• தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம்
  • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
24 May, 2013
கவாத்துக்குத் தப்பிய செடிகள்!
கவாத்துக்குத் தப்பிய செடிகள்!டைட்டானிக் கப்பலில் சென்ற ஆயிரத்துச் சொச்​சம் பேர் கடலில் மூழ்கிப் போனது பற்றி இதுவரை மூன்று திரைப்​படங்​கள் வெளிவந்துவிட்டன. மூவாயிரம் புத்தகங்கள் வந்துவிட்டன. இலங்கைக்குத் தேயிலை பறிக்க தமிழக மக்களை ஏற்றிச் சென்று மூழ்கிப்போன 'ஆதிலட்சுமி’ கப்பலை எத்தனை பேருக்குத் தெரியும்? மலைகளில் ஏறிவிட்டாலும் வாழ்க்கையில் கரை ஏற முடியாத ஏழை மக்களின் துயரம்,  சொல்லால் வடிக்க முடியாத சோகம்.   அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என அறிய சமீபத்தில் இலங்கை சென்று வந்தேன். அப்போதைய மனவோட்டம்தான் இது. இலங்கையில் 2-ம் தேதி இறங்கினேன். தமிழர்ப் பகுதிகளான மட்டக்களப்பிலும் அனுராதபுரத்திலும் 8-ம் தேதி தேர்தல் நடக்க இருந்ததை ஒட்டி எல்லாக் கட்சி​யினரும் மேடைகளில் முழங்கிக்கொண்டு இருந்தனர். தமிழகத்தில் சுற்றுப்பயணம் வந்த சிங்களவர்களைத் திருப்பி அனுப்பிய செய்தி அந்தப் பிரசார மேடைகளில்  விவகாரம் ஆகிவிட்டது. லட்சக்கணக்கில் தமிழர்களைக் கொன்று குவித்த... அந்த ரத்தம் காயாத நிலையில் ராஜபக்ஷே, 'மக்கள் இனவாதத்தை விட்டுவிட. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 29

மனம் வலிக்கிரது பாவம் பஞ்ஜம் பிழைக்க என்ரொ போனவர்கள் இன்ரு கொத்தடிமைகளா வாழும் அவலம் வருத்தமா இருக்கு

இலங்கையில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தேசிய அடையாள அட்டைய பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டம்.
சிங்களவர்களின் அடையாள அட்டையில் சிங்களத்திலும்,
தமிழர் மற்றும் முஸ்லிம்களின் அடையாள அட்டையின் பின் புறத்தில் தமிழிழும் சிங்களத்திலும் சம்பத்தப் பட்டவரின் விபரங்கள் எழுதப்பட்டிருக்கும்.

மேலதிகமாக சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் அடையாள அட்டையின் முன் பக்கத்தில் ஒரு குறியீட்டு சுட்டிலக்கம் தரப்பட்டிருக்கும். அதன் முடிவில் வ் என்ற ஆங்கில எழுத்து இடப்பட்டிருக்கும்.

ஆனால் மலையக தமிழர்களின் தேசிய அடையாள அட்டையின் சுட்டிலக்க முடிவில் வ் என்கிற ஆங்கில எழுத்திற்குப் பதிலாக ௯ என்கிற ஆங்கில எழுத்தே இடப்பட்டிருக்கும்.

மலையகத் தமிழர்கள் இந்திய வம்சாவளியினர். அவர்கள் இலங்கையிலேயே இருக்கின்றனர். அவர்கள் சீமான், வைகோ போன்றோருக்கு பொருளுதவி அளிக்கும் அளவுக்கு வசதியானவர்கள் அல்லர், அதனால், அவர்களைக் கண்டுகொள்ளாமல் போனதில் ஆச்சரியமென்ன இருக்கிறது.

இலங்கை அரசு தமிழ் பேசும் மலையகத் தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள் மற்றும் யாழ் தமிழர்கள் யாவரும் ஒன்று சேராத படிக்கு கவனமாக தனது பிரித்தாளும் சூழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தது.

