|
தற்போதைய நிலையில் இந்த இரண்டில் எது பெஸ்ட்? முதலீட்டாளர்கள் எதைத் தேர்வு செய்வது லாபகரமானதாக இருக்கும்? என சென்னையை சேர்ந்த நிதி ஆலோசகர் சங்கரிடம் கேட்டோம்.
''ஃபிக்ஸட் டெபாசிட்டில் ரிஸ்க் என்பது சுத்தமாக இல்லவே இல்லை. இதில் பல்வேறு முதலீட்டுக் காலம் இருக்கிறது. ஐந்தாண்டு முதலீட்டுக்கு வரிச்சலுகை உண்டு. இந்த முதலீட்டில் உள்ள நெகட்டிவ் விஷயம், எளிதில் பணமாக்கக்கூடிய வசதி இதில் இல்லை என்பதுதான். அவசரத் தேவைக்காக பணத்தை எடுத்தால் வட்டி வருமானம் குறையும். கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டும் ரிஸ்க் குறைவான திட்டம்தான். ஆனால், எளிதில் பணமாக்கக்கூடிய சௌகரியம் இதில் உண்டு.
கடன் ஃபண்டுகள் முதலீடு செய்துள்ள முதலீட்டு ஆவணங்களின் வருமானம் அதிகமாக இருக்கும் போது இந்த ஃபண்டுகள் நல்ல வருமானத்தைத் தரும். பொதுவாக, வட்டி விகிதம் அதிகரிக்கும் போது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் என்.ஏ.வி. குறையும். வட்டி விகிதம் குறையும் போது என்.ஏ.வி. அதிகரிக்கும். கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் குறைவான வருமானம் அளிக்கும் பத்திரங்களில்தான் ஏற்கெனவே முதலீடு செய்திருப்பார்கள். வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாலும் குறைவான வருமான ஆவணங்களில் ஏற்கெனவே முதலீடு செய்யப் பட்டிருப்பதாலும் அந்த ஆவணங்கள் குறைவான விலைக்கு வர்த்தகமாகும். இதனால் என்.ஏ.வி. குறையும். இந்தப் பாதிப்பு குறுகிய கால ஃபண்டுகளில் குறைவாகவும், நடுத்தர மற்றும் நீண்ட கால ஃபண்டுகளில் கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும். இந்த நிலையில் ஓரளவுக்கு நல்ல வருமானம் பெற குறுகிய கால ஃபண்டான லிக்விட் ஃபண்டுகளைத் தேர்வு செய்வது நல்லது.
பணவீக்க விகிதம் அதிகரிப்பதால் ரிசர்வ் வங்கி மேலும் வட்டி விகிதங்களை உயர்த்த வாய்ப்புள்ளது. ஆர்.பி.ஐ. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முக்கிய வட்டி விகிதங்களில் 0.75% வரை உயர்த்தி இருக்கிறது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பும் பலமாக இருக்கிறது. இதனால் ஃபிக்ஸட் டெபாசிட் நல்ல லாபத்தைக் கொடுக்க வாய்ப்புண்டு. தவிர, பண்டிகை கால கடன்களுக்கான தேவை இப்போது அதிகரித்து வருகிறது. இந்த கடன்களைக் கொடுக்க வங்கிகளுக்கு நிதி தேவைப்படுவதால் அவை டெபாசிட்டுக்கு அதிக வட்டி கொடுக்க முன் வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானம் ஃபிக்ஸட் டெபாசிட்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிடக் குறைவாகவே இருக்கும்.

Warning: include(/advtcodes/nanayaminn_mag_high.js) [ function.include]: failed to open stream: No such file or directory in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0601.php on line 104
Warning: include() [ function.include]: Failed opening '/advtcodes/nanayaminn_mag_high.js' for inclusion (include_path='.:/usr/share/pear') in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0601.php on line 104
|
இந்த வட்டி உயர்வால் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானம் பாதிப்படையவே செய்யும். எனவே வட்டி கொஞ்சம் குறையும் வரை கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விட்டு கொஞ்சம் ஒதுங்கி இருப்பது நல்லது. ஆனால் கையில் உள்ள பணத்தை சும்மா வைத்திருக்காமல் முதலீடு செய்ய நினைப்பவர்கள் குறுகியகால லிக்விட் ஃபண்டுகள் அல்லது மிகக் குறுகிய முதிர்வு காலம் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யலாம். நடுத்தரக் கால மற்றும் நீண்ட கால முதலீட்டு நோக்கில் செய்ய நினைப்பவர்கள், சற்று காத்திருந்து டெபாசிட்டுக்கான வட்டி இன்னும் கொஞ்சம் உயர்ந்த பிறகு அதில் முதலீடு செய்வதே லாபகரமாக இருக்கும்'' என்றார்.
ஆக்கப் பொறுத்தவர்கள், ஆறப் பொறுக்கலாமே?
கடன் ஃபண்டுகள் - பல விதம்!
கடன் சார்ந்த ஃபண்டுகளில் பல வகை உள்ளன. கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் திரட்டப்படும் நிதி, அரசு, நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் வெளியிடும் பல கடன் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், கில்ட் ஃபண்டுகள் (குறுகிய, நடுத்தர, மற்றும் நீண்ட காலம்), இன்கம் ஃபண்டுகள், குறுகிய கால ஃபண்டுகள் மற்றும் அல்ட்ரா சார்ட் டேர்ம் ஃபண்டுகள் என பல பிரிவாக உள்ளன. கில்ட் ஃபண்டுகளில் நிதி, அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இன்கம் ஃபண்டுகளில் அரசு மற்றும் கார்ப்பரேட் பாண்ட்கள் மற்றும் இதர கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.
அல்ட்ரா சார்ட் டேர்ம் ஃபண்டில் 3 முதல் 6 மாதங்கள் வரையிலான முதிர்வு கொண்ட சார்ட் டேர்ம் பேப்பர்களான சர்டிஃபிகேட் ஆஃப் டெபாசிட், கமர்ஷியல் பேப்பர்களில் முதலீடு செய்யப்படுகிறது.
அடுத்து, லிக்விட் ஃபண்ட் அல்லது நிதிச் சந்தைத் திட்டங்கள் என ஒன்று மியூச்சுவல் ஃபண்டில் உள்ளது. இது எளிதில் பணமாக்கக்கூடிய, மூலதனத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் ஃபண்டுகளாகும். இந்தத் திட்டத்தில் ஒரு நாள் முதல் மூன்று மாதங்கள் வரை முதிர்வு காலம் கொண்ட கருவூல ரசீதுகள், கமர்ஷியல் பேப்பர்கள், கமர்ஷியல் டெபாசிட்கள் போன்ற ஆவணங்களில் முதலீடு செய்யப்படுகிறது. முதலீடு செய்யப்பட்டுள்ள கருவிகள் கொடுக்கும் வருமானத்துடன் அடிப்படையில் இதன் என்.ஏ.வி. கணக்கிடப்படுகிறது. |
|