அலான்சோதான் சாம்பியனா? சார்லஸ் கண்ணாமூச்சி விளையாட்டுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார் ஃபெர்னாண்டோ அலான்சோ. இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் துவங்கிய ஃபார்முலா-1 ரேஸில் இருந்து, ஜூன் 10-ம் தேதி கனடாவில் நடைபெற்ற ரேஸ் வரை, மொத்தம் ஏழு ரேஸ்களில் ஏழு வீரர்கள் மாறி மாறி வெற்றி பெற... யாருக்கும் சரியான லீட் கிடைக்கவில்லை. ஆனால், ஸ்பெயினில் கடந்த ஜூன் 24-ம் தேதி நடைபெற்ற ரேஸில், இந்த ஆண்டின் இரண்டாவது வெற்றியைப் பறித்து, எட்டாவது வீரருக்கு இடம் கொடுக்காமல் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் ஃபெர்னாண்டோ அலான்சோ. அவரைத் தொடர்ந்து, அடுத்ததாக இங்கிலாந்தில் நடைபெற்ற ரேஸில், மார்க் வெப்பர் 2012-ம் ஆண்டில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தார். ஸ்பெயின் ஸ்பெயின் நாட்டின் வேலன்சியா நகரில், ஜூலை 24-ம் தேதி ஃபார்முலா-1 ரேஸின் எட்டாவது சுற்று நடைபெற்றது. வேலன்சியாவில் நடக்கும் இந்த ரேஸ் போட்டியை, 'ஐரோப்பா ரேஸ்’ என்றுதான் அழைப்பார்கள். ஐரோப்பிய கண்டத்தில்,. . .
COMMENT(S): 1
Race is a risky business. Race drivers who get into accident deserve no sympathy.