|
சென்செக்ஸ் புள்ளிகள் 18000 புள்ளிகளைத் தாண்டி அடுத்த கட்ட ஏற்றத்துக்குப் படிப்படியாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் டெக்னிக்கல் முறைப்படி குறுகிய காலத்தில் எந்த செக்டார்கள் மிகச் சிறந்தவை, அவற்றில் லாபம் தரும் பங்குகள் எவை என்பதைப் பார்ப்போம்.
உரத் தயாரிப்பு நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த இண்டெக்ஸ் 2004 மார்ச்சில் 572 புள்ளிகளாக இருந்தது. இது அதிவேகமாக மேலேறி, 2008 ஜனவரியில் புதிய உச்சமான 3865 புள்ளிகளாக அதிகரித்தது. இந்த இண்டெக்ஸ் தற்போது மூன்று முதல் ஐந்து நிலைகளில் (Leg) ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இந்த இண்டெக்ஸ் செயல்பாட்டில் முக்கோண நிலை உருவாகி இருப்பதால் முதல் கரெக்ஷன் 916 புள்ளிகளுக்குச் சென்றது. அடுத்து பெரிய அளவிலான அலை (Wave) உருவானது. அப்போது ஃபெர்டிலைசர் இண்டெக்ஸ் அதன் முதல் ஏற்றத்தைச் சந்தித்தது. அதாவது, 2009 ஜூன் மாதத்தில் 2310 புள்ளிகளுக்குச் சென்றது. இந்த நிலை கி அலை என்று குறிப்பிடப்படுகிறது. இதன்பிறகு இந்த இண்டெக்ஸ் நிலை பெற்றது. இது ஙி அலை நிலை ஆகும். அப்போது முக்கோண வடிவ பேட்டர்ன்-ல் வர்த்தகமானது. இது இந்த பேட்டர்னின் கடைசி நிலை. இந்த நிலை முடிவு பெற்றால் இந்த இண்டெக்ஸ் அதன் அதிகபட்ச இலக்கான 3300 புள்ளிகளுக்குச் செல்லும். இது அலை சி என அழைக்கப்படும்.
Warning: include(/advtcodes/nanayaminn_mag_high.js) [ function.include]: failed to open stream: No such file or directory in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0303.php on line 97
Warning: include() [ function.include]: Failed opening '/advtcodes/nanayaminn_mag_high.js' for inclusion (include_path='.:/usr/share/pear') in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0303.php on line 97
|
கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி நிலவரப்படி, ஃபெர்டிலைசர் இண்டெக்ஸ்-ன் புள்ளிகள் 2540 ஆக இருக்கிறது. இது 2-3 மாதங்களில் குறைந்தபட்சம் 760 புள்ளிகள் அல்லது சுமார் 30% மேலே செல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்த இண்டெக்ஸில் இடம் பெற்றிருக்கும் பங்குகளின் செயல்பாடு நன்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் புள்ளிகள் 3850-க்குகூட (சுமார் 50% அதிகரிப்பு) வாய்ப்பிருக்கிறது. ஆனால், தற்போதைய நிலையிலே அந்த இலக்கை எதிர்பார்ப்பது புத்திசாலிதனம் அல்ல. அதற்குக் காத்திருக்க வேண்டும். பொறுமை அவசியம்.
சம்பல் ஃபெர்டிலைசர்
(CHAMBLFERT)
இந்நிறுவனப் பங்கின் விலை அண்மைக் காலத்தில் சுமார் 70 ரூபாய் என்கிற அளவுக்கு நிலை பெற்றிருக்கிறது. இதன் விலை அடுத்த 1-2 மாதங்களில் 90 ரூபாய்க்கு அதிகரிக்க பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.
சந்தைவிலை : ரூ.66.80
இ.பி.எஸ்.* : ரூ.6.19
விலை/புத்தக மதிப்பு : 2.00
பி.இ விகிதம் : 10.78
டிவிடெண்ட் யீல்டு % : 2.85
52 வார அதிகம்/குறைவு : ரூ.74.40 / 46.05
மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் : ரூ.2778.19 கோடி

நாகார்ஜூனா ஃபெர்டிலைசர்
(NAGARFERT)
இந்நிறுவனப் பங்கின் விலை தற்போது 30 ரூபாய் என்கிற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இதன் விலை அடுத்து வரும் 1-2 மாதங்களில் 40 ரூபாய்க்கு அதிகரிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.
சந்தைவிலை : ரூ.29.90
இ.பி.எஸ்.* : ரூ.1.64
விலை/புத்தக மதிப்பு : 1.34
பி.இ விகிதம் : 18.23
டிவிடெண்ட் யீல்டு % : 1.67
52 வார அதிகம்/குறைவு : ரூ.40.40 /26.50
மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் : ரூ.1280.26 கோடி
ஜி.எஸ்.எஃப்.சி.
