டெல்லியில் சூப்பர் ரேஸ்! இந்திய வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி. அடுத்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி, டெல்லி புத் சர்வதேச ரேஸ் டிராக்கில் இந்த ரேஸ் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லத் தயாராகிவிட்டார் ஏப்ரில்லா அணியின் மேக்ஸ் பியாஜி. 43 வயதான பியாஜியுடன் இளம் வீரர்களான ஜோனத்தன் ரியா, டாம் சைக்ஸ் ஆகிய இருவரும் சாம்பியன் பட்டத்துக்கு மோதுகிறார்கள். வெல்லப்போவது யார்? அமெரிக்கா வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் போட்டியின் ஆறாவது சுற்று மே, 28-ம் தேதி அமெரிக்காவின் சால்ட் லேக் நகரில் மில்லர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. மொத்தம் 21 லேப், 103 கி.மீ தூரம்கொண்ட இந்த ரேஸ் போட்டியை, முதல் இடத்தில் இருந்து துவக்கினார் லிபர்ட்டி அணியின் ஸ்மிர்ஸ். கார்லோஸ் செக்கா இரண்டாவது இடத்தில் இருந்தும், டாம் சைக்ஸ் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத். . .
COMMENT(S):