சல்களெல்லாம் அவ்வளவு சீரியஸாக வெளியே வராது...
தென்னைய பெத்தா இளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீரு! அதுவும் இது மாதிரி ரெண்டு பிள்ளைய பெத்தா ரொம்ப்ப்ப்ப ரொம்ப்ப்ப்ப கண்ணீரு...
திமுக ஓர் அசிங்கம்; அதிமுக அசிங்கமோ அசிங்கம்.
இவனுங்களுக்கு பொழுது போனா பொழுது விடிஞ்சா வேற வேலையே.. கருணாநிதி என்ன ஒரு வயசு பாப்பாவா... பொறந்த நாள் கொண்டாடுறதுக்கு...? உங்கள எல்லாம் கொசு மருந்த அடிச்சித்தான் விரட்டனும். தமிழ்நாட்டுல அவனவன் பெட்ரோலுக்காக வெயில்ல கெடந்து சாகுறான்.. உங்க அப்பனுக்கு பொறந்த நாள் மட்டும்தான மிக அவசியம்..
ஏம்ப்பா கழக உடன் பிறப்புகளே ! உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? உங்கள் தலைவரின் பிறந்த நாள் விழாவில் கூட சிண்டு பிடி சண்டை போடும் எதிர் காலத் தலைவர்களான இந்த சகோதரர்கள் இருவரும் சண்டைக் கோழி போல சிலிர்த்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தும் இவர்களை இன்னும் நம்பி இவர்கள் பின்னால் இன்னமும் செல்வதற்கு?
"தற்காப்பு ஆட்டம் ஆடினார்" - தவறு.
"என்று தற்காப்புக்காக சொல்லி வைத்தார்"
========
"அழகிரி பெயரையோ, ஸ்டாலின் பெயரையோ உச்சரிக்கவில்லை."
"அழகிரி பெயரையோ, ஸ்டாலின் பெயரையோ ஒரு முறை கூட குறிப்படவில்லை" இது இப்படி இருந்தால் மேலும் நன்றாக இருக்கும்.
=======
அந்தப் பெரியவருக்குத் தலைமையினால் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயரைப் பற்றி ஒன்றுமே கவலையில்லையாமா? அவரவருக்கு அவர் காரியம் தான் பெரியது... தலைமை எவ்வழி தொண்டர்கள் அவ்வழி!!!!
மதுரை அசிங்கத்தை தலைமை எப்படித் துடைக்கப்போகிறதோ?#
விடுங்க பாஸு.... இவங்களும் நித்தியும் இல்லன்னா பத்திரிக்கை நடத்த முடியாது.
கொஞ்சம் மதிப்பு குறைந்துவிட்டதெனில் அப்பன் ராஜீனாமா நாடகம் ஆடுவான். மகன்கள் சண்டை போட்டுக்கொண்டு பொதுமக்கள் சிலரை கொல்வர்.. அவர்கள் குடியில் எதுவும் ஆகிவிடாது. சாவதும் வீழ்வதும் நஷ்டப்படுவதும் பொதுஜெனமாகவே இருக்கும்.. இப்படிபட்ட கேவலமான குடியில் வந்ததுகளுக்கு ஒரு பெரிய முட்டாள் கூட்டம் தொண்டர்களாக இருப்பதே தமிழனாக பிறந்த ஒவ்வொருவனும் வெட்கவேண்டிய விஷயம்.
மதுரை அசிங்கத்தை தலைமை எப்படித் துடைக்கப்போகிறதோ?-- மதுரையில் மட்டும் தான் அசிங்கமா?
தலைமைதானே எல்லா அசிங்கங்களின் பிறப்பிடம்!
End of DMK days
அழகிரி சொன்னா உதயசூரியனையேதோற்கடிக்கிற பயலுங்க இங்க அதிகம்...
ஜெயிக்கதான் முடியாது தோக்கவாவது வைக்கிறாங்களே...
கட்சியைச் சீக்கிரமா குழி தோண்டி புதைச்சிடுங்க... தமிழ் நாட்டை அம்மா புதைச்சிக்குவாங்க!
எந்த கழகம் தனது கையைவிட்டுப் போய்விடக்கூடாது என்று கலைஞர் நினைத்தாரோ, அந்த கழகம் அவரது வாரிசுகளாலேயே பந்தாடப்படுவது விசித்திரம். உட்கட்சி ஜனநாயகம் நலிவுற்று, உண்மையான தொண்டர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, உதட்டளவில் உறவை வைத்து நெஞ்சத்தளவில் நஞ்சினை வைத்தோர் உயரே வந்ததனால் விளைந்த விளைவு இது. இன்றைய சூழலில், உண்மையான உடன்பிறப்பு திக்கற்று இருக்கின்றான் என்பதே நிதர்சனம்.
*****மதுரை அசிங்கத்தை தலைமை எப்படித் துடைக்கப்போகிறதோ?****
நல்லா கேட்டே மாமு..எப்டீயாவது அ'சிங்கத்த'துடைச்சா எல்லோருக்கும் நல்லதுதான்
ஒழியட்டும்
திமுக வே அசிங்கம்தான்
முகவின் நேர்மைக்கு(!) இதுதான் கிடைக்கும். மக்கள் இன்னும் திமுக பின்னால் போவது ஏன் ?. கொள்ளை எப்படி அடிக்கலாம் என்று பயர்ச்சி பெறவா ?.