தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும்... விபத்து பற்றிய புள்ளி விவரங்களை அடுக்கவே தேவையில்லை. சந்தேகமே இல்லை; விபத்துகளில் நாம்தான் நம்பர் ஒன்! அதனால், 'பாதுகாப்பாக கார் ஓட்டுவது எப்படி? எரிபொருளை வீணாக்காமல் கார் ஓட்டுவது எப்படி? சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் கார் ஓட்டுவது எப்படி?’ என்று தென்னாப்பிரிக்காவில் இருந்து இரண்டு நிபுணர்களை அழைத்து வந்து நம் ஊர்க்காரர்களுக்குப் பயிற்சி கொடுத்து வருகிறது ஃபோர்டு கார் நிறுவனம். 'டிரைவிங் ஸ்கில்ஸ் ஃபார் லைப்’ என்று அழைக்கப்படும் இந்தப் பயிற்சி வகுப்பில், கார் ஓட்டுபவரின் கவனம் ஒரே ஒரு விநாடி விலகினாலும், என்ன மாதிரியான விபரீதம் நடக்கும் என்பதை, டெஸ்ட் டிராக்குக்கு அழைத்துச் சென்று பயிற்சியாளர்கள் செயல்முறை விளக்கமே கொடுத்தார்கள். பிரேக்கிங் டிஸ்டன்ஸ் சாலையில் வேகமாக காரை ஓட்டும்போது, திடீரென்று சைக்கிள் குறுக்கே வந்துவிட்டால், பிரேக் அடிப்போம். ஆனால், என்னதான் ஏபிஎஸ், இஎஸ்பி பிரேக் உள்ள காராக இருந்தாலும், கார் பிரேக் அடித்த அதே இடத்தில். . .
முன்னால் செல்லும் வாகனத்திலிருந்து, நீங்கள் எத்தனை வினாடி தூரத்தில் இருக்கிறீர்கள் என்பதையும் விளக்கி இருக்க வேண்டும்.
முன்னால் செல்லும் வாகனம், சாலையின் ஒரத்தில் (நிலையாக) உள்ள ஒரு பொருளை (மின் விளக்கு கம்பம், மரம் போன்று ஏதாவது) கடந்தபின் கணக்கிடத்துவங்கினால், அதே பொருளை நீங்கள் கடக்கும்போது எவ்வளவு வினாடிகள் எடுத்துக்கொண்டீர்களோ அதுவே உங்களுக்கும் உங்கள் முன்னால் இருக்கும் வாகனத்துக்கும் இடையேயான 'வினாடி' தூரம் என்று கொள்ளலாம்.
3 'வினாடி' தூரம் என்பது மணிக்கு 45கி.மீ அல்லது அதற்கும் குறைவான வேகத்தில் ஓட்டினால் மட்டுமே பாதுகாப்பாக இருக்கும் என்பது என் கருத்து. அதற்கு மேல் செல்வதானால் வினாடி தூரத்தை அதிகரிக்கத்துக் கொள்ளவேண்டும். இந்த விதிகள் அனைத்துமே சோதனைக் களத்தில் மட்டுமே முற்றும் பொருந்தும். சாலைகளில் பயணிக்கும்போது, சாலைகளின் தரம், தட்பவெப்ப நிலை, ஓட்டுனரின் உடல் மன நிலை இவற்றை பொறுத்து மாறுபடும்.
COMMENT(S): 5
வேகம் விவேகம் அல்ல.
மிகப் பயணுள்ள கட்டுரை...வரும் முன் காத்தல்தானே வைத்தியம்... நன்றி விகடன்...
120 கி.மீட்டர் வேகத்தில் சென்றால் 12 வினாடி இடைவெளிவிட வேண்டும் என்பது அமீரகத்தில் ரூல்ஸ்....
10 வினாடி தள்ளீ போனா குடி முலுகாது