''டிரைவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்!''மோட்டார் உலகத்தைப் பொறுத்தவரை 'டீட்டர் ஜேட்சே’ என்பது ஒரு மந்திர வார்த்தை. மெர்சிடீஸ் பென்ஸ், கார் மற்றும் டிரக் தயாரிக்கும் நிறுவனங்களில், பல நாடுகளில், பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். ஒரு கட்டத்தில் விற்பனையிலும், மக்களின் எண்ணத்திலும் டெய்ம்லர் நிறுவனம் தள்ளாடியபோது, அதை தனது அபாரத் திறமையினால் தூக்கி நிறுத்தியவர். தற்போது உலகம் தழுவிய டெய்ம்லர் ஏஜி நிறுவனத்தின் தலைவராக இருப்பவர். சென்னை அருகே உள்ள ஒரகடத்தில், சுமார் 400 ஏக்கர் நிலப் பரப்பில் பரந்து விரிந்திருக்கும் டெய்ம்லர் இந்தியாவின் கமர்ஷியல் வாகனத் தொழிற்சாலையின் துவக்க விழாவுக்காக சென்னை வந்திருந்தார். 'சிந்தனை உலகளாவியதாக இருந்தாலும், பணியாற்றும்போது பக்காவான உள்ளூர் ஆசாமி போல செயல்பட வேண்டும்’ என்ற அறிவார்ந்த வார்த்தைகளுக்கு உதாரணமாகத் திகழும் அவரைச் சந்தித்தபோது, ''இன்று இந்த தொழிற்சாலைப் பற்றியும் டிரக் பிசினஸ் பற்றி மட்டுமே பேசலாமா?'' என்று புன்னகையோடு கேட்டுவிட்டுப் பேச ஆரம்பித்தார். ''உங்களின். . .
"டிரக் டிரைவர்கள் பற்றிய இமேஜ் மாற வேண்டும். அவர்கள் வாழ்க்கைத் தரம் நிச்சயம் மேம்பட வேண்டும்."- இதை பென்ஸ் அல்லது மற்ற தயாரிப்பாளர்கள் மட்டுமே செய்ய முடியாது. ஓட்டுனர்களின் பங்கு இதில் மிக முக்கியமானது.
COMMENT(S): 3
மிக முக்கியமான செய்தி. டிரைவர்களுக்கு முக்கயத்துவம் கொடுக்கப்படவேண்டும். டிரைவர்களும் மற்றவர்களுக்கு பாதுகாப்பாக ரோட்டுல வண்டி ஓட்ட வேண்டும்.
ஓட்டுனர்களுக்கு இங்கு மரியாதை என்பது 1% மட்டுமே. டீட்டர் ஜேட்சே சொல்லி இருப்பது போல வசதிகள் கிடைத்தால் ஓட்டுனர்களும் இன்னும் நல்லாவே வேலை செய்வார்கள்.
"டிரக் டிரைவர்கள் பற்றிய இமேஜ் மாற வேண்டும். அவர்கள் வாழ்க்கைத் தரம் நிச்சயம் மேம்பட வேண்டும்."- இதை பென்ஸ் அல்லது மற்ற தயாரிப்பாளர்கள் மட்டுமே செய்ய முடியாது. ஓட்டுனர்களின் பங்கு இதில் மிக முக்கியமானது.