
எஸ்.ஜ.பி. முறையில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. மேலும், எஸ்.ஐ.பி. முறையில் செய்த முதலீட்டை மொத்தமாக திரும்ப எடுப்பதும் அதிகமாகி வருகிறது.
கடந்த ஜூலை மாதம் ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் வெறும் 28,000 பேர்தான் எஸ்.ஐ.பி. திட்டத்தில் புதிதாக முதலீட்டை ஆரம்பித்தார்கள். இது கடந்த ஓராண்டு காலத்திலேயே மிகக் குறைவு. இதற்கு நேர்மாறாக வெளியேறுபவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூலையில் மட்டும் 73,000 பேர் எஸ்.ஐ.பி. முதலீட்டை திரும்ப எடுத்துள்ளனர்.
ஒரே நேரத்தில் பலரும் எஸ்.ஐ.பி.யை நிறுத்த என்ன காரணம், இப்படி செய்வது சரியா என வேல்யூ இன்வெஸ்ட் நிறுவனத்தின் இயக்குநர் டி.ஆர்.வெங்கடேஷிடம் கேட்டோம்.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் வருமானம் என்பது சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றவாறு இருக்கும். சந்தை இறங்கினால் ஃபண்டின் என்.ஏ.வி. மதிப்பும் குறையும். அந்த ரிஸ்க் இதில் இருக்கவே செய்கிறது. ஆனால், சந்தை ஏறினால் அதே அளவு லாபமும் கிடைக்கும் என்பது உண்மை. நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து வைக்க நினைப்பவர்களுக்கு மட்டுமே ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏற்றது. 10 முதல் 15 வருடங்கள் வரை காத்திருந்தால் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
எஸ்.ஐ.பி. தொடங்கும்முன் சில விஷயங்களை கட்டாயம் கவனிக்க வேண்டும். ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நடத்தும் ஃபண்டின் வளர்ச்சி எப்படி உள்ளது? ஃபண்ட் மேனேஜ்மென்ட் குழு எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
சந்தை இறக்கத்தில்தான் யூனிட் மதிப்பு குறைவாக இருக்கும் என்பதால் அப்போது முதலீடு செய்வது சரியாக இருக்கும். சந்தை ஏறும்போது முதலீடு செய்யலாம் என காத்திருந்தால் அதிக மதிப்பில் முதலீடு செய்ய வேண்டிவரும். அப்போது லாபம் என்பது குறைவாக இருக்கும்.

எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்பவர்கள் ஈக்விட்டி ஃபண்டுகளையே தேர்வு செய்யவேண்டும் என்கிற அவசியமில்லை. அதிகம் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடாகும் பணம் 50 சதவிகிதம் பங்குச் சந்தை, 50 சதவிகிதம் கடன் சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யப்படும். இதனால் நமக்கு ஏற்படும் இழப்பு பாதியாகக் குறையும். பாதி இழப்புகூட வேண்டாம் என நினைக்கிறவர்கள் முழு முதலீட்டையும் கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். உங்களுடைய அவசரகால நிதித் தேவைக்கு என கடன் ஃபண்ட் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் சுமார் 9 சதவிகிதம் வரை வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த திட்டங்களில் பங்குச் சந்தை பாதிப்பு இருக்காது. ஈக்விட்டி ஃபண்டுகளில் ஒரு வருடத்திற்குள் வெளியேறினால் வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், கடன் சார்ந்த திட்டங்களில் வெளியேறு கட்டணம் முதல் மூன்று மாதங்கள் வரைதான்'' என்றவர், ''சந்தை சரியத் தொடங்கியவுடன் எஸ்.ஐ.பி.யை நிறுத்தக்கூடாது. பலரும் ஒரே நேரத்தில் எஸ்.ஐ.பி.-யை நிறுத்தும்போது மற்றும் யூனிட்களை விற்கத் தொடங்கும்போது சந்தை மேலும் சரியவே செய்யும்'' என்கிற எச்சரிக்கையோடு முடித்தார் வெங்கடேஷ்.
இனியும் என்ன தயக்கம், நமக்கேற்ற எஸ்.ஐ.பி.யை ஆரம்பிக்க வேண்டியதுதானே..!
- இரா.ரூபாவதி.








COMMENT(S): 7
"10 முதல் 15 வருடங்கள் வரை காத்திருந்தால் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது" - வாய்ப்பு இருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள்.
வாய்ப்பு இருக்கோ இல்லையோ, 5% மேனெஜ்மென்ட் ஃஃபீ ஸ்வாகாதான்.
