செப்டம்பர் 15, 2010

Warning: include() [function.include]: Filename cannot be empty in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0705.php on line 31

Warning: include() [function.include]: Failed opening '' for inclusion (include_path='.:/usr/share/pear') in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0705.php on line 31
   
தொடர்கள்
''வருமானத்தைத் தாண்டி செலவழிச்சா கஷ்டம்தான்!''

''வாழ்க்கைக்கு பணம் முக்கியம்தான். அதே நேரத்தில் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. இதை புரிஞ்சுகிட்டாலே நம்மோட பாதிப் பிரச்னைகளுக்கு முடிவு கண்டுடலாம். நான் ஒரு விஷயத்தைச் செய்றதுக்கு முன்னாடி இதை கண்டிப்பா செய்யணுமா..? இதை செய்றதால என்ன நன்மைன்னு அல்லது தீமைன்னு ஒண்ணுக்கு பத்து முறை யோசிப்பேன். பண விஷயத்திலும் அந்த பாலிசியை அச்சுபிசகாம கடைப்பிடிக்கிறேன்'' - ஒரு எம்.எல்.ஏ-வுக்கான எந்த தோரணையும் இல்லாமல் சாதாரணமான ஒரு குடும்பத்துப் பெண்ணாகப் பேசுகிறார் திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வி. பாலபாரதி. சமூகசேவையில் மிகுந்த நாட்டம் கொண்டவரான இந்த அரசியல்வாதி, நிதி நிர்வாகம் தொடர்பான தன் கருத்துக்களை நமக்காகப் பகிர்ந்துகொண்டார்.

Warning: include(/advtcodes/nanayaminn_mag_high.js) [function.include]: failed to open stream: No such file or directory in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0705.php on line 99

Warning: include() [function.include]: Failed opening '/advtcodes/nanayaminn_mag_high.js' for inclusion (include_path='.:/usr/share/pear') in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0705.php on line 99

''நான் கிராமத்துல விவசாய குடும்பத்துல பிறந்ததால, பணத்தை சுலபமா செலவு செய்ய மனசு வராது. சின்ன வயசிலிருந்தே பொங்கலுக்கோ, தீபாவளிக்கோதான் புதுச்சட்டை என்று பழக்கமாகிவிட்டதால் இப்போதுகூட அடிக்கடி விதவிதமான உடுப்புகள் எடுப்பது கிடையாது. என்னுடைய எம்.எல்.ஏ. பதவிக்கான அரசாங்கம் கொடுக்கும் சம்பளத்தை நான் அங்கம் வகிக்கும் கட்சிக்குக் கொடுத்துவிடுகிறேன். கட்சி கொடுக்கும் 4,500 ரூபாய் பணத்தை மட்டுமே கொண்டு என் வாழ்க்கையை ஓட்டி வருகிறேன். அந்த 4,500 ரூபாய்தான் என் வருமானம். அதுல மாசம் 1,000 ரூபாயை போஸ்ட் ஆபீஸ்ல சேமிக்கிறேன். மீதிப் பணத்தை எங்க அண்ணன்கிட்ட கொடுத்திடுவேன். அண்ணனும், அண்ணியும் சத்துணவு அமைப்பாளரா வேலை பாக்குறாங்க.

எங்களுக்கென விவசாய நிலம் கொஞ்சம் இருந்தாலும், அதுல சொல்லிக்கிற மாதிரி வருமானம் கிடைக்காது. என் சம்பளம், அண்ணன், அண்ணி சம்பளம், அண்ணனுக்கு எல்.ஐ.சி. ஏஜெண்ட் தொழில்லேயிருந்து வர்ற கமிஷன் எல்லாம் சேர்த்துத்தான் எங்க குடும்ப வருமானம். இந்த பணத்துலயே, மளிகைச் சாமான், பசங்க படிப்புச் செலவு, கரண்ட் பில், போன், நெட், பெட்ரோல்னு நாங்க அடக்கிடுவோம்.

ஒரு பொருளை வாங்கணும்னு நினைச்சா, அது நமக்கு அவசியம் தேவையா..? அல்லது ஆடம்பர தேவைக்கான்னு யோசிப்பேன். அப்படி யோசிக்கிறப்ப பெரும்பாலான பொருட்கள் எனக்கு ஆடம்பரமாகத்தான் தோணும். அதுனால அதை வாங்குறதை தவிர்த்திடுவேன். கையில் இருக்கும் பணமோ கொஞ்சம்தான். சிக்கனமாகத்தான் அதைச் செலவழிக்க வேண்டிய கட்டாயம். ஆக, அது வேணாம், இது வேணாம்ன்னு பல பொருட்களை வாங்காததாலேயே இன்றைக்கு எங்க வீட்டுல தேவையில்லாத பொருள்னு எதுவுமே இல்லை. பயன்படாத பொருட்களுக்கு பணத்தைச் செலவழிக்கிறதை குறைச்சிக்கிட்டாலே பட்ஜெட்ல பள்ளம் விழாது. இப்ப நாங்க இருக்குற வீடு வங்கியில கடன் வாங்கிக் கட்டுனதுதான். அதுக்கான தவணையும் மேற்படி வருமானத்துலதான் கட்டுறோம். பசங்க படிப்புச் செலவு, எதிர்பாராம வர்ற மருத்துவச் செலவுன்னு சில நேரங்கள்ல பட்ஜெட் படிதாண்டிப் போகும். அப்ப, கொஞ்சம் கடனை வாங்கித்தான் சமாளிப்போம். மற்றபடி கடன்னாலே எங்களுக்கு அலர்ஜி. தனிப்பட்ட நபர்கள் யார்கிட்டேயும் ஒரு பைசா கடன் பாக்கி வச்சிருக்கக்கூடாதுங்கிறது என் பாலிசி.

