வருசநாடு... ஊத்தங்கரை... பழனிமலை... முருகமலை... செங்கொடி பூமியாய் தமிழகம் மாறிக்கொண்டு இருக்கிறது! சென்னையில் மாவோயிஸ்ட் இயக்கப் பொதுச் செயலாளர் விவேக் கைது செய்யப்பட்ட நேரத்தில், 'எனது பணியைத் தொடர்ந்து செய்ய வெளியில் ஆட்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் மாவோயிஸ்ட்களின் செயல்பாடுகள் மிக திருப்தியாக இருக்கிறது’ என்று சொல்லி இருந்தார். அப்படி என்றால் தமிழகத்தில் மாவோயிஸ்ட்கள் இருக்கிறார்களா என்று நக்சல் தடுப்பு போலீஸாரிடம் விசாரித்தோம். நமக்குக் கிடைத்த தகவல் எல்லாமே அதிர்ச்சி ரகம். ''மாவோயிஸ்ட் சித்தாந்தத்தைத் தீவிரமாக ஆதரிப்பவர்கள் என்று கணக்கிட்டால், தமிழகத்தில் தோராயமாக 6,000 பேரைக் குறித்து வைத்துள்ளோம். இதில் 1,000 பேர் வழக்கறிஞர்கள், 500 பேர் சட்டக் கல்லூரி மாணவர்கள். 2007-ம் ஆண்டு ஊத்தங்கரை, முருகமலை, வருசநாடு பகுதிகளில் நக்சல்கள் பயிற்சியில் ஈடுபடுவது வெளியே தெரிந்த பிறகே, நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸ் அணி உதயமானது. தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் நக்சல் தடுப்புப் போலீஸார் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், இன்னும். . .
மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லாத அரசுகள். இதில் கொடுமை என்னவென்றால் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் அரசாங்கம் மக்களுக்கு எதிராகவே செய்படுகின்றன. எதற்கெடுத்தாலும் லஞ்சம் ஊழல் மற்றும் சிவப்பு நாடா அட்டூழியங்கள். அரசு அதிகாரிகளின் ஆணவம் மற்றும் அலட்சியம். ஏகப் பட்ட விதி முறைகள். கசக்கிப் பிழியும் வரி, கண்டபடி விலையேற்றம். மக்கள் என்னதான் செய்வார்கள். அரசியல்வாதிகள் மக்களையும் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதன் மூலம் முழு ஊழல்வாதிகளாக்கி விட்டார்கள். இது எங்கு போய் முடியும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
அடிப்படை உரிமை பரிக்கப்படுவதால்தானே அரசங்கத்திற்கு எதிராக போராடவேண்டியிருக்கிறது. அவர்களை அடக்குவதற்கு அரசு இவ்வளவு செலவு செய்கிறதே அதில் பாதியை அவர்களுக்கான அடிப்படை வசதிக்கு செலவளித்தாலே போதும். எந்த நக்சலும் உருவாக வாய்ப்பேயில்லை..
மாவோயிஸ்ட்டுகளுக்கு வேண்டுகோள். தயவு செய்து உங்கள் ஆட்டத்தை பழைய, புதிய எம்.எல்.ஏ.க்கள், கட்சி செயலாளர்களுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். அபாரமாக வளர்வீர்கள். அதன் பிறகு சினிமாக்காரர்கள், அதிகாரிகள், நீதித்துறை இவற்றை கவனிக்கலாம்.
மத்திய அரசும் மாநில அரசும் மக்கள் நலனை பற்றி கவலைப்படுவதேயில்லை. பின்பு புரட்சி உருவாகமல் புடலங்காயா விளையும்?
யாருக்காவது பிரச்னை என்றால் சுயநலவாதிகளாய் நாம் கண்டுகொள்வதில்லை, குறைந்தபட்சம் எங்கோ ஒரு சமூகத்திற்கு தீங்களிக்கும் கட்சிக்கு வாக்களிக்காமல் இருக்கலாம் அல்லவா?
நாமே குற்றவாளிகளாய் இருந்து கொண்டு மாவோயிஸ்ட்களை ஒழிக்க வேண்டும் என இணையத்தில் அபத்தமாய் கருத்து தெரிவிக்கிறோம்.
மாவோயிஸ்ட்களை உருவாக்கிய காரணி யார்? சட்டீஸ்கரில் கலெக்டர் கடத்தப்பட்டதற்கு உணர்ச்சி வசப்பட்ட நாம் அங்குள்ள மக்களின் கனிம வளங்களை மட்டும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் சுரண்டி மக்களை நிர்க்கதிக்கு உள்ளாக்க்குகிறது என காங்கிரஸுக்கு வாக்களிக்காமல் இருக்கலாம் அல்லவா?
"தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்ற பாரதியின் கூற்றை சிந்தித்து செயல்படாதவரை நாட்டின் நிலைமை மோசாமாகுவதை தவிர்க்க இயலாது.
COMMENT(S): 9

அப்பாவி மக்களுக்கு தீவிரவாதி பட்டம் சூட்டி, நல்ல நிலங்களை அபகரித்து அந்நியர்களுக்கு விற்று காசு பார்ப்பதில் வல்லவ்ர் ஆகிவிட்டார் நம்ம சோனியா....
அடிப்படை உரிமை பரிக்கப்படுவதால்தானே அரசங்கத்திற்கு எதிராக போராடவேண்டியிருக்கிறது. அவர்களை அடக்குவதற்கு அரசு இவ்வளவு செலவு செய்கிறதே அதில் பாதியை அவர்களுக்கான அடிப்படை வசதிக்கு செலவளித்தாலே போதும். எந்த நக்சலும் உருவாக வாய்ப்பேயில்லை..
அரசாங்கமும் அரசயில்வாதிகளூம் தான் தீவிரவாதிகளையும் மாவோயிஸ்டுகளையும் உருவாக்குகிறது. சாந்தா
சுதந்திரம் மறுக்கப்படும்போது போராளிகளாக மாறுவதை தள்ளிப்போடலாம், ஆனால் தவிர்க்கமுடியாது.
மாவோயிஸ்டுகளின் குரல் ஓங்கி ஒலிக்கிறதே இந்த இதழில்... என்ன அடுத்த இயக்கத்திற்கு ஆதரவு ஆரம்பமாகிவிட்டதா?
சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற விரக்தியா?
மாவோயிஸ்ட்டுகளுக்கு வேண்டுகோள். தயவு செய்து உங்கள் ஆட்டத்தை பழைய, புதிய எம்.எல்.ஏ.க்கள், கட்சி செயலாளர்களுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். அபாரமாக வளர்வீர்கள். அதன் பிறகு சினிமாக்காரர்கள், அதிகாரிகள், நீதித்துறை இவற்றை கவனிக்கலாம்.
வாரம் ஒரு மாவோயிஸ்ட் கட்டுரை. இந்த இதழ் கொட்டா ஓவர்.