Latest News
Published on :30-11--0001 06:00 AM
பதற்றக்குடி!
பதற்றக்குடி! ஏகப்பட்ட முன்னேற்பாடுகள், எட்டு மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி-க்களின் தொடர்ச்சியான ஆலோசனைக் கூட்டங்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்களின் பாதுகாப்பு, டி.ஜி.பி-யே நேரில் வந்து ஆய்வு... எனக் கடந்த ஒரு மாதமாக முன்னேற்பாடுகள் செய்தும்...மறுபடியும் ரணகளம்தான். வழக்கம்போலவே இந்த ஆண்டும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா பெரும் பதற்றத்தோடும், பலியோடும் நடந்து முடிந்து உள்ளது. இன்னும் பதற்றம் நீங்காமல் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவே, ஒட்டுமொத்த மக்களும் திகிலில் உள்ளனர்!  பாதை மாறிய பயணம்! அக்டோபர் 28, 29, 30 என மூன்று நாட்கள் நடக்கும் தேவர் குருபூஜையில், 30-ம் தேதி மட்டும் அரசு விழாவாக நடத்தப்படுகிறது. அன்றைய தினம்​தான் பெரும்பாலான அரசியல் கட்சித்தலைவர்​களும், முக்குலத்தோர் அமைப்புகளும் அஞ்சலி செலுத்த வருகின்றனர். பல தலைவர்களும் அஞ்சலி செலுத்தக் கிளம்பிய நேரத்தில்... அதாவது, காலை 10.30 மணிக்கு பரமக்குடி அருகேயுள்ள பாம்புவிழுந்தான் கிராமத்தில் சிவகுமார் என்ற வேன். . .

COMMENT(S): 38

இது மாதிரி குரு பூசை, தெரு பூசை எல்லாம் "குடிமகன்"களுக்கு குடிக்க இன்னொரு சாக்கு, அரசாங்கத்துக்கு இன்னும் கொஞ்சம் வருமானத்துக்கு ஒரு சாக்கு. ஒழுங்கா வேலை இருக்குறவன் அதை பார்க்க போயிருவான், தண்ணியடிச்சுட்டு ஊரை சுத்துர பொறுக்கிகள்தான் இந்த மாதிரி பூசைக்கு போய் சேட்டை பண்ணி அடி வாங்குறது. பூசை பண்றவன் வீட்ல இருந்தே பண்ண முடியாதா என்ன?

ஜாதிகளை உருவாக்கியவர்கள் காலத்திற்கேற்ப இடத்திற்கேற்ப தங்களை மாற்றிகொண்டு வெளிநாடு சென்றால் பன்னிகறி உண்டு வெளிநாட்டுக்காரர்களிடம் "ஐ லவ் பேக்கான்" என்று சுகத்துடன் வலம் வருகிறார்கள்.

நாமோ அவர்கள் உருவாக்கிய ஜாதிப்பிரிவினையில் சண்டை போட்டுகொண்டு ஜனத்தொகையை குறைத்து வருகிறோம்.

பதற்ற ஏரியா மந்திரிகள், எம்.எல்.ஏ க்கள் என்ன பண்ணுகிறார்கள்? சட்டம், ஒழுங்கை கட்டுப் படுத்த தெரியாத அரசு இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?

ஆனால் மந்திரிகளுக்கு ஊர் ஊரா போய் கூட்டம் போட்டு தூங்க தெரியும்,

முதல்ல செத்தவனுக்கு சிலை வைப்பதும், மாலை அணிவதும், குரு பூஜை என்ற பெயரில் அரசு செலவிலேயே குருதிப்பூஜை நடத்துவதும் அனைத்து மதங்களிலும் தடை செய்யப்பட வேண்டும்... அப்போது தான் மத நல்லிணக்கம் ஏற்பட வழி பிறக்கும். பெரியாரு கடவுள் இல்லை என்றார். அவன் செத்த பிறகு அவனுக்கே சிலை வைத்து மாலை அணிவித்து கடவுளாக்குறான் இந்த போலி திராவிடன்... புத்தன் ஆசையே கடவுள் என்றான் கடைசில அவனையே கடவுளாக்கிட்டான் இந்த மனுஷன். இயேசு கடவுளின் தூதராக வந்தார், அவரும் கடவுளாக ஒரு கூட்டமும், கடவுளின் மகனாக ஒரு கூட்டமும் வழிபடும் நிலை ஏற்பட்டது... இது தான் கடவுள் வழிபாடா? இப்போது முத்துராமலிங்க தேவர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? முட்டாள் சமூகம் எப்போது திருந்துமோ?

'அவனுக செத்தா மட்டும் கலெக்டர் உடனே போய் டி.டி-யை நீட்டுறார் ---> உண்மை...

தமிழினம் நன்றாக முன்னெறும். நாம் எல்லாம் நாய்கள் போல, கேரளா மக்களை பாருஙள்

சாதித்தலைவர்களின் குரு பூசைகளையு தடை செய்வதோடு அவர்களின் சிலைகளையும் அரசு அப்புறப்படுத்தினால் மட்டுமே இந்த கலவர்ங்களுக்கு விடை கொடுக்க முடியும்.

"ஆறு தலித்துகள் பலியான கொடூரமும் நடந்தது"----------> ஏனுங்க, மத்தவங்க செத்தா அது கொடூரம் இல்லையா?