எனக்குத் தெரிஞ்சு பல குடும்பங்கள்ல உடைக்காக அதிகமா செலவு செய்றாங்க. நான் எப்பவும் கைத்தறி சேலைதான் உடுத்துவேன். எங்க குடும்பத்தில தீபாவளி, பொங்கல், திருவிழா போன்ற விசேஷ நாட்கள்ல மட்டும்தான் உடைக்காகச் செலவு செய்வோம். அப்பவும் ஆடம்பரமான துணிகளை அதிக விலை கொடுத்து வாங்க மாட்டோம். கட்டுபடியான விலையில தரமான துணிகளை மட்டும் வாங்கிப் பயன்படுத்துவோம். வாழ்க்கைக்கு அத்தியாவசியமா தேவைப்படுறது உணவு, உடை, உறைவிடம் இந்த மூணும்தான். ஆனா, இதைத் தவிர, வேற எந்த செலவு செய்றதா இருந்தாலும் ஆயிரம் தடவை யோசிச்சிட்டுத்தான் செய்வோம்.

எப்படியும் சம்பாதிக்கலாம் என்கிறது ஒரு வகை. இப்படித்தான் சம்பாதிக்கணும் என எனக்கு நானே சில வரைமுறை வகுத்துக்கிட்டு, அதுபடி வாழ்ந்து வர்றேன். 'அரசியல்வாதிங்க எப்படி எல்லாமோ சம்பாதிக்கிறாங்க. நீங்க உங்களுக்கும் பணத்தை எடுத்துக்க மாட்டேன்கிறீங்க. மத்தவங்களையும் சுருட்ட விடமாட்டேன்கிறீங்க' என்று என்னிடம் சிலர் புலம்புவார்கள். மக்கள் பணத்தை ஒரு பைசாகூட யார் எடுத்தாலும் அது தவறு என்று நினைப்பவள் நான். இன்னும் சிலர் எங்கிட்ட வந்து, இவ்வளவு குறைவான வருமானத்துல எப்படி வாழ்க்கையை ஓட்டுறீங்க?ன்னு கேப்பாங்க.

என்னைப் பொறுத்தவரை எனக்கு இப்ப கிடைக்கிற 4500 ரூபாயே அதிகம்தான். வெறும் ஆயிரம் ரூபாய் வருமானத்துலகூட நாங்க குடும்பத்தை ஓட்டி இருக்கோம். எனக்குத் தெரிஞ்சு இப்பவும் மாசம் ஆயிரம் ரூபா சம்பளத்துல வாழ்க்கை ஓட்டுற பல குடும்பங்களை நான் தினமும் பாக்குறேன். அவங்கள்ல பல பேரு, பழைய சோற்றை சாப்பிட்டாலும் சந்தோஷமா இருக்காங்க. இன்னும் சிலர் வருமானம் இல்லைன்னாலும் அது வேணும், இது வேணுமுன்னு ஆசைப்பட்டு, கடனை வாங்கி கஷ்டப்படுறாங்க. ஆசை, தேவை இந்த இரண்டுக்குமான போராட்டம்தான் ஒரு குடும்பத்தின் பட்ஜெட்டைத் தீர்மானிக்குது. ஆசைகளை ரெண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டு, தேவைக்கு முதல் மரியாதை செஞ்சா கடன் என்கிற பிரச்னையே இருக்காது.

முதலீடு விஷயத்துல இதுவரைக்கும் பெருசா நான் கவனம் செலுத்துனதில்லை. வருமானம் குறைவு என்கிறதால எதிர்பார்ப்புகளும் குறைவே. என்னைப் பொறுத்தவரை, வருமானத்துக்குள்ள இருக்குறவரைக்கும்தான் வாழ்க்கை வசந்தமா இருக்கும். வருமானத்தைத் தாண்டி செலவு செய்றப்பதான் கடன், கஷ்டம்னு வம்பு வருது.''

- செய்தி, படம்: ஆர்.குமரேசன்.  
 
                            
  <<<Back    ^Top  

Warning: include(/vc/tkaruthu/aug10_karuthu.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0705.php on line 148

Warning: include() [function.include]: Failed opening '/vc/tkaruthu/aug10_karuthu.php' for inclusion (include_path='.:/usr/share/pear') in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0705.php on line 148
Advertisement Tariff   Contact Us   Site map

Warning: include(/advtcodes/nanayaminn_pubnews.js) [function.include]: failed to open stream: No such file or directory in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0705.php on line 203

Warning: include() [function.include]: Failed opening '/advtcodes/nanayaminn_pubnews.js' for inclusion (include_path='.:/usr/share/pear') in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0705.php on line 203

Warning: include(/registerpopup/attach_code.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0705.php on line 209

Warning: include() [function.include]: Failed opening '/registerpopup/attach_code.php' for inclusion (include_path='.:/usr/share/pear') in /home/vikatan/www/vikatansite/www.vikatan.com/nanayam/2010/sep/15092010/nv0705.php on line 209