சிம்பன்ஸி ( குரங்கு) ஃபன்ட் மேனேஜரவிட நல்லாவே இன்வெஸ்ட்பண்ணும் என்று ஒருவர் சொன்னது நினைவிற்கு வருகிறது.
muscat v subbaiya
never believe agent
never allows friend or thickest friend or relation as agent
in your portfolio
agents are enjoying b ut
ultimate investor are loosing money in all the ways
examply lic ulic or any other mf (mutual fund)
better fd in nationalised bank
'ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் போட்ட பணத்தைத் திரும்ப எடுப்பதற்கான காரணம், தவறான புரிதல்தான்.".............இல்லவே இல்லை.சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நான் 'நாணயம் விகடனில்' எஸ்.ஐ.பி.மற்றும் ம்யூட்சுவல் ஃபண்டுகள் பற்றி எழுதிய கருத்துக்கள் வீண் போகவில்லை என்று அறிந்து மகிழ்கிறேன்.'விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.இன்னும் இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்தோரெல்லாம் கோட்டை விட்டார்' என்று பாடத் தோன்றுகிறது.சாதாரண நிரந்தர வைப்பில் கிடைக்கும் வட்டி வருமானத்தை விட இந்த நிதிகளில் மிகக்குறைவாகவே லாபம் வருகிறது என்பதே நிதர்சனமான் உண்மை.
"10 முதல் 15 வருடங்கள் வரை காத்திருந்தால் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது." ......ரொம்ப கரெக்ட்.உங்கள் பணம் பறி போக நல்ல வழி.இந்த நிறுவனங்களின் அட்ரஸ் கூட பத்து ஆண்டுகளுக்கப்புறம் இருக்காது.
பலரும் ஒரே நேரத்தில் எஸ்.ஐ.பி.-யை நிறுத்தும்போது மற்றும் யூனிட்களை விற்கத் தொடங்கும்போது சந்தை மேலும் சரியவே செய்யும்'' --- இந்த கருத்து ஏற்கத்த்க்கதல்ல . இந்த எஸ்.ஐ.பி முதலீடு, மத்தியதரவர்க்கத்தின் பங்களிப்பால் பங்குச் சந்தயில் எந்த மாற்றமும் வரவே வராது.
எஸ்.ஐ.பி. தொடங்கும்முன் சில விஷயங்களை கட்டாயம் கவனிக்க வேண்டும். ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நடத்தும் ஃபண்டின் வளர்ச்சி எப்படி உள்ளது? ஃபண்ட் மேனேஜ்மென்ட் குழு எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார். மெத்தப் படித்தவர்களுக்கே இது கடினமான வேலை என்னும் போது சாதாரண மக்கள் என்ன செய்வார்கள். ஆகவே அவர்கள் ஏஜன்டுகள் சொல்வதையே நம்ப வேண்டியுள்ளது. ஏஜண்டுகளுக்கு சரியைன பயிற்சி அளித்து அவர்கள் சரியாக செயல்படுகிறார்களா என்று கண்காளிக்க வேண்டும். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு நிறுவனம் முழு பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் ஒரு முதலீட்டாளரின் வருமானம் குடும்பச் சூழல் இவற்றை எல்லாம் அறிந்து எதில் முதலீடு செய்வது சிறந்தது என்பதை அவர் தான் பரிந்துரைக்கிறார். அது சரியாக செயல்படாத பட்சத்தில் அவரும் அவரது நிறுவனமும் தானே பொறுப்பேற்க வேண்டும். அதுவரை மியூச்சுவல் பண்டுகளை நம்பி எப்படி முதலீடு செய்வது. அதுவும் முதலுக்கே வேட்டு வைக்கும்போது.
முதலீடு செய்தால் முதலுக்கு மோசம் வராது என பல ஏஜென்டுகள் பொய்யான வாக்குறுதி தந்து முதலீட்டை தொடங்க ஆலோசனை தந்திருக்கிறார்கள். --- இதில் மட்டுமல்ல பெரும்பான்மையான ஏஜெண்டுகள் முதலீட்டாளர்களின் நலனைப் பார்க்காமல் தனக்கு எதில் அதிக கமிஷன் கிடைக்குமோ அந்த பாலிசி அல்லது ஃபண்டை முதலீட்டாளர்களின் தலையில் கட்டிவிடுவார்கள். இதைத் தடுக்கவோ அல்லது புகார் செய்யவோ ஏதாவது வழி இருக்கிறதா? ஏஜெண்டுகளின் தகவலை உண்மை என்று நம்பி முதலீடு செய்பவர்களே அதிகம்.