டிரைவருக்கு மரியாதை! பஞ்சாபில் விளையும் கோதுமையும், தமிழகத்தில் அறுவடையாகும் நெல்லும் - நாடு முழுவதும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது என்றால், அது தரைவழிப் போக்குவரத்து இல்லாமல் சாத்தியம் இல்லை. முன்பு, நம் சாலைகளின் மோசமான தரத்தால் கால விரயம், அதிகப் பராமரிப்புச் செலவு என பல்வேறு சிக்கல்களில் திணறின லாரிகள். இப்போதோ, மாநிலங்களை இணைக்கும் சாலைகள் எல்லாம் நான்கு வழிச் சாலைகள் ஆகிவிட்டன. இதனால், லாரித் தொழிலில் நல்ல வளர்ச்சி. ஆனால், 'டிரைவர்கள் பற்றாக்குறையால், லாரித் தொழில் அழியும் அபாயத்தை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது’ என்றும் சோகக் குரல்கள். சேலம் மாவட்ட லாரி டிரைவர்கள் சங்கத் தலைவர் வீரமலை நொந்துபோய் பேசினார். ''நவீனத் தொழில்நுட்பங்களுடன் பன்னாட்டு நிறுவனங்களின் ட்ரக்குகள் நம் நாட்டுக்கு வந்திருக்கின்றன. நெடுஞ்சாலைகள் அகலமாகிவிட்டன. ஆனால், டிரைவர் தொழிலுக்கு விரும்பி வருவதற்கான சாதகமான அம்சங்கள் எதுவும் இதுவரை உருவாகவில்லை. லைசென்ஸ் மறுப்பு நடைமுறையில் இருக்கும் புதிய சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு தேர்ச்சி. . .
ஏங்க என்னக்கி இந்தம்மா சொல்றத செஞ்சிருக்கு.... ஏதோ சொல்லுவோம் அதனை பத்திரிகைகளும் வானத்தி வில்லாக வளைப்பவர் வந்துவிட்டார் என்ற ரேஞ்சுக்கு ஏதோ ஒரு காரணத்திற்க்காக வரிந்துகட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்யும்... அதநம்பி நாமும் ஓட்டுப்போடுவோம்... பட்டய வாங்கிப்போம்......
ஜெயலலிதா, 'நான் ஜெயித்தால், முதல் வேலையாக எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு மட்டுமே கன ரக வாகன லைசென்ஸ் என்ற சட்டத்தை நீக்குவேன்’ என்று உறுதி அளித்தார். ஆனால், ஒரு வருடம் கடந்தும் அவர் தனது வார்த்தையைக் காப்பாற்றவில்லை.
COMMENT(S): 5
முதல்ல இந்த லாரி ட்ரைவர்களை வண்டியை ஒழுங்கா ஓட்ட சொல்லுங்க, அப்புறம் இவங்க கதைய கேக்கலாம்.
சீனு.
ஏங்க என்னக்கி இந்தம்மா சொல்றத செஞ்சிருக்கு.... ஏதோ சொல்லுவோம் அதனை பத்திரிகைகளும் வானத்தி வில்லாக வளைப்பவர் வந்துவிட்டார் என்ற ரேஞ்சுக்கு ஏதோ ஒரு காரணத்திற்க்காக வரிந்துகட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்யும்... அதநம்பி நாமும் ஓட்டுப்போடுவோம்... பட்டய வாங்கிப்போம்......
ஜெயலலிதா, 'நான் ஜெயித்தால், முதல் வேலையாக எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு மட்டுமே கன ரக வாகன லைசென்ஸ் என்ற சட்டத்தை நீக்குவேன்’ என்று உறுதி அளித்தார். ஆனால், ஒரு வருடம் கடந்தும் அவர் தனது வார்த்தையைக் காப்பாற்றவில்லை.
உழைப்பை உதாசீனம் செய்யும் போக்கு அதிகரித்து வருவது ஆபத்தானது..மரியாதைக்குரியது உழைப்பு;வணக்கத்துக்குரியது உழைப்பவர்..
அவர் தனது வார்த்தையைக் காப்பாற்றவில்லை.அவருக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கு தெரியாதா?