செப்டம்பர் 15, 2010

Warning: include() [function.include]: Filename cannot be empty in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0202.php on line 31

Warning: include() [function.include]: Failed opening '' for inclusion (include_path='.:/usr/share/pear') in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0202.php on line 31
   
நடப்பு
ஷேர்லக் ஹோம்ஸ்

''கிண்டி ரேஸ் கிளப்பில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. எனவே இன்று மாலை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வந்துவிடவும்'' - ஷேர்லக்கிடமிருந்து வந்து குறுந்தகவலுக்கு 'சரி' சொல்லிவிட்டு, நேரத்துக்கு அங்கு போய்ச் சேர்ந்தோம். சுற்றும்முற்றும் பெரிய மனிதர்கள் பெரிய டீல்களை பற்றி காதும் காதுமாகப் பேசிக் கொண்டிருக்க, நம்மை ஒரு ஒதுக்குப்புறமாகப் பார்த்து உட்கார வைத்து பேச ஆரம்பித்தார் ஷேர்லக்.

''என்ன, ஆபீஸ் பக்கமே ஆளைக் காணாம். உம்மைத் தேடி ஒவ்வொரு கிளப்பாக வர வேண்டியிருக்கிறதே!'' - பொய்யாக கோபித்துக் கொண்டோம்.

''பெரிய இடத்து சகவாசங்கள் வந்துவிட்டால் கிளப்புகளே கதியென்றுதானே கிடக்க வேண்டியதிருக்கிறது! அடுத்தமுறை நிச்சயம் உம்மைத் தேடி வருகிறேன். இப்போது மேட்டருக்கு வருகிறேன்'' என்றவர், கடகடவென சொல்ல ஆரம்பித்தார்.


Warning: include(/advtcodes/nanayaminn_mag_high.js) [function.include]: failed to open stream: No such file or directory in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0202.php on line 101

Warning: include() [function.include]: Failed opening '/advtcodes/nanayaminn_mag_high.js' for inclusion (include_path='.:/usr/share/pear') in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0202.php on line 101

''செபியின் தலைவர் பவே அடுத்தடுத்து முதலீட்டாளர்களுக்கு நல்லது செய்கிற மாதிரி பல அதிரடி அறிவிப்புகளைக் கொண்டு வந்திருக்கிறார். அதில் முதல் விஷயம், மொபைல் டிரேடிங். இனிமேல் பங்கு வாங்க நினைக்கிற முதலீட்டாளர்கள் புரோக்கர் ஆபீஸூக்கு போன் செய்து பங்கு வாங்கவோ, விற்கவோ சொல்ல வேண்டியதில்லை. இன்டர்நெட் இணைப்பு கொண்ட எந்த மொபைல் போன் மூலமும் உங்களுக்கான ஆன்லைன் டிரேடிங்கில் நுழைந்து நீங்கள் பங்கு வாங்கலாம் அல்லது விற்கலாம். உலகம் முழுக்க இந்த மொபைல் டிரேடிங் படுவேகமாக பிரபலமாகி வருவதைத் தொடர்ந்து நம்மூர் சந்தையிலும் இந்த வசதியைக் கொண்டுவர அனுமதித்திருக்கிறது செபி. இதனால் பரிவர்த்தனையாகும் பங்குகளின் அளவு இன்னும் கணிசமாக அதிகரிக்கும் என்றும் நினைக்கிறது.

இரண்டாவது முக்கியமான விஷயம், 'ஸ்மார்ட் ஆர்டர் ரூட்டிங்' என்கிற புதிய நடைமுறை. எஸ்.ஓ.ஆர். என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த முறையின் மூலம் உங்களுக்குத் தேவையான ஒரு பங்கை வாங்க ஒரே ஒரு எக்ஸ்சேஞ்சை மட்டுமே நம்பியிருக்கத் தேவையில்லை. நீங்கள் போடும் ஒரு ஆர்டர் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓகே ஆகவில்லை என்றால் அந்த ஆர்டர் தானாகவே அடுத்த ஒரு எக்ஸ்சேஞ்சுக்குப் போய்விடும். உதாரணமாக, என்.எஸ்.இ-ல் நீங்கள் போடும் ஆர்டர் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓகே ஆகவில்லை எனில் பி.எஸ்.இ-க்குப் போய்விடும். டெரிவேட்டிவ்ஸ் என்றழைக்கப்படும் யூக வணிகத்தில் டிரேட் செய்பவர்களுக்கு இந்த எஸ்.ஓ.ஆர். மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தவிர, என்.எஸ்.இ-க்கு அடுத்தபடியாக பெரிய எக்ஸ்சேஞ்சாக இருக்கும் பி.எஸ்.இ-க்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக பிஸினஸ் கிடைக்கவும் வாய்ப்புண்டு. அதே சமயம் பி.எஸ்.இ.யில் அதிக கம்பெனிகள் இருப்பதால் அங்கிருந்து என்.எஸ்.இ.க்கு ஆர்டர் வர வாய்ப்புக் குறைவாகவே உள்ளது. இதை சரி செய்ய என்.எஸ்.இ. பாம்பே ஸ்டாக் எக்சேஞ்சில் மட்டும் பட்டியிலிடப்பட்டுள்ள கம்பெனிகளை தங்களிடமும் பட்டியிலிடச் சொல்லலாம்.