இந்த குரு பூஜையில் நடக்கும் வன்முறைக்கும், பாகிஸ்தானில் தாலிபான்களால் நடக்கும் வன்முறைக்கும் என்ன வித்தியாசம். இரண்டும் பிர்ப்போக்கு கும்பலால் நடக்கும் வன்முறை. இந்த சாதி சண்டைகள் பொருளாதரவளர்சி இல்லததால் வருகிது. தெற்க்கு தமிழகம் வளர்ச்சி பெற்றால் இப்படி வன்முறை வராது. சேதுசமுத்திரம் வந்தால் இந்த பகுதி கொஞம் வளர்ச்சி பெரும். அதைத்தான் இல்லாத ராமர் பாலம் என்றுசொல்லி மூடிவிட்டார்களே. பின் என்ன செய்ய முடியும் ?.

சாதி இல்லை என்று சொல்கின்ற திராவிட கட்சிகள் இந்த மாதிரி குருபூஜைகளை ம்ட்டும் நடத்துவது ஏன்? கலவரத்தில் இறந்ததும் அரசாங்கம் ல்ட்சலட்சமாக பணம் தருவதும் ஏன் என்றுப் புரியவில்லை. இந்த சாதிவெறியை தூண்டி உயிர் பலி வாங்கும் பூஜைகள் அவசியமா என்று அரசாங்கம் யோசிக்க வேண்டியது அவசியமாகும். சாந்தா

என்னது இன்னமும் சாதிப்பிரச்சனையா? அதைத்தான் பெரியார் ஒழித்துவிட்டாரே. அதை கழக ஆட்சிகளில் சாதி இல்லையென்று செய்துவிட்டனரே. இது ஏதோ கதை அவ்வளவுதான்.

நீதிமன்றம் தலையிட்டு இந்த குரு பூஜைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

அதிரடி ஏக்க்ஷனுக்கு ஜெ. பெயர்போனவர்தானே, தாமதிக்காமல் இனி அரசு சார்பில் எந்த பூசையும் கிடையாது என்று குருதி பூஜையை இறுதி பூஜையாக்க வேண்டும்.

எல்லா குரு பூசைகளையும் தடை செய்ய வேண்டும்

இதே திமுக ஆட்சியில் இருந்தால் கையாலாகாத முக பதவி விலக வேண்டும் என்று கூறியிருப்பார். தன் ஆட்சியிலேயோ எதுவும் நடக்கவில்லை என்று கூறிவிட்டு அமைதியாகிவிட்டார். வெட்ககேடு!

Who said India is growing? and Tamil has good culture?

ஐந்து முனை சந்திப்பில் போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தும் அல்லிநகரத்து இளைஞர்கள் எப்படி முதுகுளத்தூர் வழியாக பொன்னையாபுரம் பக்கம் போனார்கள் என்பது பற்றி காவல் துறையினரே முன்னுக்குப்பின் முரணாக சொல்கிறார்கள். இதெல்லாம் லாடு லபக்குதாஸோட தில்லுமுல்லு.

மறுநாள் காலை, பி.டி.அரசகுமார் தலைமையில் தேவர் சிலை அருகே திரண்டவர்கள், அண்ணா சிலை நோக்கி ஊர்வலமாகக் கிளம்பினர். அவர்களை மறித்த ராமநாதபுரம் டி.ஐ.ஜி.ராமசுப்பிரமணி கெஞ்சிக் கூத்தாடினார். விழாவுக்கு வருபவர்களை ரெம்ப திறமையாக தடுக்கும் ராஜேஸ்தாஸ், செந்தில் வேலன் இவங்க எல்லாம் எங்கே?

டிரைவர் சிவகுமார் மட்டும் அவர்களிடம் சிக்கிக்கொண்டார். கற்களாளும் கட்டைகளாலும் அவரை அடித்தே கொன்று விட்டனர்... ஏண்டா உங்க தலையிலேல்லாம் பாம்பு விழாதா? சும்மா கோஷம் போட்ட்டா உடனே அடிச்சு கொன்னுடுவீங்களா?

சாதி இரண்டொழிய வேறில்லை, சாற்றுங்கால், நீதி முறையீர், இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி, என பத்து வயதில் படித்தேன். நாற்பது வருடங்களாகியும் இன்னும் நிலைமை மாறவில்லையோ. அல்லது வேறு அர்த்தத்தில் பாட்டே மாறிவிட்டதோ.

ஜாதி வெறி பிடித்த காட்டுமிரான்டிகள்....மனிதனாக வாழ தகுதியற்றவர்கள்......

எங்க மாவட்டத்தையே பதற்ற மாவட்டம்னு சொல்லலாமே?

இவ்வளவு களேபரம் நடந்தும் எதுவும் நடக்கவில்லை, அமைதியாக உள்ளதுன்னு கூசாமல் சட்டசபையில் வேற சொல்லுறார்.

ஓட்டுக்கு ஆசைப்பட்டு இந்த மாதிரி தேவை இல்லாத குரு பூஜைகளை அனுமதிக்கும் கழக அரசுகள்தான் இந்த நிலைமைக்கு பொறுப்பு.
இவ்வளவு களேபரம் நடந்தும் எதுவும் நடக்கவில்லை, அமைதியாக உள்ளதுன்னு வேற சொல்லுறார்.

மொதல்ல இந்த மானம் கெட்ட குரு பூசை தடை செய்ய முடியாதா. இது கூடவே இம்மானுவெல் செகரன் பூசையும் தடை செய்ய பட வேண்டும்.

 Displaying 1 - 25 of 32
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 07 Nov, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook