கலர்ஃபுல் திருவிழா! ஆட்டோ சைனா என்று அழைக்கப்படும் 'பீஜிங் இன்டர்நேஷனல் ஆட்டோ ஷோ,’ ஏப்ரல் 23-ம் தேதி துவங்கியது. ஃப்ராங்ஃபர்ட் மற்றும் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவுக்கு அடுத்தபடியாக, உலகின் மூன்றாவது மிகப் பெரிய ஆட்டோமொபைல் ஷோ இது. சீனாதான் உலகிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் ஆட்டோமொபைல் மார்க்கெட் என்பதால், இந்த ஆட்டோ ஷோவில் மொத்தம் 120 புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன! லம்போகினி உருஸ் ஸ்போர்ட்ஸ் செடான் கார்களை மட்டுமே தயாரித்து வரும் லம்போகினி நிறுவனம், முதன்முறையாக தனது எஸ்யூவி காரை பீஜிங் ஆட்டோ ஷோவில் அறிமுகப்படுத்தியது. உருஸ் என்பது ஒருவகை காளையின் பெயர். 'இரண்டு பேர் மட்டும் உட்கார்ந்து செல்லும் ஸ்போர்ட்ஸ் காரை மட்டும் அல்ல, ஏழு பேர் உட்கார்ந்து செல்லும் ஸ்போர்ட்ஸ் எஸ்யூவி காரையும் எங்களால் தயாரிக்க முடியும்’ என்பதை உலகத்துக்கு உணர்த்தியிருக்கிறது லம்போகினி. 600 bhp சக்தி கொண்ட இந்த பவர்ஃபுல் எஸ்யூவி காரில், 4-வீல். . .
COMMENT(S): 1
ஹுண்டாய் கார்கள் எழுதவில்லையே? ஃபோட்டோ மட்டுமே உள்ளது!