மூன்றாவது முக்கியமான விஷயம், ஆர்ப்பிட்ரேஷன் விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பது. முன்பு பங்கு வாங்கி, விற்பதில் புரோக்கிங் நிறுவனத்துக்கும் முதலீட்டாளர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டால் அடுத்த 6 மாதங்களுக்குள் ஆர்ப்பிட்ரேஷனில் வழக்குத் தொடர்ந்தாக வேண்டும். இதனை 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வழி செய்திருக்கிறது செபி. இந்த புதிய உத்தரவு இந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த மாற்றம் இனிவரும் காலத்திலிருந்தா அல்லது கடந்த காலத்துக்கும் பொருந்துமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. கடந்த காலத்துக்கும் என்றால் பூதம் புறப்பட்டக் கதைதான்.

நான்காவது முக்கியமான விஷயம், பங்குச்சந்தை பற்றி செய்தி வெளியிடும் பத்திரிகைகள், இனி தாங்கள் செய்தி வெளியிடும் பங்குகளை வைத்திருந்தால் அந்தத் தகவலை கட்டாயம் சொல்ல வேண்டும் என்று செபி சொல்லி இருக்கிறது. சில பத்திரிகைகள் தாங்கள் வெளியிடும் விளம்பரத்திற்கு பணம் பெறாமல் அதற்குப் பதில் பங்குகளை வாங்கி வைத்துக் கொண்டு, பிறகு அது பற்றி நல்ல விதமாக செய்தியோ அல்லது விளம்பரங்களோ போட, அதனால் அதன் விலையில் கிடுகிடு மாற்றங்கள் ஏற்பட்டு முதலீட்டாளர்கள் பாதிப்படைவதாக புகார்கள் எழுந்தன. இதனைத் தடுக்கவே இந்த நடைமுறையை செபி கொண்டு வந்திருக்கிறது.

முதலீட்டாளர்களுக்கு இத்தனை நல்ல விஷயங் களைச் செய்து கொடுத்த பவேக்கு பதவி நீட்டிப்பு கிடைக்காது போலிருக்கிறது. அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க வெளியிலிருந்து கடுமையான எதிர்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். இப்போதே அந்தப் பதவிக்கு ஆள் தேடல் ஆரம்பமாகிவிட்டது'' - ஒரே மூச்சில் பல விஷயங்களைச் சொன்ன ஷேர்லக், டேபிளில் இருந்த வெங்காய பஜ்ஜியை எடுத்து கொஞ்சம் வாயில் போட்டுக் கொண்டு அடுத்த மேட்டருக்குத் தாவினார்.

''கடந்த 15 நாட்களாக அமெரிக்க பங்குச்சந்தையை பாடாய்ப்படுத்தி வருகிறது ஹிண்டன்பர்க் ஓமன் என்கிற விஷயம். ஓமன் என்றால் கெட்ட சகுனம் என்று அர்த்தம். ஹிண்டன்பர்க் ஓமன் என்பது ஒரே நேரத்தில் அதிஉயர்வும் படுவீழ்ச்சியும் அடைவது. அதாவது, ஒரு நேரத்தில் பல பங்குகள் புதிய உச்சத்தையும் படுபாதாளத்தையும் தொடுவது. அமெரிக்கப் பங்குச்சந்தையில் கடந்த 12 மற்றும் 19, 20-ம் தேதிகளில் ஒரே நாளில் 83 பங்குகள் புதிய உச்சத்தைத் தொட்டன. 95 பங்குகள் புதிய இறக்கத்தைக் கண்டன. இந்த மாதிரி ஒரு கெட்ட சகுனம் ஏற்பட்டால் பங்குச்சந்தையில் மிகப் பெரிய வீழ்ச்சி வரும் என பலரும் நினைக்கிறார்கள். 1937-ல் இந்த ஹிண்டன்பர்க் ஓமன் வந்தபோது சந்தை இதே போல இறக்கம் கண்டதை வைத்து இப்படி நினைக்கிறார்கள். இந்த ஹிண்டன்பர்க் ஓமன் பயத்தால் அமெரிக்கச் சந்தை கொஞ்சம் ஆட்டம் காண, அதன் விளைவாக நம் சந்தையும் கொஞ்சம் சறுக்கி இருக்கிறது.

இத்தனைக்கும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு எஃப்.ஐ.ஐ.களின் முதலீடு அபரிதமாக உள்ளது.

கடந்த எட்டு மாதங்களில் 58,280 கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். இன்னுமுள்ள நான்கு மாதங்களுக்குள் இன்னுமொரு 16,920 கோடி ரூபாயாவது முதலீடாகும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்தியாவோடு போட்டி போடும் மற்ற ஆசிய நாடுகளில்கூட இந்த அளவுக்கு வெளிநாட்டு முதலீடு வரவில்லை. உதாரணமாக, தென் கொரியாவில் 34,780 கோடி, தைவானின் 8,460 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே எஃப்.ஐ.ஐ.கள் பணம் போட்டிருக்கின்றனர். இது போதாது என்று உள்ளூரில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் 2,951 கோடி அளவுக்கு முதலீடு செய்திருக்கிறது.

ஆனால் இப்போது சந்தை இறங்கக் காரணம், இந்த எஃப்.ஐ.ஐ.கள் கடந்த மாதங்களில் வாங்கிய பங்கை விற்க ஆரம் பித்துவிட்டார்களோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. ஏனெனில், கடந்த சில நாட்களாக இந்தியப் பங்குச்சந்தையின் வேல்யூவேஷன் அதிகரித்துவிட்டது என்கிற பேச்சு கிளம்பி இருக்கிறது. இந்திய பங்குச் சந்தையின் மதிப்பு ஷாங்காய், ரஷ்யாவைவிட அதிகமாக இருக்கிறது. எனவே நம் பங்குச்சந்தையை விட்டு விலகி, வேறு சந்தைக்கு எஃப்.ஐ.ஐ.கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இனி குறுகிய காலத்தில் சந்தை மேலேறுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது. காரணம், செப்டம்பர் மாதம் என்றாலே பங்குச்சந்தைக்கு பதற்றம் வந்துவிடும். கடந்த 30 ஆண்டுகளில் 17 முறை செப்டம்பர் மாதத்தில்தான் பங்குச்சந்தை சறுக்கி இருக்கிறது. எனவே, இந்த ஆண்டும் சந்தை சறுக்கலாம் என்கிறார்கள். இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக சந்தை மேலே போனாலும் 19,000 புள்ளிக்கு மேல் செல்ல வாய்ப்பில்லை என்கிறார்கள் டெக்னிக்கல் அனலிஸ்ட்டுகள்.'' என்றவர் ஆவி பறக்க சுடச்சுட இருந்த டீயை உறிஞ்சிக் குடித்துக் கொண்டி ருந்தபோது கோட் சூட் அணிந்த ஒருவரின் உருவம் அவர் கண்ணில்பட, சட்டென புறப்படத் தயாரானார்.

''எல்லாம் சொல்லிவிட்டு, வாங்க வேண்டிய பங்குகளை மட்டும் சொல்லாமல் போகிறீர்களே!'' என்றோம். ''கவலையே வேண்டாம். வழக்கம் போல அதை எஸ்.எம்.எஸ்.ஸில் அனுப்பிவிடுகிறேன்'' என்றவர் கோட், சூட் ஆசாமியை நோக்கி மின்னலாக நகர்ந்தார்.

நாம் அலுவலகத்து வந்து சேரவும் ஷேர்லக்கிடமிருந்து எஸ்.எம்.எஸ். வரவும் சரியாக இருந்தது. எஸ்.எம்.எஸ்.ஸைத் திறந்தபோது இப்படி இருந்தது.

''மிகக் குறுகிய காலத்தில் லாபம் பார்க்க: நவ்நீத் பப்ளிகேஷன்ஸ், ப்ரோவோக் (PROVOGUE), க்ளென் பார்மா, நோய்டா டோல் பிரிட் (NOIDA TOLL), ஜி.இ.ஷிப்பிங், எம்.பி.எல்.இன்ஃபரா (MBL INFRA), டிம்கென் இந்தியா (TIMKEN INDIA), ஹைகால் (HIKAL), இம்கோ எலிகான் (EIMCO ELECON).

நடுத்தர காலத்துக்கு: ஸ்பைஸ் ஜெட்.

நீண்ட காலத்துக்கு: மகேந்திரா அண்ட் மகேந்திரா.

 
 
                            
  <<<Back    ^Top  

Warning: include(/vc/tkaruthu/aug10_karuthu.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0202.php on line 158

Warning: include() [function.include]: Failed opening '/vc/tkaruthu/aug10_karuthu.php' for inclusion (include_path='.:/usr/share/pear') in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0202.php on line 158
Advertisement Tariff   Contact Us   Site map

Warning: include(/advtcodes/nanayaminn_pubnews.js) [function.include]: failed to open stream: No such file or directory in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0202.php on line 213

Warning: include() [function.include]: Failed opening '/advtcodes/nanayaminn_pubnews.js' for inclusion (include_path='.:/usr/share/pear') in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0202.php on line 213

Warning: include(/registerpopup/attach_code.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0202.php on line 219

Warning: include() [function.include]: Failed opening '/registerpopup/attach_code.php' for inclusion (include_path='.:/usr/share/pear') in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0202.php on line 219