ஹோண்டாவில் ராஸி? ராஸி விஸ்வரூபம் எடுக்கக் களம் அமைத்துக்கொடுத்து இருக்கிறது லீ மேன்ஸ். 24 மணி நேர ரேஸ்களுக்குப் புகழ் பெற்ற, ஃபிரான்ஸில் உள்ள லீ மேன்ஸ் ரேஸ் டிராக்கில், மழையின் குறுக்கீடுகளுக்கு இடையே, இரண்டாவது இடம் பிடித்து இந்த ஆண்டில் முதன்முறையாக 'போடியம்’ ஏறினார் வாலன்டினோ ராஸி. பிரான்ஸ் லீ மேன்ஸ் ரேஸ் டிராக்கில், மே 20-ம் தேதி மோட்டோ ஜிபியின் நான்காவது சுற்று நடைபெற்றது. லீ மேன்ஸ் ரேஸ் டிராக், ரேஸ் ஓட்ட மிக சவாலானது. குறுகிய வளைவுகள், திடீர்த் திருப்பங்கள் என ரேஸ் வீரர்களைப் பதம் பார்க்கும் டெரர் டிராக். 28 லேப்களும், 117 கி.மீ மொத்த தூரமும்கொண்ட இந்த ரேஸை, முதல் இடத்தில் இருந்து துவக்கினார் ஹோண்டாவின் குட்டிப் புயல் டேனி பெட்ரோஸா. ஹோண்டாவின் மற்றொரு வீரரான கேஸி ஸ்டோனர் இரண்டாம் இடத்தில் இருந்தும், யமஹாவின் ஆன்ட்ரி டோவிஸியோஸோ மூன்றாம் இடத்தில் இருந்தும் ரேஸைத். . .
COMMENT(S):