எர்டிகாவுக்குப் போட்டியாக ஃபியட்! டாடாவை விட்டுத் தனியாகப் பிரியும் ஃபியட், இரண்டு ஆண்டுகளில் புதிய கார்களைக் களம் இறக்கத் திட்டமிட்டு வருகிறது. நம் நாட்டில் இப்போது எம்பிவி கார்களுக்கான சீஸன். அதனால், ஃபியட் தனது முதல் எம்பிவி காரை அடுத்த ஆண்டு விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது. இது, மாருதியின் எர்டிகா, நிஸான் எவாலியா ஆகிய கார்களுடன் போட்டி போடும். ரிட்ஸில் இருந்து எர்டிகா முளைத்தது போல, புன்ட்டோவில் இருந்து முளைக்கிறது ஃபியட் எம்பிவி. சமீபத்தில் இத்தாலியில் அறிமுகப்படுத்தப் பட்ட, இந்தப் படங்களில் இருக்கும் ஃபியட் 500-எல் கான்செப்ட் காரைப் போலவே, இந்த எம்பிவி காரை வடிவமைக்க இருக்கிறது ஃபியட். முன் பக்கம் பார்க்கும்போது சின்ன கார் போலத் தெரியும் இதில், ஏழு பேர் உட்காரலாம். மிரட்டலான தோற்றத்துடன் இல்லாமல் புன்ட்டோவைப் போலவே காரை அழகாகச் செதுக்கி இருக்கிறார்கள் ஃபியட் டிசைனர்கள். விண்ட் ஸ்கிரீன் பெரிதாக இருப்பதால், எம்பிவி காருக்கு உரிய. . .
COMMENT(S): 3
ஃபியட் ஓட்ட நன்றாக இருந்தாலும் சர்விஸ் மற்றும் ரிசேல் எல்லாம் மட்டம்.
ஃபியட் ஒரு முட்டாள்தனமான கம்பெனி. இந்த வண்டிய ஒரு பிரீமியம் வண்டியாக அறிமுக படுத்துவார்கள் (அதே மல்ட்டிஜெட் இன் ஜின் போட்டு)
10 Lakh for a "large" small size car - day light robbery.