இப்போது இந்தியாவை குறைசொல்லும் யாழ் தமிழ்ர்கள் 40 வருடங்களுக்கு முன் மலையக தமிழர்களை எவ்வளவு கேவலமாக நடத்தினர் என்று இப்போது யாரும் நினைவு கொள்வதில்லை.பார்த்தால் இந்திய அரசு இவர்களுக்குதான் ஏதேனு உதவ வேண்டும் ஏனென்றால் இவர்கள் இந்திய வம்சா வழியினர்.

SRI LANKA IS VERY CONFIDENT THAT INDIAN GOVERNMENT WILL PROTECT THEM WHAT EVER THEY DO TO TAMILS AND ALSO KNOWS TAMILS ARE ILICHA VAAYAN ENDU.............

ஆசிரியர் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கும் சிலரும் அப்படி கவாத்துக்குத் தப்பிய செடிகள்​தான்! - மனதை என்னவோ செய்கிறது...
மலையகத்தமிழர்களில் பாதிபேருக்கு இன்னும் இலங்கை குடியுரிமை கிடைக்கவில்லை என்பது உண்மையா என்பதையும் விசாரித்து எழுதியிருக்கலாம்...
மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரனும் கவாத்துக்கு தப்பிய செடிதானே?...

தற்போது நாடற்றவர் என்று யாரும் இல்லை. சிங்களவரும் மலையக தமிழர்களும் பல தசாப்தங்கள் ஒற்றுமையாய் வாழ்கிறார்கள்.( அரசியல்வாதிகளால் இனக்கலவரம் உண்டாக்கப்பட்டது உண்மையே, உ ம் கேரளா) வடகிழக்கு வன்முறைகள் எவர் செய்தாலும் இவர்களுக்குதான் அடி விழும். முள்ளிவாய்க்காலில் மனிதகேடயமாய் நின்று உயிர் விட்டவர்களும் இவர்களே அதிகம், மாவீரர்களாய் மரணனித்தவர்களும் அதிகம் இவர்களே, ஆணாலும் இவர்களுக்கு மரியாதை தர மறுக்கும் ஈழம் "வடகத்தியான்" என்றுதான் அழைப்பர்.இது எல்லாம் தெறியுமா? சீமானுக்கு. நாடற்றவர் ஆக்கியதற்க்கு துணை போனவர் ஜீ ஜீ பொன்னம்பலம்.

காடாய்க்கிடந்த இடத்தில் 200 ஆண்டு உழைப்பில் தோட்​டம் உருவாக்கி தங்கள் ரத்தத் தையும் வேர்வையையும் இட்டு தேயிலை வளர்த்த​வர்​களுக்கு அதைக் குடிக்கும் அனுமதி இல்லை. சோகத்தின் உச்சம் இது.

அகதிகளாய் வந்து, அரசியல் ஆக்கப்பட்டு, இன்னும் அகதியாய் தமிழ் நாட்டில் அடைந்து கிடப்போரின் கதியும் கூட சோகத்தின் உச்சம் தான்

தொண்டமான் இருந்தவரை இவர்களுக்கு ஒரு தலைவர் இருந்தார். இப்போது யாரும் இல்லை.
புலிகளுக்கு அடைகலம் தராததால் மலையக மக்களை அவர்களுக்கு பிடிக்காது.

The only option left to the tea labours is to look for a plantation industry in india(Parry industries) annamalai's.upto my knowledge please guide them the formalities if some body in the same industry

கவாத்துக்குத் அகப்பட்ட செடிகள் மட்டுமே அவர்கள். ஆனாலும் அதையும் தான்டி கவாத்துக்குத் தப்பிவிட்ட செடிகள் நிறையவே இருக்கிறார்கள்.இலங்கை முலுவதிலும் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.

வடக்குக்கிழக்கில் வாழும் தமிழர்கள் படைக்கலப் போராட்டம் தொடங்க முன்னர் இவர்களது நிலை மோசமாக இருந்தது. மலையகத் தமிழர்கள் படைக்கலப் போராட்டத்தில் இணையாமல் இருக்க அவக்ர்களுக்கு வாக்குரிமை போன்ற சில சலுகைகள் வழங்கப்பட்டன.

