மோட்டார் நியூஸ் காற்றில் இயங்கும் டாடா கார்! காற்றில் இயங்கும் நவீன தொழில்நுட்பம்கொண்ட காரை வெற்றிகரமாகச் சோதனை செய்திருக்கிறது டாடா. பெட்ரோல், டீசல் இல்லாமல் மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை வடிவமைக்க, கார் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் டாடா நிறுவனம் லக்ஸம்பர்க் நாட்டில் உள்ள 'மோட்டார் டெவலப்மென்ட் இன்டர்நேஷனல்’ நிறுவனத்துடன் இணைந்து, காற்றில் இயங்கும் கார் தயாரிப்பை 2007-ம் ஆண்டு துவங்கியது. காற்றைச் சக்தியாகக்கொண்டு இயங்கும் இந்த கார், அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்லுமாம். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த காரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு இருக்கிறது டாடா. டிசையரின் விலை மீண்டும் உயர்ந்தது! பிப்ரவரி மாதம் முதல் விற்பனைக்கு வந்த புதிய ஸ்விஃப்ட் டிசையரின் விலையை 8,000 முதல் 12,000 ரூபாய் வரை உயர்த்திருக்கிறது மாருதி. ஏற்கெனவே ஏப்ரல் மாதவாக்கில் 11,000 முதல் 17,000 ரூபாய் உயர்த்தியது. இப்போது. . .
COMMENT(S):