(GSFC)
இறக்கத்துக்கான டைவர்ஜென்ஸ் ஆஸிலேட்டர் உருவாகி இருப்பதால் இந்தப் பங்கின் விலை குறுகிய காலத்தில் குறையக்கூடும். இந்தப் பங்கை 260 ரூபாய் என்கிற அளவில் வாங்கினால் கூடுதல் லாபம் கிடைக்கும். ஓரிரு மாதங்களில் பங்கின் விலை 325 ரூபாய்க்கு உயரும் வாய்ப்பு இருக்கிறது.
சந்தைவிலை : ரூ.288.05
இ.பி.எஸ்.* : ரூ.42.22
விலை/புத்தக மதிப்பு : 1.05
பி.இ. விகிதம் : 6.79
டிவிடெண்ட் யீல்டு % : 1.57
52 வார அதிகம்/குறைவு : ரூ.328.70/134.00
மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் : ரூ.2284.87 கோடி.
ஆயில் ரிஃபைனிங் பங்குகளை அங்கமாக கொண்ட ஆயில் ரிஃபைனிங் இண்டெக்ஸ்-ன் வார சார்ட் பின்னால் தரப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஃபெர்டிலைசர் இண்டெக்ஸ் போல்தான். ஆயில் ரிஃபைனிங் இண்டெக்ஸ் பெரிய அளவில் கரெக்ஷனை சந்தித்து (B) அதிகரித்துள்ளது. புத்தான் ஆயில் ரிஃபைனிங் இண்டெக்ஸ் 2009 மார்ச்சில் 1038 புள்ளிகளில் இருந்து, 2009 ஜூன் மாதத்தில் 2842 புள்ளிகளாக அதிகரித்து முதல் ஏற்றத்தை முடித்தது. இந்த அதிகரிப்பு மிகவும் வேகமானது.
அதனால் டெக்னிக்கலாக பார்க்கும் போது, இந்த புள்ளிகளே நீண்ட நாள்களுக்கு நிலைத்திருக்கும் அல்லது அதிக கரெக்ஷன் இருக்கும். இரட்டை இணை கரெக்டிவ் பேட்டர்ன் உருவாகி இருப்பதால் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் 14 மாதங்களாக அதே நிலையிலேயே நீடித்து வருகிறது. இங்கே இந்த இண்டெக்ஸ் ஃபிளாட் பேட்டர்னாக முதலில் உருவாகி இருந்தது. தற்போது முக்கோண பேட்டர்ன் உருவாகி இருக்கிறது. இதில், வழக்கமாக a, b, c, d, e என்ற ஐந்து ஏற்ற இறக்க நிலைகள் குறிக்கப்பட்டி ருக்கிறது. இந்த பேட்டர்ன் நிறைவுபெறும் போது நிலைமை மாறும்.
கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி நிலவரப்படி இந்த இண்டெக்ஸ் புள்ளிகள் 2397-ஆக இருக்கிறது. சுமார் ஒரு மாத காலத்தில் குறுகிய அளவில் இந்த பேட்டர்ன் நிறைவு பெற வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும்போது, 4-5 மாதங்களில் குறைந்தபட்ச இலக்கு 2820 புள்ளிகளாகவும், அதிகபட்சமாக 3260 புள்ளிகள் வரை செல்லக்கூடும். மிக அதிகமாக 14 மாதங்கள் நிலை பெற்றிருந்ததால், விரைவில் ஏற்றம் இருக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் ஆயில் ரிஃபைனிங்க் பங்குகளை கரெக்ஷனைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் முதலீடு செய்து வாருங்கள்..!
எம்.ஆர்.பி.எல்.
(MRPL)
இந்நிறுவனப் பங்கின் விலை தற்போது கரெக்ஷனில் 75 ரூபாய்க்கு வர்த்தகமாகும்போது வாங்கலாம். அடுத்த 2-3 மாதங்களில் 105 ரூபாயைத் தாண்டக்கூடும்.
சந்தைவிலை : ரூ.76.55
இ.பி.எஸ்.* : ரூ.4.11
விலை/புத்தக மதிப்பு : 2.40
பி.இ. விகிதம் : 18.60
டிவிடெண்ட் யீல்டு % : 1.57
52 வார அதிகம்/குறைவு : ரூ.93.70/64.35
மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் : ரூ.13398.62 கோடி

சென்னை பெட்ரோலியம்
(CHENNPETRO)
தற்போது சுமார் 251 ரூபாய் என்கிற நிலையில் வர்த்தகமாகும் இந்நிறுவனத்தின் பங்கு குறுகிய கால முதலீட்டுக்குச் சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. பங்கின் விலை அடுத்த சில மாதங்களில் 350 ரூபாய்க்கு அதிகரிக்கும்.
சந்தைவிலை : ரூ.250.25
இ.பி.எஸ்.* : ரூ.16.33
விலை/புத்தக மதிப்பு : 1.08
பி.இ விகிதம் : 15.35
டிவிடெண்ட் யீல்டு % : 4.79
52 வார அதிகம்/குறைவு : ரூ.299.00/188.00
மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் : ரூ.3733.21 கோடி..