தமிழ் அரசியல் கட்சியான தமிழ் காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் இலங்கை பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்ட பின்னர் இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணக்க முற்பட்டார். அவர் தனது காங்கிரசையும் இந்தியாவிலிருந்து வந்து இலங்கையின் மலைநாட்டுப்பகுதியில் குடியேறிய தமிழர்களின் தலைவராக இருந்த ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் இயங்கிய தோட்டத் தொழிலாளர் காங்கிரசையும் ஒன்றிணைக்கும் தனது எண்ணத்தை திரு எஸ் தொண்டமான் அவர்களிடம் தெரிவித்தார். திரு தொண்டமானுக்கும் இது நல்ல ஆலோசனையாகப்பட்டது . தொண்டமான் இது தொடர்பாக அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அவர்களிடம் ஆலோசனை கேட்டார். பேரினவாதியான நேரு, தொண்டமானைப் பெரும்பான்மை சமூகத்துடன் ஒத்துழக்குமாறு பணித்தார். தொண்டமானும் அதன்படியே பொன்னம்பலத்தின் ஆலோசனையை நிராகரித்தார். ஆனால் சிங்களப் பேரினவாதிகள் தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்தபோது தொண்டமான் நேருவிடம் முறையிட்டார். நேரு இது உள்நாட்டு விவகாரம் என்று பகிரங்கமாகச் சொல்லித் தட்டிக் கழித்தார். இங்கு ஆரமபமானது இந்திய ஆட்சியாளர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு அள்ளி வைப்பது.

சிரீமாவோ - சாஸ்திரி உடன்பாட்டிலும் இம்மக்களுக்கு துயரமே மிச்சம்.

நல்ல பதிவு. தமிழ்ச் சமூகம் இரண்டு - மூன்றாம் நூற்றாண்டு முதலே, பல்வேறு நாடுகளுக்கும், கண்டங்களுக்கும் புலம்பெயர்ந்துள்ளனர். அப்படிப்போன பல இடங்களிலும், அங்குள்ள இன மக்களுடன் கலந்த பின்னரே மேன்மைப்பட்டுள்ளனர்.

யூரோப்பில் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு மேல் இருந்தால் அந்தந்த நாட்டுக் குடியுரிமை எளிதில் கிடைக்கிறது.இலங்கையில் இந்த பாவப்பட்ட ஜென்மங்களுக்கு எந்தத் தகுதியான தலைவரும் இல்லாததே சோகம்.

I am a professional accountant from the same community and used to work in the plantation sector, biggest challange is leadership. People who claim as leaders for this community do not have any vision and most of them are working for their own benefits rather to their community.

இப்போது இந்தியாவில் தேயிலை தொழிளுக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. நீலகிரி, வால்பாறை போன்ற இடங்களில் ஆல் பற்றார்க்குறை உள்ளது. இவர்கள் இன்னும் இந்தியர்களாவே உள்ளதால் பேசாமல் இங்கு குடி பெயரலாம். அது சரி எப்படி ஒரு தும்மாண்டு சீரி லங்க இப்படி இந்தியர்களை எதிர்த்து நடக்கிரது ?.

நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டு இந்தக் கட்டுரையைப் படித்ததும், குற்ற உணர்ச்சியுடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.. நாம் செய்ய முடிந்தத்து ஒன்றுமில்லை தான்.. ஆனால் கடவுளிடம் "இவர்கள் வாழ்வில் முன்னேற்றத்தைக் கொடுத்து அருள வேண்டும் தெய்வமே" என்று வேண்டினேன்.. நம் தமிழகத்திலுள்ள மலைப்பிரதேங்களுக்கும் ஒரு விசிட் அடிக்கலாமே!

கவாத்துக்குத் தப்பிவிட்ட செடி... மரமாக வளர்ந்துவிட்டது''.....ஆச்சரியமான செய்தி.

Displaying 1 - 19 of 19
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 19 Sep, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook