பங்குகள்: ரூ.2,000 கோடி மதிப்புள்ள் இன்ஃபோசிஸ் பங்குகளை எல்.ஐ.சி. வாங்கியது...!

சாஃப்ட்வேர் சேவை ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதே நேரத்தில், லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி., இந்நிறுவனத்தின் பங்குகளில் ஆச்சரியப்படும் விதமாக அதிக முதலீட்டை மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
எல்.ஐ.சி. கடந்த 2002 ப் ம் ஆண்டில் முதல் முறையாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்தது. அப்போது, எல்.ஐ.சி.யின் பங்கு மூலதனம் 2% ஆக இருந்தது. அதன் பிறகு பங்கு முதலீட்டை அதிகரித்து வருகிறது.
ஜூன் காலாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் எஃப்.ஐ.ஐக்கள் (அந்நிய நிதி நிறுவனங்கள்) முதலீடு குறைந்துள்ள நிலையில், எல்.ஐ.சி.யின் பங்கு மூலதனம் உயர்ந்திருக்கிறது. ஜூன் காலாண்டில் எஃப்.ஐ.ஐக்கள் ரூ.1,500 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்தன. இதனையடுத்து, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அவற்றின் முதலீடு 39-லிருந்து 38% ஆக குறைந்துள்ளது.








COMMENT(S):