நிஃப்டியை தாண்டிய பேங்க்கெக்ஸ் வருமானம்!
வங்கிப் பங்குகளின் இண்டெக்ஸ் (Bankex), இதர இண்டெக்ஸ்களைவிட சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நிஃப்டி அதன் 2008-ம் ஆண்டின் உச்சத்தைவிட கீழே வர்த்தகமாகி வரும் நிலையில் பேங்க்கெக்ஸ் அதன் 2008-ம் ஆண்டின் உச்சத்தைத் தாண்டி இருக்கிறது. இப்போது 11043 புள்ளிகள் நிலையில் உள்ள பேங்க்கெக்ஸ் மார்ச் 2009 குறைவிலிருந்து அக்டோபரில் 9630 புள்ளிகளாக உயர்ந்திருந்தது. 11545, 11840, 12125 ஆகிய நிலைகளில் அதிக ரெஸிஸ்டென்ஸ் இருக்கும். 10490 புள்ளிகளுக்குக் கீழே போனால் 9500க்கு குறைய வாய்ப்பு அதிகமாக உள்ளது. குறுகிய காலத்தில் வங்கிப் பங்குகளில் நல்ல கரெக்ஷனும் அதிக ஏற்ற இறக்கமும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
இந்த இண்டெக்ஸின் வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது நிஃப்டி குறியீட்டைப் போல பெரிய அளவில் அதிகரித்து வரும் அலை (B).இந்த குறியீட்டின் வாராந்திர சார்ட்டின் எலியெட் வேவ்-ன் நகர்வுகள் வெளிப்படுகிறது. இது A நிலை ஆகும்.
இந்த இண்டெக்ஸ் சப்-வேவ் நிலையில் முக்கோண பேட்டர்னை உருவாக்கி இருந்தது. இது அண்மையில் உடைபட்டுள்ளது. இந்த இண்டெக்ஸ் தற்போது 2021 என்கிற நிலையில் இருக்கிறது. இது குறைந்தபட்சம் 2340 புள்ளிகளுக்கும், அதன்பிறகு 2800 புள்ளிகளுக்கும் மேலேறும் வாய்ப்பு இருக்கிறது. இது தற்போதைய நிலையிலிருந்து சுமார் 16% மற்றும் 39% அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. தலைநகர் டெல்லியில் கூடிய விரைவில் நடக்க இருக்கிற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் சுற்றுலா மற்றும் ஹோட்டல் வணிகத்தை மேம்படுத்தும். அதனால், ஹோட்டல் துறை பங்குகள் கணிசமாக விலை ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இ.ஐ.ஹெச் லிமிடெட்
(EIHOTEL)
இந்தப் பங்கை 175 ரூபாயை இலக்கு விலையாகக் கொண்டு முதலீடு செய்யலாம்.
சந்தைவிலை : ரூ.135.35
இ.பி.எஸ்.* : ரூ.0.57
விலை/புத்தக மதிப்பு : 3.75
பி.இ. விகிதம் : 237.19
டிவிடெண்ட் யீல்டு % : 0.89
52 வார அதிகம்/குறைவு : ரூ.154.90/111.00
மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் : ரூ.5312.74 கோடி

ஆசியன் ஹோட்டல்ஸ் (நார்த்)
(ASIANHOTNR)
இந்நிறுவனப் பங்கின் விலை நடுத்தரக் காலத்தில் நிலைப் பெற்றிருக்கிறது. இந்தப் பங்கை சுமார் 415 ரூபாய்க்கு வாங்குவது லாபகரமாக இருக்கும். 2-3 மாதங்களில் 550 ரூபாயைத் தொட வாய்ப்பிருக்கிறது.
சந்தைவிலை : ரூ.415.70
விலை/புத்தக மதிப்பு : 0.74 டிவிடெண்ட் யீல்டு % : 0.24
52 வார அதிகம்/குறைவு : ரூ. 585.00/308.00
மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் : ரூ.475.45 கோடி
இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி
(INDHOTEL)
இந்நிறுவனப் பங்கின் விலை தற்போது 107 ரூபாய் என்கிற கவர்ச்சிகரமான நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இதன் விலை ஓரிரு மாதங்களில் 130 ரூபாய்க்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சந்தைவிலை : ரூ.101.45
இ.பி.எஸ்.* : ரூ.1.93
விலை/புத்தக மதிப்பு : 2.73
பி.இ. விகிதம் : 52.64
டிவிடெண்ட் யீல்டு % : 0.98
52 வார அதிகம்/குறைவு : ரூ.118.00/ 62.00
மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் : ரூ.7350.48 கோடி
- தொகுப்பு: சி.சரவணன்,
படம்: எம்.விஜயகுமார்.
*கடந்த 12 மாதங்களில்.
பங்கு நிலவரம் ஆக. 27 நிலவரப்படி
|