பழைய கார் - சான்ட்ரோ நம் நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் ஆழமாகக் கால் பதிக்க அடித்தளம் இட்ட கார் சான்ட்ரோ. 14 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 1998-ம் ஆண்டு இந்த கார் நம் நாட்டில் அறிமுகம் ஆனது. ஆனாலும், எந்தவிதமான ஸ்பீடு பிரேக்கர்களையும் சந்திக்காமல், அது தொடர்ந்து வெற்றிப் பாதையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. காலத்துக்கும், போட்டியாளர்களுக்கும் ஈடுகொடுக்கும் வகையில், சான்ட்ரோவில் தொடர்ந்து மாற்றங்களைச் செய்துகொண்டே இருக்கிறது ஹூண்டாய். 2003-ம் ஆண்டுக்குப் பிறகு வெளிவந்த எந்த மாடல் சான்ட்ரோவாக இருந்தாலும், அதை நம்பி வாங்கலாம். ஓட்டுதல் சான்ட்ரோ முதன்முதலில் அறிமுகம் ஆனபோது, 1 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுத்தான் விற்பனையானது. இருந்தபோதும், வாடிக்கையாளர்களின் தேவைகளையும் சுற்றுச்சூழல் கோட்பாடுகளையும் ஏற்று, காலப்போக்கில் 1.1 லிட்டர் இன்ஜினுக்கு சான்ட்ரோ மாறியது. நகருக்குள் ஓட்டுவதற்கு இந்த இன்ஜின் திறன் போதுமானதாக இருந்தாலும், நெடுஞ்சாலையில் அதிக சக்தி தேவைப்படும் சில வேளைகளில், இது போதாது. அடுத்ததாக, சஸ்பென்ஷன்... கரடுமுரடான. . .
COMMENT(S):