ஏழாவது சாம்பியன் லூயிஸ் ஹாமில்ட்டன்! இதுவரை ஃபார்முலா-1 வரலாறு கண்டிராத வகையில், இதுவரை நடைபெற்ற ஏழு ரேஸ்களில் ஏழு அணியின் வீரர்கள் வெற்றிபெற்று இருக்கிறார்கள். அதனால், சாம்பியன் யார் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. கடைசியாக, கனடாவில் நடந்த ரேஸில் லூயிஸ் ஹாமில்ட்டன் வெற்றிபெற்று, இந்த ஆண்டுக்கான தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்து இருக்கிறார். கனடா ரேஸ் பார்ப்பதற்கு முன்பு, மிகவும் ஆபத்தான ரேஸ் டிராக்கான மொனாக்கோவில் நடந்தது என்ன என்பதைப் பார்ப்போம். மொனாக்கோ அழகிய கடற்கரைகொண்ட நாடான மொனாக்கோவில், ஃபார்முலா-1 போட்டியின் ஆறாவது சுற்று மே 27-ம் தேதி நடைபெற்றது. முழுக்க முழுக்க சாதாரணச் சாலைகளில் நடைபெறும் ரேஸ் போட்டி என்பதால், இதற்குக் கூடுதல் கவர்ச்சி. வியாழன் முதல் ஞாயிறு வரை மக்கள் பயன்படுத்தும் சாலைகளை மூடிவிட்டு ரேஸ் நடக்கும். இந்த சாலைகள், மிகவும் குறுகலான வளைவு நெளிவுகளைக் கொண்டவை. இதனால், விபத்துகள் இங்கே சர்வசாதாரணம். அதேபோல், ஓவர்டேக். . .
COMMENT(S): 1
வெப்பர் தனது இரண்டாவது வெற்றியை பெற்றார் ஸ்பெயினில்