Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனல் பறந்த கருத்தரங்கம்!

இன்ஷூரன்ஸ் மற்றும் வங்கித் துறையைப் பற்றிய கருத்தரங்கு கடந்த வாரம் லயோலா கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் நடத்தப்பட்டது. இந்த இரண்டு நாட்களில் வங்கி மற்றும் இன்ஷூரன்ஸ் பற்றி அனல் பறக்கும் விவாதம் நடந்தது.

ந்த கருத்தரங்கின் தொடக்க உரையை ரிசர்வ் வங்கியின் முதன்மை பொது மேலாளர் வசந்தன் பேசினார். வங்கித் துறையில் ரிசர்வ் வங்கியின் பங்கினை பற்றி பேசினார்.

இந்த கருத்தரங்கில் பேசிய பங்குச் சந்தை நிபுணர் நாகப்பன், ''நம் பங்குச் சந்தை எஃப்.ஐ.ஐ.களை அதிகம் நம்பி இருக்கிறது. இதனால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை போக்க வங்கிகள் முன்வர வேண்டும்'' என்றார். மியூச்சுவல் ஃபண்ட் நிபுணரான சொக்கலிங்கம் பழனியப்பன், இந்தியாவில் வங்கிகளின் வரலாற்றைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியது வித்தியாசமாக இருந்தது. ''மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது இந்திய வங்கித் துறை சிறப்பாகவே இருக்கிறது. ஆனாலும், இந்தியாவில் கறுப்புப் பணம் அதிகமாக இருக்கிறது எனில் எங்கேயோ தவறு நடக்கிறது என்றுதான் அர்த்தம்'' என்றார்.

வங்கி மற்றும் இன்ஷூரன்ஸ் துறையைச் சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை இந்த கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டார்கள். மாணவர்கள் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது. கல்லூரி என்றாலே ஜாலி, கலாட்டா என்றில்லாமல் அறிவுக்கு பட்டை தீட்டுவதாக அமைந்திருந்தது இந்த கருத்தரங்கம்.

-வா.கா.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
கறுப்பு பணம் 75 லட்சம் கோடி!
ஃபேஸ்புக் ஐ.பி.ஓ. உதயமாகும் புதிய கோடீஸ்வரர்கள்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close